முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏலம் விடப்படும் சிவாஜி வாழ்ந்த போக் ரோடு அன்னை இல்லம்

ஏலம் விடப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தியாகராயநகர் போக் ரோடு அன்னை இல்லம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லத்தை  ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.



நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் 'ஜகஜாலக் கில்லாடி' படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூபாய். 3.74 கோடி  பெற்றிருந்த. கடனைத் திருப்பி செலுத்தாததையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார்.


வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜ்ஜாலக் கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். திரைப்பட உரிமைகளை வழங்க எதிர்ப்பு எழுந்தது. இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விடக் கோரி



தனபாக்கியம் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் சார்பில் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ராம்குமாரின் மகன் துஷ்யந்த் தமிழ் திரைப்படத் துறையில் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். அவர் சக்சஸ் , மச்சி உள்ளிட்ட படங்களில் ஒரு பகுதியாக இருந்தார் . சிவாஜி புரொடக்ஷன்ஸில் பணியாற்றிய பிறகு, அவர் தனது சொந்த நிறுவனமான 'ஈஷன் புரொடக்ஷனைத்துவங்கினார், இது மீன் குழம்பும் மண் பானையும் படத்தைத் தயாரித்தது பிரபுவின் 200 வது படமாகும். துஷ்யந்த் இப்போது அஜ்மல் நடிக்கும் தீர்கதரிஷி படத்தில் நடிக்கிறார் .


துஷ்யந்த் மற்றும் அவரது தந்தையும் 2021 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம் சூரங்கோட்டை வி.சின்னையா பிள்ளை மகனாக  (கள்ளர்+அகமுடையார்) வழி வி.சி.கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்துப் பாகப் பிரிவினை வெடித்திருந்தது. அதாவது, 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி, சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும், பிரபு, ராம்குமார் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை வெடித்திருந்தது.. அதாவது, 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி, சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும், பிரபு, ராம்குமார் மீது ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

எனினும், இந்த விவகாரத்தில் சிவாஜி கணேசனின் 4 பிள்ளைகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடந்து, இறுதியில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி , சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தன. இப்படிப்பட்ட சூழலில், 

நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது, உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும், சாந்தி தியேட்டரில் (அதாவது சிவகங்கை மன்னர் சண்முக ராஜா கோத்தாரி நிறுவனர் மற்றும் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி ஆகியோர் சேர்ந்து உருவாக்கிய தியேட்டர் தான் சாந்தி இது SH என்பது சண்முகராஜாவைக் குறிக்கும் THI உமாபதியை குறிக்கும்  AN அக்னி கோத்தாரியைக் குறிக்கும் இடம் மவுண்ட் ரோட்டில் சிவகங்கை சமஸ்தானத்தின் இடம் இந்த உண்மை பலர் அறியாத நிலையில் மன்னர் சண்முக ராஜா மகன் கார்த்திகேயராஜா இவர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மருமகன் ஆவார் இவர் பெற்ற பல தோல்விகளுக்கு சிவாஜி கணேசனும் ஒரு காரணம்) அதனால் தான் ராஜ் துரோகம் சிவாஜி கடைசி வரை அரசியல் வாழ்க்கையில் ராஜாவாக முடியாத தோல்வியை சந்தித்தார் என்பது பல அறிஞர்கள் கருத்து.        இளம் வயதில் நன்றாக வாழ்ந்த மக்கள் மகிழ்வித்த கதாநாயகனாக தந்தை சிவாஜி கணேசனின் 50 சதவீதப் பங்குகளும், தாயார் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

எனினும், இந்த விவகாரத்தில் சிவாஜி கணேசனின் நான்கு பிள்ளைகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை அரசியல் மட்டத்தில் நடந்தது, இறுதியில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்களும் வெளியாகின , அது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சூழலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி எனும் செய்தி, ஊடக வெளி வந்த நிலையில், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், கவலையையும்  உருவாக்கியுள்ளத "சிவாஜி கணேசன் வீடு  போக் ரோடு என்றிருந்து பின்னர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு செவாலியே சிவாஜி கணேசன் சாலையானதில் உள்ள அன்னை இல்லம் வீடு என்று தான் தெரிகிறது.  இதை ஊடகங்களும் சரியாக தெளிவுபடுத்தவில்லை. 1965 முதல் 1985 வரை உள்ள காலத்தில் சென்னையில் 3 பிரபலங்களின் வீடுகள் மிகவும் புகழ் பெற்றது. ஒன்று எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம், இரண்டாவது கலைஞர் வசிக்கும் கோபாலபுரம் வீடு, மூன்றாவது சிவாஜியின் அன்னை இல்லம் ஆகும். சுற்றுலா வரும் நபர் காணுமிடம்.  

