மியான்மரில் (பிரம்மதேசம் எனும் பர்மா) இன்று நண்பகல் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம். தரையிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. மக்கள் வீடுகளிலிருந்து அலறியடித்த படி வெளியே ஓடி வந்தனர்.
சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தாய்லாந்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம் உயிர் சேதங்கள் இனிமேல் தான் தெரியும்.
நில நடுக்கம் சீனா, தாய்லாந்து, நாடுகளிலும் உணரப்பட்டது.
காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்ப டி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் விழுந்தது.
பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
பாங்காக்கிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்தக் கட்டடத்தில் 50 கட்டுமான தொழிலாளர்கள் இருந்தனர். ஏழு பேர் தப்பித்த நிலையில், 43 பேர் இடித்த கட்டடத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். மண்டலே விமானநிலையத்தில் பதட்டமான நிலை நிலவுகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதி செய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது.
அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது.
''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது.
ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்வதற்கு பல ஊடகங்கள் முயற்சி செய்கிறது.மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதல் ராணுவத்தின் ஆட்சி நடந்து வருவதால், தகவல் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது.
இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.
தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுக இயலவில்லை. தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.
பாங்காங்கில் உள்ள கட்டிடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவையல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு முக்கியமானதாக இருக்கலாம்.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது தான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.
"நான் மிகவும் பதட்டத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.""எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கத்திக்கொண்டிருந்தனர்,
பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்து கொள்ள நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்," என்கிறார்.
"பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்," எனத் தெரிவித்தார்.
The Meteorological Department has issued a warning about an earthquake in Myanmar, measuring 8.2 on the Richter scale and at a depth of 10 km (ராய்ட்டர்ஸ்) மியன்மார் டெலிகிராமில் மாநில தொலைக்காட்சி: குறைந்தபட்சம் 144 பேர் நிலநடுக்கத்தால் இறந்தனர் மற்றும் 732 பேர் காயமடைந்தனர் மியன்மார் MRTV இல் தலைவர் மியான்மர் ஜுண்டா: இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் எந்த நாட்டையும் எந்த அமைப்பையும் உதவி மற்றும் நன்கொடை அளிக்க அழைக்க அனுமதித்துள்ளன
கருத்துகள்