முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ சனீஸ்வர பகவான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதத்திலிருந்து, மீன ராசி பூரட்டாதி 4-ஆம் பாதத்திற்கு நாளை இரவு பெயர்ச்சியாகிறார்

சிறப்புச் செய்தியாளர்:- ரெங்கநாதன் திருப்பதி                         கணிதப் பஞ்சாங்கத்தில் குரோதி வருஷம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி சர்வ அமாவாசை, அதற்கு சரியான ஆங்கில ஆண்டு 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதி நாளை இரவு 9.44 மணிக்கு அவரது சொந்த வீடான கும்ப ராசியிலுள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதத்திலிருந்து, மீனத்திலுள்ள பூரட்டாதி 4-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.


திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்தக் கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவான் தனது 3-ஆம் பார்வையால் கால புருஷ 2-ஆம் இடமான ரிஷப ராசியையும், 7-ஆம் பார்வையால் கால புருஷ 6-ஆம் இடமான கன்னி ராசியையும், 10-ஆம் பார்வையால் கால புருஷ 9-ஆம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.

கிரகங்களில் சனி கிரஹ பெயர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஒரு ராசியில் அதில் வருஷம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவமுள்ளது.


சனிபகவான் கொடுக்க நினைத்தால் வேறு எந்த ஒரு கிரகத்தாலும் அதைத் தடுக்க முடியாது சனி பகவானே இவ்வுலகில் நீதியை நிலை நாட்டுபவர்.
 இவரை தர்மகாரகன், கர்மாகாரகன், ஆயுட்காரகன் என்றெல்லாம் அழைப்பர். ஒருவருடைய சுய ஜாதகத்தில் சனிபகவான் சிறப்பாக அமையவில்லை என்றால் அவருடைய ஆயுளை குறைவாகவே நிர்ணயம் செய்ய முடியும்.
 ஆகவே சனி பகவான் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே தீர்க்க ஆயுசு உடையவர்களாக விளங்குகின்றனர்.
 ஒருவர் மோட்டார் வாகனங்களை இயக்கக்கூடிய வல்லமைகளை பெற சனி பகவானின் ஆளுமை மிக மிக முக்கியம்.
 அதேபோல நீதிமன்றங்களில் மிக முக்கியமான பொறுப்பாகிய நீதிபதிகளாக விளங்க கூடியவர்களுடைய ஜாதகத்திலும் சனி பகவானுடைய அமைப்பு மிக மிக சிறப்பாக அமைந்திருக்கும்.
 சனி பகவானின் தோஷங்கள் விலகவும் சனி ப்ரீத்தி  செய்யவும், கால் நடக்க முடியாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயங்க முடியாத வயோதிகர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு உதவுவதும், அன்னதானம் செய்வதும் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். சனிபகவானால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, விரையச் சனி, போன்ற கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் இதனை செய்வதால் நடப்பு வாழ்வில் செய்யக்கூடிய ஒரு பரிகாரமாக இதை சனிக்கிழமைகளில் விரதமாக இருந்தும் கடைபிடிக்கலாம்.


தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா?  என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். நிச்சயம் வேண்டினால் நல்லதே நடக்கும்.  சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடும் நிலையில், சனீஸ்வர பகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாகத் திகழும் பாண்டிச்சேரி யூனியன் திருநள்ளாறு மற்றும் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகில் குச்சனூர் சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் அருகில் பெருச்சிக்கோவில் (விரிச்சியூர்) ஒற்றை சனீஸ்வர பகவான் ஆலயங்களில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. 


திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம் பாண்டிச்சேரி யூனியன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு- கொம்யூன்  திருநள்ளாறு, வரலாறு குறித்துக் காணலாம் காரைக்கால் அருகில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரஹ கோவில்களில் ஒன்று தர்ப்பை அடர்ந்து வளர்ந்த காரணத்தால், இந்தப் பகுதிக்கு தர்ப்பாரண்யம் எப் பெயர் . பின்னர், நகவிடங்கபுரம் எனும் பெயர். இங்கு அமர்ந்திருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகை பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பார்வையிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய ஸ்தலம் இது நள்ளாறு என அழைக்க சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இந்தக் கோவிலானது  9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.



பின்னர் விஜயநகர நாயக்கப் பேரரசர்கள், இக்கோவிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற ஸ்தலங்களில் சம்பந்தர், சுந்தரர், அப்பர் பெருமான், மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் ஸதலத்தில் சுவாமிகளைப்  பாடியுள்ளனர். இந்த ஸதலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் உள்ளிட்ட அஷ்டதீர்த்தங்கள்  உள்ளன. மஹாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா, இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசனிவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.தேவர்களை மறுத்து, நிடத நாட்டு மன்னன் நளன் சக்கரவர்த்தியை கரம் பிடித்தாள், சேதி நாட்டு இளவரசி தமயந்தி. அதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாகவே சோதித்தனர். 

