திருச்சிராப்பள்ளி G- கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்திட மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி- சென்னை தேசிய நெடுஞ்சாலை G- கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்திடவும்
மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையுடன், மதிமுக தலைவர் வைகோ உடன் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் துரை வைகோ சந்தித்தார்
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியில் உள்ள G - கார்னர் பகுதியில், சர்வீஸ் சாலை இருவழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் கருப்பு பகுதியாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக இரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்ற முக்கியமான சந்திப்பாகவும் உள்ளது.
இதுவரை விபத்துகளால் 7 மனித உயிர்கள் பறிபோயிருக்கும் இந்தப் பகுதியில் தினம் தினம் விபத்துகளும், காயங்களும், தப்பித்து உயிர்ப்பிழைப்பதும் வாடிக்கையாக நிகழ்வதை தவிர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதற்கு தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடந்த
11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் G - கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை அளித்திருந்ததையும் சுட்டிக்காட்டி பேசினார்.
அதன் அடிப்படையில், 25.01.2025 ஆம் தேதியன்று தென்னக இரயில்வே அலுவலர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், போக்குவரத்துக் காவல்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டதாகவும்.
ஏற்கனவே கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சுரங்கப்பாதைக்கான திட்ட வரைவை தயாரித்து வந்திருந்தார்கள். அதை இரயில்வேத் துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைப்பில் இரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக் காவல் ஆகிய மூன்று துறை அலுவலர்கள் சேர்ந்து ஒருமித்த உணர்வோடு இந்த சுரங்கப்பாதை அமைப்பதகான பணிகளை தொடங்கிய நிலையில்.
அப்போது அந்த மூன்று துறைகளின் அலுவலர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், இப்பணி முழுமையான தீர்வை எட்டி சுரங்கப்பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு மத்திய அமைச்சரைச் சந்திப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில்
அதன் அடிப்படையில், அமைச்சரை சந்திக்க நேற்று நன்பகல் 12 மணியளவில் மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கும் போது, மதிமுக தலைவர் வைகோ உடனிருக்க அமைச்சரை சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கி அதை அவசரமாக நிறைவேற்றித்தரவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார் மேலும் திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிட வழிவகை செய்திடுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு நிச்சயம் ஆவன செய்வதாக உறுதியளித்ததாகத் தகவல்.
திருச்சிராப்பள்ளி G - கார்னர் பகுதியில் வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு, அது விபத்தில்லா பகுதியாக மாறி, மக்கள் பாதுகாப்புடன் பயணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
கருத்துகள்