அரசு உதவி பெறும் தனியார் நிர்வாகப் பள்ளி ஆசிரியரிடம் ரூபாய். 2 லட்சம் லஞ்சம் பெற்ற நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜான் சிபு மானிக் (வயது 40) 2018-ஆம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில்
தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.(இதில் ஒரு உண்மை தனியார் பள்ளி சில சமயங்களில் லஞ்சம் பெற்று நியமனம் செய்வது தான் தற்போது வாடிக்கை)பள்ளி நிர்வாகம் இவரைப் பணி நிரந்தரம் செய்யும் படி கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரைப் பணி நிரந்தரம் செய்ய மறுப்புத் தெரிவித்ததைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிரந்தரமாக பணி நிரந்தரத்திற்கான உத்தரவு ரிட் மனு தாக்கல் செய்து பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவைத் தொகையாக ரூபாய்.20 லட்சம் முதல் ரூபாய்.25 லட்சம் இவருக்கு வழங்க வேண்டிய பணம் உள்ள நிலையில்
ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகையை வழங்காமல் காலம் கடத்தியதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதைத்தொடர்ந்து
பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷை நேரில் அணுகிய போது
இவருக்குப் பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பணத்தை கொடுப்பதற்கு பிரதி பிரயோஜனமாக தனக்கு லஞ்சமாக ரூபாய்.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ரூபாய்.2 லட்சம் பணம் தரும் படி முடிவாக கேட்ட. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விரும்பாததால் அது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரை ஜான் சிபு மானிக் அணுகியதைத் தொடர்ந்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.2 லட்சத்தை ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரிப் பகுதியிலுள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர் சண்முகவடிவு, சார்பு ஆய்வாளர்கள் சாதனப் பிரியா, சக்தி, இரெங்கநாதன் ஆகியோர் அடங்கிய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்து சோடியம் கார்பனேட்டு கரைசல் பரிசோதனை நடத்திய நிலையில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் லஞ்சம் பெரும் பலரது மத்தியில் பயம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்