திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த ஆளுனர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றார். அங்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்தவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி சென்றார்.
அய்யா வைகுண்டர் தரிசிக்க வந்த ஆளுனர், உடை மாற்றும் அறையிலிருந்தபோது, ஜெனரேட்டர் அறையில் திடீரென பயங்கரமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு கரும்புகை சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஜெனரேட்டரில் இருந்து கரும்புகை வெளிவந்தது காவலர்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆதிக்க நெறிகளுக்கும் ஜாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள். "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய ஜாதிய பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடியவர். சுவாமி தோப்பில் சமத்துவக் கிணறும் வெட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதன் படி, அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள். "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் என பதிவிட்டுள்ளார்.ஆளுநர் பேசுகையில் “தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். அது தேவையில்லாத ஒன்று. அவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை,” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலை ஆளுநர் ரவி வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ஆர். என்.ரவி, “சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகவே மகாவிஷ்ணு அய்யா வைகுண்டரின் அவதாரமாக வந்தார்.
இந்த காலகட்டத்துக்கு அய்யா வைகுண்டரின் சனாதன போதனைகள் மிக முக்கியமானவை. உலகில் பல்வேறு பகுதிகளில் போர் நடக்கும் சூழலில் அய்யா வைகுண்டரின் போதனைகள் மிக முக்கியமானவை. தற்போது சனாதனத்தின் தேவை அதிகமாக உள்ளது. உலகின் மிக முக்கியமான தலைவராக உயர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் வேறு கட்சியை சார்ந்தவர்கள் பிற மாநிலங்களில் ஆட்சி செய்தாலும் அவர்கள் அனைவரையும் வேறுபாடு இன்றி தேவையான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக தமிழகத்தில் கருத்து வேறுபாட்டுடன் வேறு கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் தேவையான நிதியை தமிழகத்துக்கு வழங்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் பெயரில் மொழிக்கான இருக்கைகளை அமைத்து நிதி வழங்கி அங்கு தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளார்' எனத் தெரிவித்தார்
கருத்துகள்