ஊழலுக்கு ஆதரவாக அமலாக்கத்துறை விசாரணைக்கெதிராக டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மூன்று மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்திய அரசின் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில டாஸ்மாக் நிர்வாகம் ஊழலுக்கு ஆதரவாக 3 மனுக்களை தாக்கல் செய்தனர்.
மத்திய அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு எதிராக மாநில டாஸ்மாக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழ்நாடு மாநில விற்பனை சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC), அதன் வளாகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் (ED) சோதனைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை டாஸ்மாக் அணுகியதில். மதுபான விற்பனை நிலையங்கள், கட்டாய அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட, ஒரு மதுபானப் புட்டிக்கு ரூபாய் 10 முதல் ரூபாய் 30 வரை அதிகமாக வாடிக்கையாளர்களிடம் பில் GST இல்லாமல் வசூலிப்பதாகவும், இது ஒரு முறையான அதிக விலை நிர்ணய யுக்தியைக் குறிக்கிறது. மேலும் வரி ஏய்ப்பு உள்ளிட்டவை அடங்கும்,
மாநிலத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சி , அமலாக்கத்துறையின் ஈடுபாட்டை விமர்சித்துள்ளது , மத்திய அரசு தனது புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கலை மேலும் அதிகரிக்கப் பயன்படுத்துகிறதென்று குற்றம் சாட்டியதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி இந்தக் கூற்றுக்களை நிராகரித்துள்ளது, பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஊழல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழல் ஒரு புறம், என்றால் மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையின் ஊழல் மற்றொரு புறம்.
விளைநிலங்கள் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் வீட்டு மனைகளாக மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை இயக்குனரக(DTCP) அனுமதியின் பேரில் மாற்றப்படுகிறது. அந்த மனைகளுக்கு சதுர அடிக் கணக்கில் மதிப்பு நிர்ணயம் செய்வதில் லஞ்ச ஊழல் முறைகேடுகள் என்பதைச் சொல்லி மாளாது. ரியல் எஸ்டேட் RERA உரிமம் பெற்ற மற்றும் பெறாத உரிமையாளர்கள்
மனையிடங்களைப் பிரிக்க சதுர அடி அளவு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யக்கோரி மாவட்டப் பதிவாளர்களுக்கு விண்ணப்பம் செய்தால் அதற்கென தனித் தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயமுள்ள நிலையில், அந்த லஞ்சமும் மனையை வாங்குவோரின் கொள்முதல் விலையில் சேர்க்கப்படுகிறது. -விளம்பரம்- -விளம்பரம்- இந்த நிலையில், இந்த மனைகளை பிரிப்பதற்கு முன்னரே ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே மனைகளுக்கு விலை நிர்ணயம் (லஞ்சம் பெற்றுக்கொண்டு) செய்ய வேண்டும் என்ற 'எழுதப்படாத' உத்தரவு இருப்பதாக பதிவர்கள் புலம்புகிறார்கள் இது மாநிலத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் நன்றாகவே அறியும் நிலை உள்ளது என்று சொல்லப்படுகிறது ஆனால் நடவடிக்கைகள் இல்லை.
அதாவது பிரித்த மனைகளுக்கு விலை நிர்ணயம் (Price Fixation) செய்வதற்கு லஞ்சம் என்றிருந்த நிலை தொடரும் அதே நிலையில், மனைகளை பிரிப்பதற்கு முன்னரும் லஞ்சம் என்ற 'சூழல்' உருவாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சனங்கள் முன் வைக்கும் நிலையில் இதனால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் சிக்கித் திணறினாலும், இறுதியில் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயத்திற்கு பொது மக்களே ஆளாகிறார்கள்.
'டாஸ்மாக்' ஊழலையே மிஞ்சி விடும் 'மனை பிரிப்பு' ஊழல். அமலாக்கத்துறையின் பார்வையில் வர வேண்டும் என்பதே பலரின் விருப்பம். பத்திரப்பதிவுத் துறையின் மீது ED கவனம் செலுத்தப்படுமா? என்பது எழு வினாவாகும்!.
