பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன் ஆலய மண்டகப்படி அழைப்பில் 'ஊரார்' வார்த்தை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய தஞ்சாவூர் ஆட்சி செய்த மராட்டிய சரபோஜி மன்னர்
வேட்டையாடியபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்ற போது அப்பெண் ஒரு வனத்திலுள்ள புதரில் மாயமான தாகவும் பின்னர் அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் கண்டதாகவும், கோட்டை சிவன் கோவில் அந்தணர் குருமார்களை அழைத்து அங்கேயே அம்மனுக்கு ஒரு கோவில் அமைந்ததாகவும் வரலாறு கூறும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீநாடியம்மன் கோவில். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையானதாகக் கருதப்படும்
கோவில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.நாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று நாடியம்மன் கோவில் திருவிழா நடத்தப்பட்டதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை எப்போதும் போல அச்சடித்துள்ளதில், திருவிழா விவரங்கள் என்ற தலைப்பில் தினசரி நடக்கும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளனர். இது HR & CE சட்ட விதிகளின் படி அதற்குப் பக்கத்தில் குறிப்பிட்ட நாளின் விழாவை நடத்தும் மண்டகப்படிதாரர் யார் என்ற விவரம் இடம் பெற்ற நிலையில்.
முதல் நாள் விழா மண்டகப்படி தொடர்பான விவரத்தில், 'ஊரார் - ராஜுக்கள், நாயுடு வகையறா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதில், ஊரார் என்பது பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டியல் ஜாதி மக்களைக் குறிக்கும் சொல்" என ஒரு சாரார் கூறுகிற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கே.பி.செல்வராஜ்.என்ற நபர் நடுவிக்கோட்டை ஆதிதிராவிடர் நல சங்கம் என ஒரு அமைப்பு புதிதாக உருவாக்கி அதன் தலைவராக உள்ளார்.
பட்டுக்கோட்டை நகரம் மற்றும் அங்கிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் பட்டியல் ஜாதி மக்கள், தங்களின் முக்கியக் கடவுளாக நாடியம்மனை பார்க்கின்றனர் எனவும்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.பி.செல்வராஜ் தொடர்ந்த வழக்கின் முக்கிய அம்சமாக, மாற்று ஜாதியினரை அடையாளப்படுத்துவது போல, ஆதிதிராவிடர்களையும் அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாக முன்வைத்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதில் மனுவைத் தாக்கல் செய்ததில், "கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்திலேயே இங்கு ராஜுக்களும் நாயுடு சமூகத்தினரும் வந்துவிட்டனர். அவர்கள் தான் கோவிலுக்கு மற்றும் புணரமைப்பு உள்ளிட்ட நன்கொடைகள் தருகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
"கோவிலில் உள்ள பழங்காலம் தொட்டே நடந்துவரும் வழக்கத்தை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறியவர், "அழைப்பிதழில் ஆதிதிராவிடர்களைச் சேர்த்தால் மற்ற ஜாதியினரும் தங்கள் பெயரையும் சேர்க்குமாறு உள்ளே வந்துவிடுவார்கள். இதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை" என்று வாதிட்டார்.
அதேநேரம், கோவிலில் நன்கொடையாளர்கள் பட்டியலில் மற்ற மண்டகப்படி மாற்று ஜாதியினர் பெயர்கள் உள்ளதாகவும் கோவில் விழாக் குழுவில் அவர்கள் கிடையாதெனவும் அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதையும் கோவிலின் செயல் அலுவலர் அவரது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், நாடியம்மன் கோவில் விழா அழைப்பிதழில் 'ஊரார்' என்பதற்குப் பதிலாக 'ஆதிதிராவிடர்கள்' எனக் குறிப்பிட வேண்டும் என்று பட்டியல் ஜாதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேநேரம், உற்சவ மண்டபத்திலிருந்து நடத்தப்படும் மண்டகப்படிகளில் (கடவுளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது தனிநபர்களோ அல்லது ஜாதிக் குழுக்களோ தங்களின் இடத்துக்கு வரவழைத்து பூஜை செய்வது) தாங்கள் உரிமை எதையும் கோரவில்லை எனவும் பட்டியல் ஜாதி மக்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதி ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
"அறநிலையத்துறை ஆணையர் முடிவெடுக்குமாறு கூறி 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழா அழைப்பிதழ் வரையிலும் ஊரார் என்றே குறிப்பிட்டதால் வழக்குத் தொடர்ந்தோம்" எனக் கூறுகிறார் கே.பி.செல்வராஜின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் என்றவர் ஒரு குடும்பம் அல்லது ஜாதிக்கான கோவிலாக இருந்தால் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இது அரசு நிர்வாகத்தில் நடத்தக்கூடிய கோவில். இங்கு பாகுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது என நீதிமன்றத்தில் வாதிட்டோம்" என்கிறார்.
