ஊழல் குற்றச்சாட்டில் கட்டாய ஓய்வு வழங்கிய மாவட்ட நீதிபதி குணசேகர் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகக் குழு முடிவு செல்லும் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
நீதித்துறை அதிகாரம் கொண்ட அலுவலர்கள் உச்சபட்ச நேர்மையைக் கொண்டிருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.;
மாவட்ட நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எஸ். குணசேகர், சில ஊழல் குற்றச்சாட்டுகளால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மாவட்ட நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குணசேகர் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவர் விருப்ப ஓய்வு கேட்டு 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு எதிரான குற்ற குறிப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதனால், 58 வயதை அவர் பூர்த்தி செய்ததால், அவருக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்கக் கூடாதென சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் மற்றும் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழு முடிவு செய்தது. அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்து, அரசுக்குப் பரிந்துரையும் செய்ததை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, அவருக்கு 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி கட்டாய ஓய்வும் வழங்கி உத்தரவிட்டது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குணசேகர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்:- ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்திலிருந்து இல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்கள் வாங்கிய சொத்துக்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.
குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கை, அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது. அதனால் கட்டாய ஓய்வளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்'' என வாதிடப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்:-, ''நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது, மனைவி பெயரில் 25 அசையா சொத்துகளை வாங்கியது, பி.எம்.டபிள்யூ சொகுசுக் கார் வாங்கிய விவரங்களை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காதது, மனுதாரரின் சம்பள வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகையை வரவு வைக்கப்பட்டுள்ளது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளது. பொதுநலனைக் கருதி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாமென உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு நீதிபதிகள் முடிவு செய்தனர்'' என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''நீதித்துறை அலுவலரான மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அலுவலரை, இதற அரசு ஊழியர்களைப்போல கருத முடியாது. நீதித்துறை அலுவலர்கள் உச்சபட்ச நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என உத்தரவிட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தில் குணசேகர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வில் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''நீதித்துறை அதிகாரம் கொண்ட அலுவலரான மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குகா கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரம் கொண்ட அலுவலரை, அரசு ஊழியர்களைப்போல கருத முடியாது. நீதித்துறை அலுவலர்கள் உச்சபட்ச நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர்நீதிமன்றம் வழங்கிய நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என உத்தரவிட்டனர்.
கருத்துகள்