இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று கூறப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து அவரது சகோதரி, "நீரிழப்பு காரணமாக டிரிப்ஸ் ஏத்தினாங்க. இப்போ பரவாயில்ல. டிரவல்னால அவருக்கு டயர்ட் அவ்ளோ தான்" என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்புகளும் வரவில்லை. ரஹ்மானின் health bulletin வெளியிட்டனர்.
அவர் பூரண நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அண்மையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ரஹ்மான் அமைத்த இசை, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
ரமலான் நோன்புக் காலம் என்பதால் ரஹ்மான் நோன்பைக் கடைப்பிடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரஹ்மான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் உலக அளவிலும் இசையமைத்து வருவதால் ஹைதராபாத், மும்பை, லண்டன் என அவ்வப்போது சென்று வருவார்.
லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலை தூங்கி எழுந்த ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி இருந்தது. இதனால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு பின்னர் வெளிவநதார். அவருக்கு அறுவைச்சிகிச்சை தேவையாக இருக்கிறது என்பதே உண்மை தகவல்.
கருத்துகள்