நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனருமான சீமான் வீட்டில் காவல் பணியாளராக இருந்த
இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நபர் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சீமான் வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில் வெளி வாசல் கதவில் ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் ர் கைது செய்தார் . அந்த முதல் தகவல் அறிக்கையில் ஆயுத தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த பின் விசாரணையில் செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் அரசியல் உள்நோக்கத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு தங்களிடம் உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்புச் சட்டப் பிரிவில் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறையினர் சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருள் செல்வம், மனு குறித்து பதில் அளிப்பதற்காக வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், காவல்துறையின் இயலாமை காரணமாகவே வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கக் கோருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனை யடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுநாளுக்கு அதாவது மார்ச் 13 ஆம் தேதிக்கு மாற்றி வைத்தார்.
கருத்துகள்