ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் பெற்ற பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தான செயற்பொறியாளர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அரசு ஒப்பந்ததாரரிடம் ரூபாய்.18 ஆயிரம் லஞ்சம் பெற்ற பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தான செயற்பொறியாளர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தேவஸ்தானம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ரூபாய்.71 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர் செந்தில்குமார்,
பணிகள் முடிந்ததால், அதற்கு ஒதுக்கீடு செய்த நிதியை (பில்) மூலம் விடுவிக்க, ஒப்புதல் தர அருள்மிகு ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தான கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை அணுகினார்.
அதற்காக, ரூபாய்.18 ஆயிரம் லஞ்சமாக பிரேம்குமார் கேட்டார். அது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செந்தில்குமார் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரையின்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.18 ஆயிரத்தை பிப்ரவரி மாதம்.21 ஆம் தேதி மாலை, பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தான
அலுவலகத்திலுள்ள பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் வைத்து செந்தில்குமார், பிரேம்குமாரிடம் கொடுத்த போது அங்கு
மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலானகுழுவினர்,
பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து சிறைக்கு அனுப்பினர்.
கருத்துகள்