இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேன்மைமிகு இளவரசர் நான்காம் கரீம் ஆகா கானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை மற்றும் ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்கு பார்வையாளரான அவரை பிரதமர் பாராட்டினார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.
X இல் ஒரு பதிவில், அவர் எழுதினார்:
"அருமை இளவரசர் கரீம் ஆகா கான் IV மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர், சேவை மற்றும் ஆன்மீகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகள் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கும். அவருடனான எனது தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
கருத்துகள்