நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி ?என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பாலியல் பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்வந்த போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையிலிருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுபபினார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இரண்டு நாட்கள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008 ஆம் ஆண்டு மதுரையிலுள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்பப் பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார். விரிவான விபரம் வருமாறு:-சென்னை உயர்நீதிமன்றத்தில் CRL OP 21670/2023 சீமான் vs காவல் ஆய்வாளர் மற்றும் விஜயலட்சுமி. வழக்கில் வழக்கறிஞர் M/S எஸ்.சேவியர் ஃபெலிக்ஸ், எஸ்.சங்கர், எஸ்.ரூபன், எம்.அஹமத் ஃபாசில், ஜே.ரஞ்சித் குமார், டி.எஸ்.விக்னேஷ்வரன் ஆஜரான நிலையில்
பிரதிவாதி 1-க்கான அரசு பொது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் அதன் உள் இடைக்கால மனுவாக
CRL MP 14988/2023 ல் சீமான் தரப்பில் ஆஜராகி வாதாடினார்கள். நடிகர் சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? அல்லது கயல்விழியா – சென்னை உயர் நீதிமன்றம் வினா ?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனருமான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை மீதான முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு இது பொய் வழக்கு எனக்கூறி நடிகர் சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் என்ற சைமன் செபஸ்தியான் நடிகை விஜயலட்சுமியை. -விளம்பரம்-
-விளம்பரம்-திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அளித்திருந்த.
புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல் துறை வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன் ஆஜராகி, ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தூண்டுதலின் பேரில் தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும் ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் 2011 ஆம் ஆண்டு தான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும் வாதிட்டார். மேலும் 2008 ஆம் ஆண்டு மதுரை கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், அப்போது முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தார் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்று கூறிய நீதிபதி, சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயலட்சுமி திரைப்பட நடிகை பெரும்பான்மையாக கன்னட மொழிப் படங்களில் நடித்து சில தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.சுமார் 40 திரைப்படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். சுமார் 25 கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாகமண்டலா எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார்.தற்போது சென்னையில் வசிக்கிறார். சென்னையில் கல்வி பயின்றார். 2006 ஆம் ஆண்டில் அதிக தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார். இயக்குநர் சீமான், இவரை திருமணம் செய்ததை மறைத்து காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்துவின் இரண்டாம் மனைவி மனோகரி டீச்சர் மகளான கயல்விழியை திருமணம் செய்து இவரை ஏமாற்றிவிட்டதாக தற்கொலைக்கு முயன்றார் நவம்பர் 2016 ல் நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவருடன் திருமண உறுதி செய்யப் போவதாக அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டார். மூன்று வருட உறவுநிலைக்குப் பிறகு மார்ச், 2017 ல் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்தார்.பின் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் சீமான் இன்று பிப்ரவரி 19- ஆம் தேதி திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்திலும் சென்னை நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார். திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சீமான் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது; அதேபோல நடிகை விஜயலட்சுமி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி தீர்ப்பளிக்க இருப்பதால் சீமான் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்