செல்வத்தை இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறிய சக்கரவர்த்தி நளன் பின்னர், சகல தோஷங்களும் நீங்க வேண்டி, தான் இழந்த இராஜ்ஜியம், மற்றும் குடும்பம்  மீண்டும் கிடைக்க வேண்டி, கலியுகத்தில் இறுதியாக  திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனிடம் சரணடைந்தார். இந்த ஷேத்திரத்தில் வழிபாடு செய்ததன் மூலம், தான் இழந்த ராஜ்ஜியம், மற்றும் குடும்பம், மன சந்தோஷம் அனைத்தும் தர்ப்பாரண்யேஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றார். எனவே, இந்தக்கோவிலின் மூலமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்க்கு, நளேஸ்வரர் என்ற பெயரும் வந்தது. அதேபோன்று,  நள தீர்த்தம் இந்த ஷேத்திரத்தில் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடி வழிபடுவதற்கு ஏற்றவாறு அமையப் பெற்றது. இவ்வாறு மூர்த்தி, ஸதளம், தீர்த்தம் ஆகிய மூன்றும்  நளச்சக்கரவர்த்தியின் பெயரைத் தாங்கியது. 

 அதாவது நளனைப் பின்தொடர்ந்த சனீஸ்வர பகவான்,  கோவிலினுடைய ராஜகோபுரத்தின் இடதுபுறத்தில், காக வாகனத்தில் நின்ற கோலத்தில் அபயஹஸ்தம் என்று சொல்லக்கூடிய அனுக்கிரக திருமுகத்தோடு, கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி, தனி விமானம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.             நள மஹாராஜா விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து, திருக்கோயில் அமைத்து இறைவனைப் பூசித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால், நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினார். இங்கு என்னைப்போல் சனி பகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் செய்து, துன்பம் போக்கி, நலம் பல செய்திடல் வேண்டுமென  வரம் கேட்டார். இரண்டாவதாக இந்த ஸ்தலத்தில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றார்‌. மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என வரங்களை வேண்டினார்.                                                                ‌.         -
விளம்பரம்-

                            -விளம்பரம்-                  இதை எம்பெருமான் ஈசனும், சனி பகவானும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு அவ்வாறே அருளினர். அந்த வகையில், இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால், இறைவனுக்கு நளலேஸ்வரர் என்ற பெயரும், திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும், இவ்வூருக்கு திருநள்ளார் என்ற பெயரும், புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்ற ஸ்தலமாகும் .மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக,  பகவான் என்ற பதத்தோடு அவருடைய திருநாமம் அமைய பெற்றிருக்கிறது. வேறு கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, ஈஸ்வர பட்டத்தை சனீஸ்வர பகவானுக்கு வழங்கி, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர் அருளால் சனீஸ்வர பகவானாக இவ்வாலயத்தில் அபயம் தரும் சாந்த மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  பொதுவாக ஒருவருடைய வாழ்நாள் என்பது 120 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு 30 வருடத்திற்கும் சனீஸ்வர பகவானுடைய ஏழரை சனியின் காலம் தனி மானிட வாழ்வை மாற்றுகிறது. இவைகள் மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி இவ்வாறாக நான்கு சுற்றுகளை உடையதாக, நான்கு முப்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி உள்ள காலங்களிலும் ஜாதக ரீதியாக 19 ஆண்டுகள் சனி திசை.அதில், சனி புக்தி நான்கு ஆண்டுகள் நடைபெறுகின்ற பக்தர்கள், இவ்வாறு பல வேண்டுதல்கள் நிமித்தமாகவும், ஜாதகர்கள் நளதீர்த்தம் சென்று, ஆத்ம பிரதக்ஷணம் வலமாகச் சுற்றி வணங்கி, குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும்.                                  -விளம்பரம்-                           

-விளம்பரம்-
நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து, வேறு ஆடை அணிந்த பிறகு, திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சன்னதியை வணங்கி, ஸ்ரீ  தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்கிய பின், பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே, இங்கிருக்கும் சனிபகவானைத் தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம்.எள் தீபம் ஏற்றுவது தொடங்கி, அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி, வாரத்தின் எல்லா நாட்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன்கள் கிட்டும் என்பது கணித ஜேதிடர் வாக்கு.கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நெய்வேத்தியம் செய்யலாம்.எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப் பெறுபவர்.நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி நற்பலன்களை பெற்று வாழலாம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்” இந்த நிலையில் கடந்த வாரம் ஆலயம் சார்பில் பாண்டிச்சேரி அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. கோவிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் நிவந்தமாக பசுக்களைத் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்த படி அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோவிலுக்குத் தர வேண்டிய பங்கினைத் தர வேண்டும். இதனால் அவர்கள் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் ஆயர் ஒருவர் இப்பொறுப்பிலிருந்தார். கணக்கர் பசுவின் பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோவிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்ததனால் இறைவன் கணக்கரை சூலம் எய்திக் கொன்றதுடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இந்த ஸ்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது.

கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது. வரலாற்றுத் தகவலிது.          .

தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். நிச்சயம் வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.                         மந்திரம் ஜெயம் :- "நீலாஞ்சனசமாபாஸம் ரவிபுத்திரம் யமாக்ரஜம்.

ச்சாயாமார்த்தண்டஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம் 

நீலாஞ்ஜந ஸமபாஶம் ரவிபுத்ரம் யமগ்ரஜம் 

சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஷைஶ்சரம்"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...