சிவாஜிகணேசனுக்கு அதிகம் சொத்து உள்ளது. தஞ்சாவூர் வீட்டில் நடிகர் பிரபு- நடிகை குஷ்பு விவகாரத்தில் பஞ்சாயத்து நடந்த போது சிவாஜி கணேசன் உயிருடன் இருந்த நிலையில் பஞ்சாயத்து செட்டில்மென்ட் ஆனது தனிக் கதை இப்போது இந்த அன்னை இல்லம் வீட்டின் பேரில் கடன் வாங்கியது துஷ்யந்த். அப்படியானால் சிவாஜியின் பேரிலேயே இன்னமும் இந்த வீடு இருந்திருக்க வேண்டும் அல்லது ராம்குமார் அல்லது துஷ்யந்த் பெயரில் மாற்றம் ஆனதா அல்லது துஷ்யந்தும் இந்த வீட்டின் ஒரு பங்குதாரரா அல்லது நேரடியாக உரிமையாளரா? என்பது வழக்கு முடிவுக்கு வரும் போது தான் தெரியும் 

தன்னுடைய உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு, பாடுபட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவாக்கிய வீடே இன்று ஜப்தி ஆகும் சூழலுக்கு வந்துள்ளது.. இதுபோன்ற சூழல் பலருக்கும் ஏற்படலாம். அன்று கவிஞர் கண்ணதாசனுக்கும் இப்படித்தான் நிலைமை ஏற்பட்டது.

இன்று சிவாஜி கணேசன் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது ஸ்கிரீன் விலகாமல் தெரியவில்லை. ஆனால், சொத்து விவகாரம் நீதிமன்றத்திற்கு  போனது அனைவருக்கும் தெரியும். சாந்தி மருமகன் வி என் சுதாகரன் சிறை சென்றவர் கூடுதலாக ஒரு வருடம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து திரும்பியுள்ளார்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிருடன் இருக்கும்போதே பாகப்பிரிவினை சரியாக செய்து வைத்திருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்காது. பல பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளிடம் இணக்கமாக உட்கார்ந்து சரிசமமாக சொத்தைப் பிரித்து தந்திருந்தால், பாதி சிவில் வழக்குகள் நீதிமன்றங்களில் வந்திருக்காது அதுபோல அரசு தரப்பில் ஆவணங்கள் ஊழல் நடைபெறாமல் இருந்தாலும் வழக்குகள் எண்ணிக்கை குறையும்.சிலருக்கு வாழும் வாழ்க்கை வரலாறு சிலருக்கு பாடம் சொந்த உழைப்பில் சிறந்த நடிகர் குடும்பத்தில் நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இதில் பொது நீதி என்பது                சென்னை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 

வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் சிறைச் சென்ற தியாகி தந்தை வி.சின்னையா பிள்ளை மன்றாடியார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இருந்த வைராக்கியம், நடிகர் பிரபு- மற்றும் ராம்குமாருக்கு இல்லாத நிலையில் 

 தந்தை சின்னையா பிள்ளைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த மரியாதையை இராம்குமாரும் பிரபுவும் அவரது தந்தைக்குச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது, அவரது வீடு ஜப்தி 

குறித்து நமது கடந்த காலப் பார்வையில் சிவாஜி கணேசன் அவர்கள் வீடு ஜப்தி செய்தி ஏதோ ஒரு மாதிரி இருக்க 

நம் மனசில நம்மை அறியாத ஒரு வஞ்சமிருக்கும். "என்னை கஷ்டப்படுத்தினியா...இப்ப பாரு.."ன்னு வரும் வஞ்சம் காலம் கடந்துட்டா அது பிள்ளைகளிடம் போகும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் மீது இந்த வஞ்சம் அதிகம். அதுவும் சுதந்திரபா போராட்ட தியாகி மகன்களுக்கு இல்லாமல் இருக்குமா? இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் ICS  படித்தவர். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் ஜெயித்ததும் இந்தியாவுக்கு ஜில்லா கலெக்டர் வேலைக்கு வருகிறார். பின்னர் ஸ்பெஷல் செட்டில்மெண்ட் அலுவலராகி, பின்னர் சென்சஸ் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

1920 ஆம் ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரை சென்னை முனிசிபல் கமிஷனராக இருக்கிறார். சீப் செக்ரட்டரியாகக் கூட பணி கிடைக்கிறது. சில வருடம் ஒடிஸாவின் கவர்னர். சில வருடம் கொச்சின் திவான் எனப் போகிறது.

ஜார்ஜ் பணி சென்னையில் ஒரு பெரிய வீடு கட்டிக் குடியேறுகிறார். ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் விசாலமாக உள்ள இடத்தில் அந்தப் பங்களா மிக அழகாகனது.

இந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் சின்னையா பிள்ளை மன்றாடியார் என ஒரு தேசியவாதி இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள். அடுத்த மூன்றாவது மகன் பிறந்ததுமே அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய வெள்ளைக்கார ஆங்கில அரசால் கைது செய்யப்படுகிறார். அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கிறது. (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த காரணம் இதுவே) தலைவன் இல்லாததால் குடும்பமே வறுமையில் தத்தளிக்கிறது. உண்ண உணவில்லை. உடுக்க சரியான உடையில்லை.

உணவுப்பஞ்சம்...பசி..பட்டினி. மூன்றாவது மகன் பசி பொறுக்காமல் நடித்தால் சோறு கிடைக்குமென தகவல் கேட்டதும் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்கிறான். நன்றாகவே பாடுபவன் என்பதால் வாய்ப்பு உடனே கிடைக்கிறது. கம்பெனிகளில் நடிகனாகி பின் தன் அன்னையை ஒரு நாள் வளர்ந்த பிறகு சந்திக்கிறான்.

