தாரஹாசுரன் எனும் அசுரனால் பீதியடைந்த முனிவர்கள் அசுரனை அழிக்க சிவபெருமானிடம் வேண்டினர்.
அவர்களின் நிலையைக் கண்டு முருகப் பெருமானை அசுரனை அழிக்க அனுப்பினார். முருகனுக்கு சிவபெருமான் வழங்கிய 11 ஆயுதங்களையும், சேர்த்து தாய் பார்வதி தேவியின் சக்தி வாய்ந்த வேல் மூலம் வெற்றி பெற்றார். தை மாத பூசம் நட்சத்திரத்தில் தாரஹாசுரனை முருகப்பெருமான் கொன்றதாக
நம்பப்படுவதால் தைப்பூசம் கொண்டாடப்பட்டது . இந்த விழா முருகன் ஆலயங்களிலும் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் போது முருகனின் தரிசனம் பெற மக்கள் காவடிகளுடன் பழனிக்கு குழுவாக நடந்து செல்கின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் தேவகோட்டை
திருப்பத்தூர் பகுதிகளிலிருந்து சிங்கம்புணரி, நத்தம், திண்டுக்கல், வழியாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் நடந்து செல்ல தார் சாலைகள் சரியாகப் போடப்படாமலிருக்கும் நிலையில் காலில் கல் முள் குத்தாமலிருக்க கார் பெட் எனும் மேட் கொண்டு ஒவ்வொரு ஆறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் அளவுக்கு நீளமாக விரிக்கப்பட்டது, பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதம் நோகக் கூடாது என்பதற்காக மாத்து விரித்து சிறப்பு ஏற்பாடு செய்த ஒரு நேர்த்திக்கடன் செய்த பக்தர்.
காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், காவடிகள் எடுக்கும் பக்தர்கள் குன்றக்குடியில் ஒன்றுகூடி, அங்கிருந்து சென்று திரும்பும் துணைக் காவடி வரை 21 நாட்கள் பயணமாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம் அப்படி செல்லும் வழி நெடுக கார் பெட் விரித்து தனது வேண்டுதல் நிறைவேற்றியுள்ளார் ஒரு பக்தர் பழனி முருகன் கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து துறை சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை சார்பில் பாதுகாப்புப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பக்தர்களின் நலனுக்காக காவலர்கள் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து பழனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது:-தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 காவல்துறை உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. அதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடிவாரம், பேருந்து நிலையம், மற்றும் கிரிவீதிகளில் 37 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்றத் தடுப்புக் காவல் குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே அதையொட்டிய 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் பேருந்து நிலையம், கோவிலுக்குச் செல்லும் வழி, வாகன நிறுத்தம் தெரிந்து கொள்வதற்காக 300 வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற , சட்ட மன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து 300 கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்த நிலையில் அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எனக் கூறினார்.பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலைக்கோவிலுக்கு செல்ல ஒரு வழிப்பாதை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மலைக்கோவிலுக்கு செல்போன் கொண்டு சென்று பயன்படுத்தினால் ரூபாய்.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழனி தைப்பூசத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனுார் நாட்டுக்கோட்டை நகரத்தார் கள் பல ஆண்டுகளாக பாரம்பரியத்துடன் காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்தாண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியில் தேவகோட்டையிலிருந்து புறப்பட்ட இக்குழுவினர் நேற்று முன்தினம் நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்தனர்
அங்கு தரிசனம் செய்த பின்னர் பழனிக்கு பாதயாத்திரை தொடர்ந்தனர். வழக்கமாக கொண்டு வரும் வைர வேல் (செம்மடைப்பட்டி ஊஞ்சலில் காணும் )கொண்டு சென்றனர். பல்வேறு அமைப்பினர் இக்குழுவினருக்கு அன்னதானம் வழங்கினர். பழனி செல்லும் பாதயாத்திரைப் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் உணவு வகைகள் பலரும் வழங்கிய நிலையில் காரைக்குடி அருள்மிகு வைத்தியநாத சுப்பிரமணிய தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் மாணிக்கவாசகம் டிரஸ்டிகள் செல்வமணி, கண்ணன், மீனாள் முருகேசன், சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் ராம.ராமசாமி என்ற ரவி , முகேஷ் பாலா, பரத் உள்ளிட்ட முருக பக்தர்கள் மூலம் ஆலயத் துணிப்பை மூலம் பிஸ்கட் மற்றும் சாக்லேட் பக்தர்களுக்கு வழங்கினர்
வித்யாகிரி பள்ளி சார்பில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானமும் மற்றும் மருத்துவ முதலுதவியும் அளிக்கப்பட்டது.
காரைக்குடி மற்றும் - புதுவயலில் இயங்கி வரும் வித்யாகிரி கல்வி நிறுவனங்கள் மற்றும் காரைக்குடி சத்ய சாய் சேவா சமிதி ஆகியவை இணைந்து, நத்தம் இராம்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, காரைக்குடி கேஎம்சி மருத்துவக் குழு முதலுதவி சிகிச்சையும், அன்னதானமும் வழங்கினார். தைப்பூசம் தை மாதம் (தமிழ் பத்தாவது மாதம். பூஸா மாதம் எனலாம்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தான் முருகப்பெருமானுக்கு ஞானபழம் கிடைக்காததால் பழநி மலையில் ஆன்டிப்பண்டாரக் கோலத்தில் தஞ்சமடைந்த நாளாகிறது. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம். முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் தைப்பூசம். இது கேரளாவில் தைப்பூயம் எனப்படுகிறது. குறிஞ்சி நில இறைவன் முருகன் தமிழ்க்கடவுள் (குறிஞ்சி மலை சார்ந்த இடம்) மலைநிலக் கடவுள் முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் ஒரு போர்க்கடவுள். தை மாதம் பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலன் தரும் என்பர். வடலூர் அருள்மிகு
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான். ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். . -விளம்பரம்-
"குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்!
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே!
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்.
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான்.
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி!
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி",
தான் நினைத்த எல்லாம் தரும். .... -மீனவர் குல நாயகன் மதுரை அரசாளும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் மைந்தன் புகழைப் பாடிய தமிழ் சங்க தலைமைப் புலவர் நக்கீரர் பெருமான்.
கருத்துகள்