ஆர் டி ஐ விண்ணப்பம் மற்றும் நடவடிக்கைக் கோப்புகளை ஐந்தாண்டுகள் பராமரிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு உத்தரவு
நடவடிக்கைக் கோப்புகளை ஐந்தாண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் தகவல்களை அளிக்க வேண்டும்.
மனிதவள மேலாண்மைத் துறை ஏற்கெனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஆவணங்களின் நகல்களைப் பெறுவதற்கான கட்டணத்தை எப்படிச் செலுத்த வேண்டும் என்ற விவரங்களை மனுதாரருக்கு அனுப்பும் கடிதத்திலேயே பொதுத் தகவல் அலுவலா் சாா்பில் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன் ஆஜராகும் போது, பொதுத் தகவல் அலுவலா்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டவை கோப்புகள் வடிவிலேயே இருக்கும். இதை மனு பெறப்பட்ட நாள்முதல் மூன்றாண்டுகள் வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இரண்டாவது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடிய மனுக்கள் மற்றும் முக்கியத் தீா்வுகள் பெறும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட கோப்புகளை மனு பெறப்பட்ட நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி, மனுதாரா் தகவல்களைக் கோரும்போது நிா்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். மாறாக, மனுதாரரை அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கடிதங்கள் அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தகவல் ஆணையத்தில் அளிப்பதைத் தவிா்க்கும் பொருட்டு, உரிய காலக்கெடுவுக்குள் முதல் மேல்முறையீட்டு விண்ணப்ப காலத்திலேயே தீா்வு ஏற்படுத்தித்தர வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை தலைமைச் செயலகத்தில் துறைகள், துறை தலைமையகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொது அதிகார அமைப்பிலுள்ள பொதுத் தகவல் அலுவலா்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்