இப்போது வயிற்றுப்பசி அடங்கி விட்டது. ஆனால் நாடகத்தில் சேர்ந்து அது தான் தொழில் என்றானதும் நடிப்புப் பசி தொடங்கி விட்டது. அந்தப் பசி மட்டும் அடங்கவில்லை அவனுக்கு. நாடகங்களிலிருந்து சினிமாவில் சேர்ந்து முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பெயர் பெற்ற நடிகனாகிறான். கை நிறைய காசு, பணம்...சிறு வயதில் வறுமையில் வாடிய அன்னை. சிறையில் வாடிய தந்தை. கூடவே அண்ணன்களும் இருக்க எல்லோரும் சேர்ந்து வாழ ஒரு வீடு இதே சென்னை மாநகரத்தில் வாங்கத் தீர்மானிக்க அப்போது ஒரு வீடு வருகிறது. அந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அங்கில 

வெள்ளைக்காரர் கவர்னர் ஜார்ஜ் வாழ்ந்த அதே பங்களா. அப்பாவுக்கு இதை விட மன சந்தோஷம் தரும் விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அந்த வீட்டை அப்பா சின்னையா பிள்ளை மன்றாடியார் பெயரிலேயே வாங்குகிறான்.

இரண்டு வருடங்கள் அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இரண்டு வருட புதுப்பித்தலுக்குப் பிறகு அன்னை இல்லத்தில் குடியேறுகிறார்கள். அந்த மூன்றாவது மகன் கடந்த தலைமுறை நம் மக்கள் மனம் கவர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்த ஒரிஸ்ஸா கவர்னர் ஜார்ஜ் டி.போக். அவர் வாங்கிய வீட்டுக்கு அன்னையின் பெருமையால் வைத்த பெயர் 'அன்னை இல்லம்'.ஜார்ஜ் டி. போக் என்கிற அந்த ஆங்கில வெள்ளைக்காரக் கவர்னர் வாழ்ந்த அந்த வீடு இருக்கும் சாலைக்கு ஜார்ஜ் பெயராலேயே 'போக் ரோடு' என பெயர் சூட்டப்படுகிறது. போக் ரோடில் உள்ள அந்த வீட்டை வெள்ளையர் வாழ்ந்த வீட்டை அவர்களால் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு தேசியவாதியின் பிள்ளையே வாங்க முடிகிறதென்றால் காலம் செய்யும் தீர்ப்பு தானே இது.நடிகர் திலகம் 

சிவாஜி கணேசன் போன்ற பிள்ளைகள் அப்பாவுக்கு கிடைத்த கொடுமைக்கு இப்படித்தானே ஏதாவது செய்து ஆறுதலடைய முடியும்.   முதல் மரியாதை திரைப்படத்தின் பாடல் வரிகள் தான் அவரது மனநிலை யாக அன்று இருந்திருக்கும்  "பூங்காற்று திரும்புமா

என் பாட்ட விரும்புமா ராசாவே வருத்தமா

ஆகாயம் சுருங்குமா ஏங்காதே

அத ஒலகம் தாங்காதே

அடுக்குமா சூரியன் கருக்குமா

என்று சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல

மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல

ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி

சொல்லாத சோகத்த சொன்னேனடி சோக ராகம் சொகம் தானே 

யாரது போறது குயில் பாடலாம் தன் முகம் காட்டுமாபூங்காற்று திரும்புமா

என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்

நல்லது வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும்

எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்".   இதுவே பொது நீதி என்ற போதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜகஜாலக் கில்லாடி என்ற படத்தை தயாரித்ததில் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி, கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூபாய்.9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்கும் விதமாக ஜகஜாலக் கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த படத்தை விற்பனை செய்து கடனை ஈடு செய்ய வேண்டும்'' என கடந்த ஆண்டு மே மாதம் 4- ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி, ஜகஜாலக் கில்லாடி படத்தின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை என்று ஈசன் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இதனால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், செவாலியே சிவாஜி கணேசன் ரோட்டில் உள்ள துஷ்யந்தின் தாத்தாவான நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2024-ஆம் ஆண்டு தனபாக்கியம் நிறுவனம் வழக்குத் தொடர்ந்ததை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையின்போது, பலமுறை பதில் மனு தாக்கல் செய்ய துஷ்யந்த் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த ஐகோர்ட்டும் அவருக்கு அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால், இதுவரை அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இத்தனைக்கும் மத்தியஸ்தர் தீர்ப்பு இறுதியாகி விட்டது. இதை துஷ்யந்த் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, துஷ்யந்தின் தந்தையும், சிவாஜி கணேசனின் மகனுமான ராம்குமாருக்கு பங்குள்ள சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மனுதாரர் அனுப்பி வைக்க வேண்டும். என் இந்த வழக்கை இன்று தள்ளிவைக்கிறேன்" என்று தெரிவித்திருந்தநிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் துஷ்யந்துக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையில், வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்ய ராம்குமாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...