மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி மாசி மாதம். அமரபட்சம் பதினான்காம் இரவில் பிறப்பு இல்லாதவனை திருக்கோவில்களில் நான்கு கால இரவில் அபிஷேக ஆராதனைகள், ஜெப ஹோமம், வேத தேவார, திருவாசக பாராயணமென இரவு முழுவதும் கண்விழித்து வணங்கும் விழா
வீடுகளில் பச்சை வாழையில் அவல், பாசிப்பயறு, தட்டைப்பயறு, பச்சரிசி, கருப்பட்டிப்பாகு, வெல்லப்பாகு சேர்த்து பால் பழத்துடன் பல்லயமிட்டு வணங்கும் விழா. கிராமப்புற ஆலயங்களில் -- ஐயனார், கருப்பர், பேச்சி, ராக்காயி, சடைச்சி, மயாவதாரன், மந்தைச்சாமி, பந்தி பரிவார தெய்வங்கள் அனைவருக்கும் இதேபோல் அந்தந்த ஆலயத்தின் அவரவர் குல வழக்கப்படி
பல்லயம் பொங்கல் புத்தரிசி கரும்பு புதுமஞ்சள் பிரசாதம் என இப்படித் தான் மறுநாள் கிராமப்புற ஆலயங்களில் பால்குடமும் காவடியும். அபிஷேகமும் மகேஸ்வர பூசை அன்னதானம், என குலதெய்வங்கள் கொண்டாடப்படுகின்றன.(மூன்றாவது நாள் கிராம மக்கள் ஒன்று கூடி வயல் காடுகளில் வேட்டைக்கு பாரி வேட்டை எனப் பெயரிட்ட காலகால வரலாறு தற்போது உள்ள வனச்சட்டங்கள் தடுக்கும் நிலையில் கடந்த காலத்தில் சென்று முயல் உடும்பு போன்றவற்றை வேட்டையாடி
குடிப்படி பங்கிட்டு முன்னோர்களுக்கு வீட்டில் படையலிட்டு உண்ட வரலாறு நாமறிந்த வரை உண்டு ஆனால் நமது அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாறு தெரியாது. ஒவ்வொரு குடிக்கும் குடிப் பட்டை எனும் பனையோலையில் பதனீர் வகை அருந்தப் பயன்படும் பச்சை ஓலையில் பட்டைசெய்து அதில் வேட்டை மாமிசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம்) கிராமங்கள் தோறும் சம்பளம், அம்பலம்,உம்பலம், பண்டாரம் மரியாதைப்படி நடக்கும் -விளம்பரம்- -விளம்பரம்-
(ஒரு அந்தணர் குடும்பத்தினருக்கு இந்த பாரி வேட்டைப்பட்டை வழக்கப்படி வழங்காதது ஏன் என ஒரு பிராமணர் குடும்பத்தில் உள்ள மாமி கிராமத்தில் சண்டையிட்டது நாமறிந்த என் சிந்தனை வயப்பட்டது) அது ஒரு கிராமத்து மரியாதை
நம் பண்பாடு அப்படித்தானே விழாக்கள் வானியல் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதே. அனைவரையும் அறனோடு அரவணைத்த சமூகம். இனம் பிரிவு மொழி கடந்த ராணுவம் போலத்தான் நம்மோடு கைசேர்த்து காலம் வரை வாழும் வாழ்வியலே வேண்டும் அதுவே நம்முடைய கலாச்சாரம்.
இந்த விழா சைவமா ? வைணவமா ? காணாபத்யமா? சமணமா? பௌத்தமா சாக்கியமா ? கௌமாரமா? சக்தியா? ஆசீவகமா ? ஊரிலும் ஊருக்கு வெளியில் கண்மாயில் எல்லையில் வீரர்களாக படைஞர்கள் யானை குதிரை மந்தை மாடுகள் பூதம் அரிவாள் கத்தி கைத்தடி வளைத்தடி களரி படைக்கள ஆயுதங்கள் தாங்கி நிற்கும் நம் முன்னோர் சிங்கமுத்து ஐய்யன், பட்டவன் முண்டன்,தூண்டிக் கருப்பன், பதினெட்டாம் படிக்கருப்பன், புலிமேல் முனிவர் முன்னோடி பேச்சி ராக்காயி பாண்டி முனி --இத்தனையும் நினைத்து வழிபடும் விழா நடைமுறை
எழுத்தில் உண்டா? வழி வழி வந்த வரலாறு தாத்தா பேரனுக்கு சொல்லி அவன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மரபு வழி வரலாறு போல
ஆமாம் . திருமூலர் திருமந்திரமும் இப்படித்தான் சொல்கிறது:- "சக்கரமாக. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ் சேனையுஞ் செய் சிவசக்கரந்தானே...(988)
ஊர்காவலர் ஐயனார் நகர் காவலர் வைரவர் திறமை சதுரப்பாடுடைய காப்பாளர்கள் ஆற்றலமைந்த சிவகணங்கள் வழிநடத்தும் தளபதிகள் பதினைவர் சேனைகள் என நம் படைபட்டாளம் நாதம் பிந்து பீஜ அட்சரங்கள் அவர்களின் இருப்பிடங்கள் முறைகள் என விரியும் ஆலய தெய்வம்
ஐம்பத்தி ஆறு. இருபத்தோரு பந்தி அறுபத்திநான்கு கலைகள். யாருக்குத் தெரியும் அவர்களாக சொன்னால் தான். எப்படியோ! உடுக்கை அடித்து சாமி அழைத்துப் பார்த்தால் வாரிசு வழியாக இறங்கி வரும் தெய்வங்கள், முன்னோர் ஆன்மாவாய் கருமருந்து படைவாணம் (பழம் பீரங்கி மருந்து) இப்போது இல்லை தான் சாராயம் கருவாடு நீர்கொழும்பு சாயவேட்டி, காதோலை கருகமணி, எப்போதும் உண்டு தானே!
மதுரை புது மண்டபம் தான் இவர்கள் வரலாற்றுப் புகழிடம், சமயக் குரவோர் நால்வர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டில் 18 சிவ ஸ்தலங்கள் சோழநாட்டின் திருப்பராய்துறை உள்ளிட்ட ஸ்தலங்களில் மேலும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் நிர்வாக வழி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கல்ழெழுத்துடன் அடியேன் சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. . முதல் யாமம் எனும் இந்த முதல் கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் யாம பூஜை என்பது இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்தக் காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும் மூன்றாம் யாம பூஜை என்பது இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாளைப் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பென்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்தக் காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் யாமமானது இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக! ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.திருவாசகம்-சிவபுராணம்
"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !
அயல்நாட்டு மக்கள் மத்தியில் ஈஷா மையம் சார்பில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்வுகள் நமது ஆன்மீக கலாச்சாரத்திற்கான நிகழ்வல்ல என்பது நன்றாகவே அறியும் நிலையில்
மேலும் அவர் இந்த ஆண்டு தனது வாரிசாக மகளை அறிமுகம் செய்து அரசியலில் வாரிசு போல டிரஸ்ட்க்கு அவரது வாரிசு அறிமுகம் செய்து புகுத்திய நிகழ்வை கண்டது இந்த ஆண்டு அடுத்த ஆண்டு அவர் இவரது பணியைத் தொடருவார்.
கருத்துகள்