பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டதென காவல்துறை விளக்கம்
சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டதென
மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம். பணி மாறுதல் உத்தரவு வந்த பின்னர் சார்பு ஆய்வாளர் மாற்றமாகிச் செல்லவில்லை
விடுதலைச் சிறுத்தை கட்சி பொறுப்பாளர் கத்தியால் தாக்கியதாக பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில்
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு என்ற தகவலும் வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றுபவர் பிரணிதா. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இரவு அவர் காவல் நிலையத்தில் 5 காவலர்கள் பணியிலிருந்த தாகவும். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் கட்டுவது தொடர்பாக சர்ச்சை புகார் புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் மட்டுமே வந்திருந்ததாகவும்
அவர்களுக்கு ஆதரவாக சிபாரிசுக்கு பிண்ணனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலாளரான இளைய கௌதமன் என்ற நபர் மற்றும் அவருடன் சிலரும் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் சார்பு ஆய்வாளர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்டதாகவும், அதற்கு அவர் ,"நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அலுவலர்கள் தான் விசாரிப்பார்கள்" எனக் கூறியதாகவும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமநாதபுரத்தில் சமுதாய நலக் கூடம் கட்டுவது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே பிரச்சனைகள் இருந்து வருகிற நிலையில். அதற்கு தனது தரப்பினருக்கு ஆதரவாக சார்பு ஆய்வாளர் செயல்பட வேண்டுமென அவரை வலியுறுத்தி "ஏன். எங்களை அலைக்கழிக்கிறீர்கள் என அதிகாரமாக ஆத்திரப்பட்ட வி.சி.க மாவட்டச் செயலாளர் இளைய கௌதமன் என்பவர் தன்னை ஆபாசமாகப் பேசித் தாக்கியதாக செய்தியாளர்களிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர் பிரணிதா தெரிவித்த நிலையில். அரசினர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பலரும் பலவிதமாக கருத்துப் பரிமாற்றம் செய்த நிலையில்,
அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில் சிவகங்கையில் பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை விபரம் வருமாறு:
சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள், அத்துமீறி நுழைந்த வி.சி.,யை சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக் கூறி கதறி அழும் எஸ்.ஐ.,யின் தாய்க்கு, காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது?
தன்னைகா கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, பெண் போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், காவல் நிலையத்திற்குள் பெண் எஸ்.ஐ.,க்கு நடந்திருக்கும் தாக்குதல், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.
பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வி.சி.,யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்துக்குள் புகுந்து வி.சி.க மாவட்டச் செயலாளர் பெண் எஸ்.ஐ மீது தாக்குதல் நடந்ததா? இல்லையா? பணி மாறுதலைத் தவிர்க்க எஸ்.ஐ நாடகமாடுவதாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் குற்றச்சாட்டு இதில் நடந்த நிகழ்வுகள் குறித்து பலரும் பலவிதமாக விமர்சனம் வைக்கும் நிலையில். இது குறித்து உண்மை நிலையை மக்கள் அறிய வேண்டும் சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கைக்கு பணியிட மாறுதல் ஆன நிலையில் இரவு காவல் நிலையத்தில் ஆவணங்கள் எடுத்து வர போயிருந்த போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் அவரது ஆட்களுடன் அங்கு வந்ததாகவும். இது அணைத்து விபரமும் உண்மையா என காணவேண்டும். காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பிரணிதா பணி மாறாமல் இருக்கும் நிலையில் இரவு அங்கு பிரச்னை தொடர்பாக வந்திருந்த ஒரு நபர் சார்பு ஆய்வாளர் பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் அது தகராறு என மாறி சார்பு ஆய்வாளர் தாக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழும் நிலையில். காவல் துறையினர் விசாரிக்கின்றனர்
இந்த நிலையில்
சார்பு ஆய்வாளர், பிரணிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வி.சி.கட்சியின் நிர்வாகி இளைய கௌதமன் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு தரப்பில் புகார் தொடர்பாக ஆதரவு அளிக்க வந்த நிலையில் என்னை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையைக் கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்கு எதிராகப் போராட்டம் நடத்து வேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த பலர் வெவ்வேறு பகுதிகளில் தங்களை சூப்பர் தலைவர்கள் போல நினைத்துக் கொண்டு பல இடங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் செய்து வருவதாக வரும் தகவலில் உண்மை உண்டு. ஆனால் இங்கு அப்படி நடந்ததா என காணவேண்டும் இதில் ஏன் இவர் பெயர் வருகிறது மேலும் நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன அதில் ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகள் இருந்தபோதும், அவர்கள் செய்யத் துணியாதவைகள் இவர்கள் செய்வதால் தான் பல இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. என்பதே அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சாகும். கல்லல் காளையார் கோவில் செல்லும் சாலையிலுள்ள சாத்தரசம்பட்டி தான் சார்பு ஆய்வாளர் சொந்த ஊராகும், இவருக்கும் முதல் நிலைக் காவலரான உள்ள கென்னடி என்ற நபருக்கும் திருமணம் நடந்ததாகவும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் பல பஞ்சாயத்துகள் நடந்த நிலையில். கப்பலில் பணி செய்து வரும் பொறியாளர் இவர்கள் குடும்ப நண்பர் அவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளருக்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் பேசப்படுகிற நிலையில் தான் இந்த பிரச்சினையில் இப்போது இந்த நிலை வந்துள்ளது என மக்கள் மத்தியில் பலரும் பேசும் நிலை உள்ளது மேலும் சிவகங்கை மாவட்டக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியில்
தலைப்பு :வீடியோ பரவி வருவது தொடர்பாக சோமநாதபுரம் காவல்நிலையம், அமராவதி புதூரைச்சேர்ந்த திரு.இளையகௌதமன் (அரசியல் பிரமுகர்) உட்பட சிலர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தன்னைத் தாக்கியதாக WSI திருமதி. பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கம். - 1/SB/SVG/Press Release/2025, : 07.02.2025
இளையகௌதமன் உட்பட சிலர் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கியதாக WSI திருமதி. பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக, சார்பு ஆய்வாளர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், நிலையத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மேலும் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.
கடந்த 05.05.2025 அன்று மாலை, அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள கோயில் நிலத் தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து SI.திரு.முத்துகிருஷ்ணன் என்பவர் விசாரணை மேற்கொண்டார்.
அந்த நேரத்தில், வாகன சோதனைக்குப் பிறகு WSI திருமதி. பிரணிதா நிலையத்திற்கு வந்து, மேற்படி SI.திரு.முத்துகிருஷ்ணனின் விசாரணையில் தலையிட்டார். விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, மேலும் WSI.திருமதி.பிரணிதாவிற்கும், கிராமத்தினருடன் வந்திருந்த அமராவதிபுதூரைச்சேர்ந்த திரு.இளையகௌதமன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சார்பு ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் 10 பேர் அவரைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இருப்பினும், அவர் மறுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பத்திரிக்கைகளுக்கு இது தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரியவருகிறது.
முன்னதாக, இந்த WSI.திருமதி.பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், கடந்த 18.11.2024ம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக, அவர் சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் தனது பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு பணிக்கு அறிக்கை செய்யாமல் 30.11.2024 முதல் 16.1.2025 வரை 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தவர், தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார்.
பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்