சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை
நிரந்தரமாக்க உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் வியாழக்கிழமையன்று பரிந்துரைத்தது.
பின்வரும் நீதிபதிகளை நிரந்தரமாக்க பரிந்துரைக்கப்படுகிறது -
1.நீதிபதி ராமசாமி சக்திவேல்,
2.நீதிபதி பி. தனபால்,
3.நீதிபதி சின்னசாமி குமரப்பன், மற்றும்
4.நீதிபதி கந்தசாமி ராஜசேகர்.
வியாழக்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதென்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது உச்சநீதிமன்ற கொலீஜியம், பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி 2025 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பல நீதித்துறை நியமனங்களை பரிந்துரைக்க மறுபரிசீலனை செய்தது. அந்த வகையில்
முதலாவதாக, பம்பாய் (மும்பை) உயர்நீதிமன்றத்திலிருந்து மூன்று கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக உறுதிப்படுத்த கொலீஜியம் பரிந்துரைத்தது. மூன்று நீதிபதிகள் விபரம்:
நீதிபதி ஷைலேஷ் பிரமோத் பிரம்மம்,
நீதிபதி ஃபிர்டோஷ் ஃபிரோஸ் பூனிவல்லா,
நீதிபதி ஜிதேந்திர சாந்திலால் ஜெயின்.
கூடுதலாக, கொலீஜியம் நீதிபதி மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டே, பம்பாய்(மும்பை)உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியை இன்னும் ஒரு வருடம் புதுப்பிக்கப் பரிந்துரைத்தது.
மற்றொரு அறிவிப்பில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஐந்து மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள்:
அலோக் குமார் சின்ஹா,
ரித்தேஷ் குமார்,
சோனி ஸ்ரீவாஸ்தவா,
சோர்ந்திர பாண்டே, மற்றும்
அன்சுல் என்ற அன்ஷுல் ராஜ்.
பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி, 2025 ல் நடந்த அதே கொலீஜியம் கூட்டத்தின் போது இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.
கருத்துகள்