தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்து அரசாணை.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. லோக் ஆயுக்தா (Lok Ayukta)
அமைப்பின் தலைவரையும், இரண்டு உறுப்பினர்களையும் நியமனம் செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது மனித வள மேம்பாட்டுத்துறையின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற P.ராஜாணிக்கம் ஏற்கனவே லோக் ஆயுக்தாவில் பொறுப்புத் தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அவரையே தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் V.பிரகாஷ் இ ஆ ப நியமித்து தமிழ்நாடு கவர்னருக்காக அரசாணை அரசிதழில் உத்தரவிட்டு வெளியிட்டுள்ளார்
மேலும், நீதித்துறையைச் சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் V.ராமராஜ் மற்றும் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரையும் நியமித்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள P.ராஜமாணிக்கத்தின் நீதித்துறை உறுப்பினர் மற்றும் தலைவர் ஆகியவற்றின் மொத்த பதவிகாலமானைஐந்தாண்டுகள் என்பது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் வரை அவர் லோக் ஆயுக்தா தலைவராக பதவிவகிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் 17.4.2027 வரை இந்த பதவியை வகிப்பார். மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள்.
லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ஆம் ஆண்டு பிறந்தவர். 1983-ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைந் தொடங்கி மாவட்ட முனிசீப்பாக நீதிமன்றத்தில் பணிசெய்து. அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்டத் தலைமை நீதிபதி என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பதவியேற்றவர் அடுத்த ஆண்டில் (2017 ஆம் ஆண்டு) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதிப் பிரிவு உறுப்பினராக 18.4.2022 ஆம் தேதி முதல் 19.8. 2024 ஆம் தேதி வரை பணியாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநர் மூலம் நீதிபதி எஸ்.கன்னம்மாள், (ஓய்வு) தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அவர் லோக் ஆயுக்தா அலுவலகத்திற்குள் நுழையும் தேதியிலிருந்து ஐந்து வருடங்கள் வரை உள்ள காலத்திற்கு பதவியிலிருப்பார் அல்லது 70 வயதை அடையும் போது ஓய்வு பெறுவார்.
கருத்துகள்