அதிர்ஷ்டம் என்பது தானே அமைய வேண்டும் உழுகின்ற போது
தொழுகின்ற தெய்வம் பிறந்தது அந்த நிலத்தை ஆண்ட மன்னர் ஜனக மஹாராஜருக்கும், குறிஞ்சி மலைப் பகுதிகளின் மன்னர் நம்பிராஜனுக்கும் பாண்டிய நாட்டின் கடல் பரப்பில் பரதவ மன்னன் மலையத்துவசனுக்கும் வாய்த்த நிகழ்வு தான் தெய்வமே மகளாகப் பிறந்த நிகழ்வு தான் அதிர்ஷ்டம். ஒருவரின் வாழ்வில் எதிர்பாராத நல்ல காரியங்கள், வாய்ப்புகள், நன்மைகள் நிகழ்வதும், முயற்சியின்றிக் கிடைக்கும் பாக்கியம் எனக் கூறலாம். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.
அப்படி இருக்க உழைப்பு, உழைப்பு என உண்ணவும், உறங்கவும் நேரமின்றி உழைப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அதிர்ஷ்டம் வருமென்று உழைக்காமல் அதிர்ஷ்டக் குதிரையை நம்பி வாழ்வைத் தொலைப்பவர்களையும் பார்க்கிறோம்.
உழைத்தவர்களெல்லாம் உயர்ந்துவிடவுமில்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தை துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப் போவதுமில்லை. மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி வேகம் மற்றும் ஆர்வமுண்டு.
அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை. கோட கோபுரங்கள் கட்டி
மாடமாளிகையில் வாழ்பவர்கள் முதல் ஓலைக் குடிசையில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப்பம், தனி மரியாதை, தனிக் கவனமுண்டு.
அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால் வாஸ்துவால் அதிர்ஷ்ட எண்கள் மற்றும் அதிர்ஷ்ட கற்களால் அழைக்க முடியுமா? தேடும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் முகம் காட்டுவது ஏன்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது ஐந்தாமிடம். ஒருவரின் ஜனன காலத்தில் ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி மற்றும் ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களே அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது.
மனோஜ் பிறந்த 1976 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவில்லை. அந்த சமயத்தில் அவரது தம்பி ஜெயராஜ் நல்ல வேலைக்கு சென்றார். பாரதிராஜா இயக்குநராகும் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் தான் மனோஜ் பாரதிராஜாவின் சொந்த ஊரான அல்லிநகரத்தின் அருகில் உள்ள கம்பத்தில் பிறந்த செய்தி பாரதிராஜாவுக்கு தெரியவந்தது நேரத்தில்தான் 16 வயதினிலே படத்தைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு பாரதிராஜாவை சந்திக்க வந்தார்; நான் பணம் தயார் செய்துவிட்டேன். படத்தை ஆரம்பிக்கலாம் எனச் சொல்ல;
தனக்கு மகன் பிறந்த விஷயத்தை பாரதிராஜா சொல்ல அங்கிருந்தவர்கள் சந்தோஷமடைந்தார்கள். பிறகு மகனைப் பார்க்க ஊருக்கு செல்லலாம் என்று நினைத்தால் செல்வதற்கு பணமில்லை. எங்கெங்கோ அலைந்தும் பணம் கிடைக்காத சூழலில்; பாரதிராஜாவின் நண்பர் ஆறுமுகம் என்பவரது மனைவியின் வளையலை அடமானம் வைத்து பணம் கொடுத்தாராம். அதில் தான் பாரதிராஜா மனோஜை பார்க்கச் சென்றாராம். அதுமட்டுமின்றி மனோஜ் பிறந்த நேரத்தில் தான் தனது முதல் பட வாய்ப்பு கிடைத்ததால் மகன் தான் தனது அதிர்ஷ்டம் என்று நினைப்பாராம் பாரதிராஜா. அப்படிப்பட்ட மகனைத்தான் இப்போது இழந்து நிற்கிறார்.
அதே நேரத்தில் பிரபஞ்சத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடிய தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி ஒருவருக்கு வழங்கும் அதிர்ஷ்டத்தை பெற என்ன தகுதி வேண்டும் என்பதை சிறு புராணக் கதை அறிவோம்.
