தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயம் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலில் உள்கட்சி அமைப்புத் தேர்தலில் புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விவரம் வருவாறு:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்- கோபகுமார்,
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் - சுரேஷ்,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்- சரவண கிருஷ்னாள்,
திருநெல்வேலி வடக்கு மாவட்டம் - முத்து பலவேசம்,
திருநெல்வேலி தெற்கு மாவட்டம்- தமிழ்செல்வன்,
தென்காசி மாவட்டம்- ஆனந்தன் அய்யாசாமி,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் -பாண்டுரங்கன்,
சிவகங்கை மாவட்டம் -பாண்டிதுரை,
மதுரை கிழக்கு மாவட்டம்- ராஜசிம்மன்,
மதுரை மேற்கு மாவட்டம்- சிவலிங்கம்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்- முத்துராமலிங்கம்,
தேனி மாவட்டம்- ராஜபாண்டி,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாவட்டம்- ஒண்டிமுத்து,
திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டம்- அஞ்சா நெஞ்சன்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்- ஜெகதீசன்,
கடலுார் கிழக்கு மாவட்டம்- கிருஷ்ணமூர்த்தி,
நீலகிரி மாவட்டம் - தர்மன்,
மயிலாடுதுறை மாவட்டம் - நாஞ்சில் பாலு,
அரியலுார் மாவட்டம் - டாக்டர் பரமேஸ்வரி,
காஞ்சிபுரம் மாவட்டம்- ஜெகதீசன்,
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் -டாக்டர் பிரவீன்குமார்,
கோயம்புத்தூர் தெற்கு மாவட்டம்- சந்திரசேகர்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்-சுந்தரம்,
திருப்பத்துார் மாவட்டம்- தண்டாயுதபாணி,
கடலுார் மேற்கு மாவட்டம் - தமிழழகன்,
நாமக்கல் மேற்கு மாவட்டம் - ராஜேஷ் குமார்,
நாமக்கல் கிழக்கு மாவட்டம் - சரவணன்,
சேலம் மாவட்டம்- சசிகுமார். எனக் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 20-ஆம் தேதி, மற்ற மாவட்டத் தலைவர்களின் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.புதிய மாவட்ட தலைவர்களில் தென்காசி மாவட்ட தலைவராக ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பரான ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உற்று நோக்கக் கூடியதாகும். மேலும் வேலூர் மாவட்டத்தில் புதிய தலைவராக தசரதன் நியமனம் செய்துள்ளதை எதிர்த்து சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் தமிழ்நாடு மாநில பாஜகவில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த வாரத்தில் தமிழக பாஜகவுக்கு மாநிலத் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு பதிலாக சட்ட மன்ற உறுப்பினர்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கமலாலய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. பின்னர், நவம்பர் மாதம், உள்கட்சி தேர்தல் துவங்கியது.
முதல் கட்டமாக, கிளை தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அடுத்து, மண்டலத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்டத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.
ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக, 33 மாவட்டத் தலைவர்கள் பட்டியல், நேற்று மதியம் 3:00 மணிக்கு வெளியானது.
ஜனவரி மாதம். 20 ஆம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதைத்தொடர்ந்து, மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் தற்போது நியமனம் செய்யப்பட்ட மாவட்டத் தலைவர்கள் எல்லாம் அமைப்புச் செயலாளராக உள்ள கேசவ விநாயகத்தின் ஆட்கள் தான் தற்போது .கே.டி. ராகவன் கை ஓங்குகிறது. நிதிஅமைச்சர் தேர்வு தான் அடுத்த மாநிலத்தின் தலைவர்.
கருத்துகள்