அமலாக்கத் துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஒரு பக்கம் சிக்கியுள்ள நிலையில், மறுபக்கம் செந்தில் பாலாஜி பிடியில் பல உண்மைகள் சிக்கியுள்ளது. என்பதே அமலாக்கத்துறை தகவல். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் உள்ள 50 சதவிகித மதுபானங்கள் விற்பனைப் பார்கள் லைசென்ஸ் இல்லாமல் கரூர் நபர்கள் என்று சொல்லக் கூடிய பினாமி நபர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுக்குள் வந்தது. அதாவது தமிழகத்தில் இயங்கி வரும் பார்களில் சுமார் 50 சதவிகிதம் செந்தில் பாலாஜி நேரடியாக எடுத்து நடத்தி உரிய உரிமங்கள் இல்லாமல் நடத்தி வருவதாகவும்.
இந்த மனமகிழ் மன்றங்கள் எனும் பார்கள் கணக்குகளை அனைத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தான் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்போது காணமல் தலைமறைவான நிலையில் உள்ளார். மேலும் தற்போது டாஸ்மாக் நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் சுமார் 1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஒரு லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ.கிருஷ்ணசாமி ஆளுநர் ஆர் என்.ரவியிடம் கடந்த ஆண்டு புகார் அளித்தார் அதில் அரசாங்கத்திற்கு கணக்கில் கட்டப்படாத மது பாட்டில்கள் , கரூர் கம்பெனி நேரடியாக நடந்தும் பார்கள் மூலமாக விற்கப்படுவதாக கூறப்பட்டது. -விளம்பரம்-
-விளம்பரம்- அந்த வகையில் தற்பொழுது டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், இதில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று ஆளுநர் தரப்பில் மனுவில் கூறப்படுகிறது. இதில் அரசுக்கு கணக்கில் கட்டப்படாமல் விற்கப்படும் மதுப்புட்டிகள் மூலம் வரும் வருமானம் கரூர் கம்பெனி மூலம் வசூல் செய்யும் செந்தில் பாலாஜி,
மாதாமாதம் சில முக்கிய பிரமுகர்களுக்கு பெரும் தொகையை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதாவது மற்ற மொத்த அமைச்சர்கள் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு மாதாமாதம் கொடுக்கும் பணத்தை விட செந்தில் பாலாஜி ஒருவர் கொடுக்கும் பணம் பல மடங்கு அதிகமென்பதால், கட்சியின் செல்லப் பிள்ளையாகவே மாறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி என அரசியல் தலைவர்கள் பலரும் பேசும் நிலையில்.
அமலாக்கத்துறைமின் பிடியில் பல திமுக அமைச்சர்கள் சிக்கி இருந்தாலும் கூட, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது, திமுக முக்கிய நபர்கள் பதறி அடித்து கொண்டு, செந்தில் பாலாஜியை நேரில் சென்று சந்தித்ததன் பிண்ணனியில், எங்களைப் போட்டு கொடுத்து விடாதே என்று செந்தில் பாலாஜியிடம் தெரிவிக்கத் தான் என்றும், -விளம்பரம்-
-விளம்பரம்- அதே நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினர் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாதபடி ஆதாரங்கள் அமலாக்க துறையினரிடம் சிக்கியுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் பணத்தை யாரிடம் கொடுத்தார் என்கிற உண்மையை வாங்கி விட்டால் போதும் என்ற நிலைக்கு விசாரணை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறது அமலாக்க துறை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த முறை கைது செய்யப்பட்ட போதே, அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால் இதில் சம்பந்தப்பட்ட மறைமுக நபர்கள் பலரை அமலாக்க துறையிடம் போட்டு கொடுத்து விடுவார் என்கிற பயத்தில் தான், இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்தார் என அரசியல் தலைவர்கள் பலர் கூறுகிறார்கள், அதன் பின்பு ஜாமீனில் வெளிவந்த பின்னர் மீண்டும் அதே துறையில் அமைச்சர் பதவி வழங்கி செந்தில் பாலாஜியை திமுக பலப்படுத்தும் நிலையில்தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய நபர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அதாவது அந்த முக்கிய நபர்கள் மத்தியில் என்னை மீண்டும் சிறை செல்லாமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு, அதையும் மீறி நான் சிறை செல்ல நேரிட்டால் உங்களை போட்டுக் கொடுத்து விட்டு நான் தப்பித்து விடுவேன் என செந்தில் பாலாஜி தெரிவித்து வருவதாக ஒரு தகவல் பொது வெளியில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் TAMIL NADU STATE MARKETING CORPORATION LTD (TASMAC) /எதிர்/
