இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா
வழக்கில் உள்ளக விசாரணை நடத்த 3 உறுப்பினர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் அதன் படி நீதிபதி ஷீல் நாகு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை, உள் விசாரணையின் ஒரு பகுதியாக அமைத்துள்ளார்.
நீதிபதியின் வீட்டில் ஏற்பட்ட தீ கவனக்குறைவாக மீடியா அறிக்கையின் படி, கணக்கிடப்படாத பணத்தை மீட்டெடுக்க வழிவகுத்தது. மேலும் டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மார்ச் மாதம் 14 ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், நீதிபதி வர்மா வீட்டில் தீ பற்றி ஏரிவதாகக் கூறினர். இதையடுத்து வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் இரவு 11.43 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்றனர். வீட்டுப் பொருட்கள் எல்லாம் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த தீயை கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் ஆனது.
தீயை அணைத்த உடனேயே, தீ விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தோம். அதன்பிறகு, தீயணைப்புத் துறையினர் குழு அந்த இடத்தை விட்டு வெளியேறியது. எங்கள் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கையின் போது எந்தவிதமான பணத்தையும் கண்டுபிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்யக் கோரவேண்டும், அவர் மறுத்தால், அவரை நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக நீதிமன்ற விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்க வேண்டும் என கொலீஜியம் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் 1999-ஆம் ஆண்டு வகுத்த நடைமுறையில், அரசியல் சாசன நீதிமன்ற அமர்வு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவரிடமிருந்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விளக்கம் பெற வேண்டும் எனவும்.
அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமைத்தார் அதன் அடிப்படையில் நீதித்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயாவிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேட்டுள்ளதாகத் தகவல்.
விசாணை முடிவுகள் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படலாம் அல்லது அரசியல் சாசன சட்டத்தின் 124(4)வது பிரிவின் கீழ் நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். வீட்டில் பணம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத நீதிபதி யஷ்வந் வர்மா நேற்று விடுமுறை எடுத்தார். ஹோலி பண்டிகைகா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 37 கோடி ரூபாய் பணம் கண்டு பிடிப்பு.
நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் 11 கோடி பணம் எரிந்தது போக 26 கோடிகள் வரை மீட்பு. நீதிபதியின் வீட்டில் தீ விபத்திற்கு பின் கண்டெடுக்கப்பட்ட கருகிய ரூபாய் நோட்டுகளின் வீடியோவை உச்ச நீதிமன்றம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டது.
இவர் எந்த அளவிற்கு நீதிமானாக இருந்திருப்பார்?நீதிபதி யஸ்வந்த் வர்மா கோடிக்கணக்கில் பணம் இருந்ததாகச் சொல்லல்படும் நிலையில் அந்த யஸ்வந்த் வர்மா வழங்கிய தீர்ப்புகள் ?பின்னணியில் ஒரு பார்வை தேவை.
கருத்துகள்