"அர்ஜுனனும், கிருஷ்ணரும் உலாவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தார். முதியவருக்கு மகிழ்ச்சி. `ஆஹா. இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்குப் போதுமே!' என்றெண்ணி வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது இதைக் கவனித்த திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்றான்.
சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலை உயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும் படி கூறினார். முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணிலிருந்த பானையில் ஒளித்து வைத்தார்.
இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்று பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்தது.
அவள் பானைத் தண்ணீருடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்தக் குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றித் திரும்பினார்.
சில தினங்கள் கழித்து மீண்டும் மாயக் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரைப் பார்க்கும் போது, அவர் நடந்ததைக் கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்துவிடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரைப் பின் தொடர்ந்தார்.
செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும் படி முதியவரிடம் கேட்டான்.
யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.
இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்தவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல். சந்தோஷ மிகுதியால் `சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்.
அதேநேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.
அர்ஜுனன் கண்ணனிடம், `வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே… ' இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலை உயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவை இரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே எனக் கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
இந்தக் கதையின் பொது நலமுள்ள வர்களுக்கும், தான, தர்மம் செய்பவர்களுக்கும், பாவ புண்ணியம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ஷ்டக் கடாட்சம் கிடைக்குமென்றார். அத்துடன் எந்தச் செயலாக இருந்தாலும் அதன் பலன் கிடைக்கப் போதிய கால அவகாசம் தேவை அதிர்ஷ்டக் காற்று ஒருவரைத் தேடி வரும் வரை பொறுமையாக விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இதுவே உலகின் நியதி. 48 வயதென்பது இவ் உலகை விட்டு மரணம் பிரிக்கும் வயதல்ல, ஆனால் விதி வலிமையனது இதில் அதுவல்ல
இந்த உலகில் மஹா சூட்சுமமான விஷயங்கள், எப்படிச் சிந்தித்தாலும் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் பல உண்டு, அதில் ஒன்று சில குடும்பங்களில் வரும், பிறப்பு
சில வீடுகளில் ஒரு குழந்தை வந்த பின் அந்த வீடே மிகப் பெரிய அளவில் உயரும் பெரும் பெரும் வசதி வாய்ப்பும் வரும், அதுவரை இல்லாத அந்த வாழ்வு அந்த குழந்தைக்கானது என்பதையும் இந்த செல்வமெல்லாம் அது அனுபவிக்க என்பதும் கூர்ந்து கவனித்தால் நன்கு விளங்கும்
இதுவே ஜாதகம் அல்லது அமைப்பு
சில பிறப்புக்கள் அதை முதுமை வரை அனுபவிக்கும், சில விதிக்கபட்ட காலம் முடிந்ததும் அது சென்றுவிடும்
இதைத்தான் பூர்வஜென்ம புண்ணியம் அல்லது கணக்கு என்பார்கள்,விதி என்பார்கள் ஹிந்துக்கள் அவர்கள் ஜாதகம் சொல்வதும் அதுதான்
1970 ஆம் ஆண்டுகளில் தேனி அல்லிநகரத்து சின்னச்சாமி என்ற பால்பாண்டியாக, ஆண்டிப்பட்டி பகுதியில் NMEP பணியாளராக பின்னர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆக வாழ்க்கை துவங்கிய சாமானிய மனிதர் சினிமா ஆர்வத்தில் கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் ஒரு எடுபிடியாக இருந்தவரை இந்த உலகில் யாருக்கும் தெரியாது, அவரின் வாழ்வு 1976 ஆம் ஆண்டில் இந்த மகன் மனோஜ் பிறந்த பின்பே திடீரென மாறிற்று அவரது வாழ்க்கை