DIRECTORATE OF ENFORCEMENT வழக்கு WP/10352/2025, மற்றும் WP/10348/2025 மற்றும் WP/10355/2025 மற்றும் WMP/11657/2025 மற்றும். WMP/11655/2025 மற்றும் WMP/11654/2025, ஆகியவை மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ஒழியத்தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒழிந்த கதை அதுபோல ஊழலை ஆதரித்து அரசு பணி செய்யும் உயர் அலுவலர்கள் டாஸ்மாக் ஊழலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தை நாடியது தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.மார்ச் மாதம் 6- ஆம் தேதி முதல் 8- ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் நடத்திய சோதனையையும், ஆவணங்களைப் பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதமென அறிவிக்க வேண்டும்’’ எனக்கூறப்பட்ட
மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி ஆஜராகி வாதிட்ட போது :-
``டாஸ்மாக் மாநில அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோதனை நடத்த வேண்டுமென அமலாக்கத்துறை இயக்குநர், துணை இயக்குநர் பதவிக்கு குறையாத நபர்கள் தான் செல்ல முடியும். அல்லது இயக்குநர் அங்கீகரித்த அலுவலர்கள் தான் சோதனை செய்ய முடியும். அதற்கு முன்பு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதற்கு முகாந்திரமிருக்க வேண்டும். அங்கு சட்டவிரோதப் பணமோ அல்லது அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களோ உள்ளது என்பதற்கு போதிய முகாந்திரமுள்ளது என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
3 நாட்கள் சோதனை நடந்துள்ளது. பெண் ஊழியர்களை 3 நாட்களும் நல்லிரவு வரை வைத்திருந்தனர். பெண் ஊழியரை நல்லிரவு 1 மணிக்கு வெளியில் அனுப்பி விட்டு, காலை 8 மணிக்குள் வந்து விட வேண்டும் என்று கூறி கொடுமை செய்துள்ளனர். ஆண் ஊழியர்களை விடவேயில்லை. ஆவணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். சுமார் 60 மணி நேரம் இந்த சோதனை நடந்துள்ளது. பணப் பரிவர்த்தனையில் என்ன சட்டவிரோதம் நடந்தது என்பதைக் கூறவில்லை.” என்றார்.
நீதிபதிகள்: ``ஒட்டுமொத்த அலுவலகத்தையும் 3 நாட்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? இந்த 3 நாட்கள் நடந்த சோதனையின்போது பதிவான கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உள்ளதா? ஏன் திடீரென அலுவலகத்துக்குள் நோட்டீஸ் வழங்காமல் சோதனை செய்தீர்கள்?” (அப்போது தான் மறைக்க முடியும்)
அமலாக்கத்துறை சார்ந்த அரசின் சொலிசிஸ்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: `அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
நீதிபதிகள்: ``மும்பை உயர்நீதிமன்றம் எப்போது சோதனை செய்ய வேண்டும் எனத் தெளிவுப்படுத்தியுள்ளது. இரவில் சோதனை செய்ய முடியாது. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதற்காக 3 நாட்கள் அலுவலர்கள், ஊழியர்கள் யாரையும் வெளியில் விடவில்லை. விரிவான பதில் மனுவை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்.”
மாநில அரசின் அட்வொகெட் ஜெனரல்: `எங்களிடம் கண்காணிப்புக் கேமரா பதிவு முழுவதும் உள்ளது.’
மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்திரி: `மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.’
நீதிபதிகள்: `இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு தள்ளி வைக்கிறோம். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதில் குற்றச்சாட்டுக்கான எப்.ஐ.ஆர்கள், வழக்குக் குற்றச்சாட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் அலுவலர்கள் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் அதுவரை நிறுத்தி வைக்கவேண்டும். விசாரணையை 25- ஆம் தேதிக்கு தள்ளிக்கிறோம்.” என்றனர்.நீதிபதிகள், அமலாக்கத் துறை தனது அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் கேள்வி எழுப்புகிறோம் எனக் கூறி, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
கருத்துகள்