முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விண்வெளியில் மக்கள் கால்பதிக்க ஸ்பேஸ் எக்ஸ் மூலம் காலம் விரைவில் கை கூடுகிறது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்களிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில் மோர் பாதுகாப்பாக பூமிக்கு


  இந்திய நேரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கிய நிலையில் மிதந்த


விண்கலத்திலிருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையசைத்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.




புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, 17 மணிநேரப் பயணத்தில் பூமியை அடைந்தனர்.




 ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல ஆபத்தான மறுநுழைவைக் கடந்து பூமியை நோக்கிப் பயணித்து. பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, வேகம் குறைக்கப்பட்டு, நீரிலிறங்கிய நிலையில் மிதந்தது. இந்த நான்கு விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி இரவு 11:19 மணிக்கு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் எலிங்டன் ஃபீல்டுக்கு வந்தனர்.




 அவர்களுக்கு விண்வெளிப் பயணத்திற்குப் பின் மருத்துவப் பரிசோதனைகளும், பயிற்சிகளும் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அவர்கள் வந்த விண்கலம் ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற செயல்முறையின் மூலம் கடல் பகுதியில் இறங்கும் போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.




சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர். டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.வழக்கமான நடைமுறையாகும்.விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில்




இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்த விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக் கண்களில்  தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்டதற்கு மாறாக பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்ட சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்ஸ்மோரும் அங்கு பல சாதனைகளைப் படைத்தனர்.


இந்த விண்வெளிப் பயணத்தின் போது அவர்கள் 900 மணி நேரம் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். நாசாவின் விண்வெளி செயல்பாட்டு இயக்குநரகத்தின் ஜோயல் மொண்டல்பானோ இந்தத் தகவலைக் கூறுகிறார். சுனிதா, புட்ச் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் 150 பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும்  கூறுகிறார்.




நாசா விண்வெளி வீரர்கள் செய்திருக்கும் பணி "தேசத்திற்கு நன்மை பயக்கும்" என்றும்,  செவ்வாய் கிரகத்தில் மனிதரைத் தரையிறக்கும் இலக்கை நாசா அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும்  கூறுகிறார். தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இருவருக்கும் உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிகிறது.



சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாசா சேர்த்தது.

1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்த சுனிதாவின் தந்தை குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்ட தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.


சுனிதாவின் தாயார் போனி பாண்டியா. ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3வது மகளாக 1965 ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ்.

அமெரிக்காவின் நீதம் எனுமிடத்தில் பள்ளிக் கல்வியையும், புளோரிடாவில் பொறியியல் படிப்பையும் முடித்த பிறகு 


அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998 ல் நாசா அழைத்துக் கொண்டது.


சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.

விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார்.



விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தபடி கையாண்டார்சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவர் ஒரு விமானி. தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றுகிறார்.




1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராகத் தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்ற திறமையான போர் விமானிமாவார்.ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல்  என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படும் ஒரு விண்வெளி வாகனம். இது பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சரக்குகள் மற்றும் விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டிராகன் கேப்ஸ்யூல் இரண்டு பதிப்புகளில் உள்ளது: கார்கோ டிராகன் (Cargo Dragon) மற்றும் க்ரூ டிராகன் (Crew Dragon). கார்கோ டிராகன் சரக்குகளை மட்டும் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது, அதே நேரத்தில் க்ரூ டிராகன் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கும், பூமிக்கு திரும்புவதற்கும் உதவுகிறது.



டிராகன் கேப்ஸ்யூல் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது, மேலும் தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் விண்வெளி வாகனம் என்ற பெருமையைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டில், க்ரூ டிராகன் முதல் முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது, இது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த வாகனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது செலவை குறைக்கிறது மற்றும் விண்வெளி பயணங்களை மிகவும் சாத்தியமானதாக்குகிறது.




டிராகன் கேப்ஸ்யூல் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மைக்காக பாராட்டப்படுகிறது. இது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக விண்வெளி பயணங்களின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது.  விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு ? அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்பது பேரு!   நாம் பார்க்கும் விண்மீன்கள், கோள்கள் மற்றும் சூரியனுக்கும், சந்திரனுக்கும், விண்வெளி வீரர்கள் பார்த்த சூரியன் மற்றும் நிலவுக்கும் வித்தியாசம் அதிகம் தான். விண்வெளியில் மக்கள் கால்பதிக்க ஸ்பேஸ் எக்ஸ் மூலம் காலம் விரைவில் கை கூடுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...