அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார் (வயது 76)
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்
முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவால் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது பின்னர்
திமுகவில் கருப்பசாமி பாண்டியன் இருந்த போது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் திமுக செயலாளராக இருந்தார்
அதிமுகவிலிருந்து 1977, 1980 ஆம் ஆண்டு தேர்தல்களில் சட்ட மன்றப்பேரவைக்குத் தேர்வானவர், 2000 ம் ஆண்டில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார்
2006 ஆம் ஆண்டு தேர்தலில் தென்காசி தொகுதியிலிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர், 2015 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்
2016 ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பியவருக்கு, சசிகலா நடராஜன் பொதுச் செயலாளராக இருந்த போது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017 ஆம் ஆண்டில் அதிமுக சசிகலா நடராஜன் அணியிலிருந்து விலகி 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் அவரது அணியில் இணைந்தார்
கருத்துகள்