அதுவரை போராடிக் கொண்டிருந்த சின்னசாமி என்ற பால்பாண்டி யான இயக்குனர் பாரதிராஜா என '16 வயதினிலே' முதல் படத்திலேயே உச்சம் தொட்டார், அந்தக் குழந்தை வளர வளர பாரதிராஜாவும் வேகமாகவே வளர்ந்தார்
'மனோஜ் கிரியேஷன்ஸ்" என தன் சொந்தக் கம்பெனியினை இயக்குனர் பாரதிராஜா தொடங்கி சகோதரர் செல்லக் கண்ணு பார்த்து வந்தார். பொன்னமராவதி வடுகநாதன் பாரதிராஜா வின் மேலாளர் "முதல் மரியாதை" எனும் மகத்தான படம் செல்வராஜ் உதவியில் எடுக்குமளவுக்கு வளர்ந்தார்
அந்தப் படத்தின் தொடக்கக் காட்சியில் "மனோஜ் கிரியேஷன்ஸ்" என பெயரிடபட்ட முதல் பிரேம் காட்சியில் 10 வயதுச் சிறுவனாக மனோஜ் ஓடிவரும் போது , இது தான் நம்ம பாரதிராஜா மகன் என எல்லோரும் அந்த கிராமத்தில் உள்ள டூரிங் திரையரங்குகளில் சொல்லிக் கொண்டார்கள்
அப்போது முழங்கியது தான் 'என் இனிய தமிழ் மக்களே' எனும் வாசகம்
அவனை அப்படித்தான் அறிமுகபடுத்தினார் பாரதிராஜா, அந்தப் படத்தின் தொடக்கக் காட்சியில் ஓடிவரும் அந்தச் சிறுவனை எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது
அதன் பின் அவரை தாஜமஹால் படத்தில் அறிமுகபடுத்தினார் பாரதிராஜா, இன்னும் சிலபடங்களில் அவர் நடித்தார், நடிகராக அவர் பிரகாசிக்கவில்லை என்றாலும் "கடல் பூக்கள்" அவருக்கு அழகான அடையாளம் தந்த படம்
செட்டுகள் போட்டு ஸ்டுடியோ அரங்கத்திற்குள் அதுவரை எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் கோவணத்துடன் கதாநாயகனாக வரமுடியும் என்ற ராஜபாட்டை என்ற பெருமைக்குரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை சமூகத்தின் நீதியை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இசை ஞானி ஞானதேசிகன் என்ற நண்பரான இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரூபினி, ரோஜா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர் சில படங்களில் நடித்த நடிகர் பாரதிராஜா கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி, பி. புல்லையா, எம். கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, ஏ. ஜெகந்நாதன் ஆகிய இயக்குனருக்கு உதவி இயக்குநராகப் பங்காற்றினார். -விளம்பரம்-
-விளம்பரம்-இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். கிராமத்துத் திரைப்படம் என்ற புதிய வகையை உருவாக்க அப்போதைய நடைமுறையில் இருந்த ராஜா ராணி தர்பார் காட்சிகளை உடைத்தார். பதினாறு வயதினிலே இப்போதும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும். சப்பானியும், பரட்டையும் சமூகம் பார்க்க வைத்தது இந்தத் திரைப்படம் பற்றி, பாரதிராஜா கூறிய தகவல்: "இந்தப் படம் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை கலைத் திரைப்படமாக இருக்க வேண்டியது", ஆனால் வணிக ரீதியாக வெற்றிகரமான வண்ணப் திரைப்படமாகவும், பல முக்கியமானவர்களின் வாழ்க்கைக்கான தொடக்கப் புள்ளியாகவும் மாறியது. இவரது அடுத்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில் முதற் திரைப்படம் போன்றே வெற்றியைத் தந்தது. இறுதியில் பாரதிராஜா கிராமப் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரைப்படம் எடுக்கும் திறன் கொண்டவர் என்ற விமர்சனங்களைக் கொண்டு வந்தார். இதனால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை உருவாக்க வழிவகுத்தது. பலரது கதை இவர் பெயரில் உருவாக்கப்பட்டது ஒரு மனநோயாளியான பெண் வெறுப்பாளரைப் பற்றிய இத்திரைப்படம் கருத்தாக்கம், தயாரிப்பு என முற்றிலுமாக மேற்கத்திய பாணியில் உருவாக்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டில் அந்திமந்தாமரை படத்திற்காக மற்றொரு தேசிய விருதைப் பெற்ற இயக்குனர் பாரதிராஜா அதே புகழின் உச்சியில் இருந்தார் .பாரதிராஜாவின் உதவியாளர்கள் தான் இயக்குனர் பாக்யராஜ், காலஞ்சென்ற மணிவண்ணன், காலஞ்சென்ற மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் பாரதிராஜா 2004 - ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இந்திய அரசிடமிருந்து பெற்றவர் .
