போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த கார் ரேஸ் விபத்தில் நடிகர் அஜீத் குமார்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் அஜித்குமார் ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக அவருடைய காரையும் வடிமைத்தார்.
துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக விபத்தில் அஜித் குமாருக்கு எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து இந்தக் கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றதில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்றார்.
அதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித்குமாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே மூன்று வட்டமடித்து பயங்கரமாகச் சேதமடைந்துள்ளது.இந்த கார் விபத்திற்கு பிறகு பேட்டியளித்த அஜித்குமார் :
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிறிய விபத்தில் சிக்கியிருந்தாலும் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. கார் ரேஸில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படமானது பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளியானது. ஆனால் வேறு கலப்பு விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு பெரியளவில் வரவேற்பில்லை.விடாமுயற்சி படத்தில் அஜித்குமாருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்