மின்சார இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.1,500 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது. சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி ஊரக மின்வாரிய உதவிப் பொறியாளர் சிவக்குமார் ரூபாய்.1,500 லஞ்சம் வாங்கிய போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளராக சிவக்குமார்
பணிபுரிகிறார். இவரிடம் மின் இணைப்பு பெயர் மாற்ற கோரியதற்கு, ரூபாய்.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இளையான்குடி வட்டம் பெருமச்சேரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இரமேஷ் வயது 35 என்பவரது வீட்டின் மின் இணைப்பு அவர் தந்தையின் பெயரில் இருநததனால் மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால்
அது தொடர்பாக இரமேஷ், உதவி மின் பொறியாளரான பரமக்குடி சிவக்குமார் வயது 51 என்பவரை அணுகியுள்ளார். மின் இணைப்பு பெயரை மாற்ற உதவி பொறியாளர் சிவக்குமார், ரூபாய்.1,500 லஞ்சமாக தர வேண்டும் எனக் தாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோவிடம் புகார் கொடுத்தார்
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக, சிவக்குமார். ரூபாய் 1500 லஞ்சம் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த சிவகங்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் கண்ணன் மற்றும் குழுவினர் லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் செய்தனர்.அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்