ஜாதி ரீதியாகவோ, பாலினரீதியாகவோ, பிறப்பு ரீதியாகவோ யாரையும் பாகுபடுத்தக் கூடாது என அரசமைப்புச் சட்டம் சொல்வதையும் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியதாகக் கூறுகிறார் இராபர்ட் சந்திரகுமார். இந்த வழக்கில் HR & CE சட்டப்படி இதை விசாரிக்கும் அதிகாரம் அறநிலையத் துறை ஆணையருக்கு முதலில் வழக்கு தாக்கல் செய்த பிறகு தான் அந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 17ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியதில்.
நாடியம்மன் கோவில் திருவிழா என்பது இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டாடப்பட வேண்டும் எனத் தாங்கள் கருதுவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "இந்த வரையறைகளின்படி பட்டியல் ஜாதியினரும் இதில் அடங்குவர்" எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தங்களின் தீர்ப்பில், "கோவில் அழைப்பிதழில் நன்கொடைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஜாதிப் பெயர்களைப் பட்டியலிடும் நடைமுறை தேவையற்றது' எனக் கூறியுள்ளனர்.
"திருவிழாவுக்கு பட்டியல் ஜாதி மக்கள் நிதி அளிக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர்களின் பெயரைத் தவிர்ப்பது ஏற்புடையதாக இல்லை" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு பணியாளராக இருக்கும் கோவிலின் நிர்வாக அலுவலர், இதை ஆதரித்துப் பேசுவது வினோதமாக உள்ளதாகத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.
இதுபோன்ற நிகழ்வுகள், சமூகத்தில் பட்டியல் ஜாதி மக்களுக்கான அர்த்தமுள்ள பங்கேற்பு, தனி உரிமை மற்றும் சமூக மதிப்பு ஆகியவற்றை மறுப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள், இது அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதாகவும் கூறியுள்ளனர். பட்டியல் ஜாதியினர் விழாவில் பங்கேற்பதற்கோ, கடவுளை வழிபடவோ எந்தத் தடையும் இல்லை என அலுவலர்கள் கூறலாம். ஆனால், அவர்களின் பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். வெறும் அடையாளமாக இருக்கக் கூடாது" எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், 'திருவிழா அழைப்பிதழில் ஆதிதிராவிடர்கள் பெயரைச் சேர்ப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா?' என்று ஆலோசித்த நீதிமன்றம், "அரசு நடத்தும் கோவில் திருவிழாக்களில் தனிப்பட்ட எந்த ஜாதியின் பெயரும் இடம்பெறக்கூடாது" எனக் கூறியுள்ளதாக மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் தெரிவித்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளதால், இதற்கு மேல் உத்தரவு தேவை எனில் உச்சநீதிமன்றத்துக்குத் தான் மேல் முறையீடு செய்ய வேண்டும்" .
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாரியம்மன் காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசி பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடப்பது தான் வழக்கம்.
"நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடியம்மன் கோவிலுக்கு மட்டும் தான் என்றாலும் அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களையும் இது கட்டுப்படுத்தும்" என்கிறார் வழக்கறிஞர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார். இருந்தாலும் இதன் முன் வரலாறு:- 1676 ஆம் ஆண்டில் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சாவூரில் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798 ஆம் ஆண்டு முதல் 1832 ஆம் ஆண்டு வரை) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவுடன் 1799- ஆம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி தஞ்சாவூர் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சாவூர் பகுதிகள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை) மன்னருக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாததால், கிழக்கிந்தியக் கம்பனி ஆங்கிலேயர்கள் வசம் 1856- ஆம் ஆண்டில் தஞ்சாவூர் கோட்டையும் பட்டுக்கோட்டையும் வந்தது.
கருத்துகள்