கடந்தவருடம் இதய அறுவை சிகிச்சை சிச்சையினை செய்ததாக செய்திகள் உண்டு, இப்போது அதே இதயசிக்கல் காரணமாக அவர் இல்லை திரும்பத் திரும்ப யோசித்தாலும் இத்தனை புரிந்துகொள்ள முடியாது, ஏன் பாரதிராஜாவுக்கு ஒரு மகன் வந்தபின் உச்சம் தொடவேண்டும், முதிர்ந்த வயதில் அந்த சின்னசாமி என்ற பால்பாண்டியான பாரதிராஜா அந்த மகனின் பிரிவினை கண்முன் பார்த்து கலங்கிக் கதறவேண்டும்?
இதெல்லாம் எங்கோ வகுத்த விதி
சில பிறப்புக்கள் செல்வத்தோடு வரும் ஆனால் அந்த செல்வம் நிம்மதி தராது முழுமையான வினை மகிழ்த் தராது
பெரும் பெயர், புகழ், அந்தஸ்து, எந்த முதலமைச்சரையும் சந்திக்கும் உரிமை என என்னென்ன கிடைத்தாலும் பாரதிராஜா ஏங்கிய விஷயம் தன் மகனை சிறந்த நடிகராக்குவது! அதற்காக அவரின் உருவத் தோற்றத்துக்கு இந்தக் கனவு சரிவருமா என்று வரும், காரணம் உருவம் கண்டு இயக்குனர் பாரதிராஜா யாரையும் நடிகராக்கவில்லை, அழகானவர் என பெயரெடுத்த கமலஹாசனையே பாலா படம் போல் உருமாற்றி கோவணம் கட்டவைத்துத் தான் அவர் ஜெயித்தார்
ஆனால் அதெல்லாம் பொய்த்து போன கணக்காகி விட்டது, தமிழ்நாட்டில் அரசியலும் சினிமாவும் கணிக்க முடியாதவை, யார் வெல்வார்? யார் தோற்றார்? என்பதெல்லாம் கணிப்பது கடினம்
அப்படியான நிம்மதியின்மையில் பாரதிராஜாவும் சிக்கினார், பாக்யராஜுக்கு வந்த அதே சோகம் பாரதிராஜாவினையும் தாக்கியது, எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை
இயக்குனர் நடிகர் எஸ்.ஏ சந்திரசேகரரை, அவர் மகன் நடிகர் விஜய், மலையாள பாசிலை அவரது மகன் பகத்தை பார்க்கும் போது அவரின் மனம் சல்லடை சலித்திருக்கலாம். - விளம்பரம் -
- விளம்பரம் -மகனை பிரபல நடிகனாக்க முடியாத சோகத்தைத் தாண்டி இனி மகனே இல்லை என்பது அவர் பெற்றுக்கொண்ட வல்விதி,
எந்தக் குளத்தில் மீன் நீந்துமோ அதே குளத்தின் நீரில் தான் குழம்பில் கொதிக்கும் என்பது போல, எந்தச் சினிமா தேனி அல்லிநகரத்து சின்னச்சாமியான பால்பாண்டியினை இயக்குனர் இமயம் பாரதிராஜா எனக் கொண்டாட வைத்துப் புகழ் பாடியதோ அதே சினிமாவினால் சில நிம்மதியின்மையும் கொடுத்து விட்டது.
இயக்குனர் பாரதிராஜாவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் , அந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .
ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் இயக்குனர் பாரதிராஜாவின் படங்கள் கொடுத்த தாக்கம் மகத்தானவை.(பாரதி) ராசாவே வருத்தமா.. ஆகாயம் சுருங்குமா!
ஏங்காதே... அதை உலகம் தாங்காதே!
அடுக்குமா, சூரியன் கருக்குமா !?....
என்ன சொல்லுவேன், என் உள்ளம் தாங்கலை..
மெத்தை வாங்குனேன் தூக்கத்தை வாங்கலை
இந்த வேதனை யாருக்குத் தானில்லை....
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை
ஏதோ எம் பாட்டுக்கு நாம்பாட்டு பாடி
சொல்லாத சோகத்தச் சொன்னேனடி,
சொக ராகம் சோகம் தானே......." இன்னும் நீளும் , அவர் சோகம் தீரும்..
கருத்துகள்