ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வருக்கு கட்சியினர் எதிர்ப்பு
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி பகுதியில் ஜாவா ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு மக்களைக் கவரும் சிவராத்திரி
நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவக்குமார் கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையாகியது. கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவுதா துறை அமைச்சர் ராஜண்ணா பேசும் போது, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை யாரென்றே தனக்கு தெரியாது என கூறியவர் ஜக்கி வாசுதேவ் அதுபோன்ற நபர்களுடன் டி.கே. சிவக்குமார் மேடையை ஒன்றாகப் பகிர்ந்து கொண்டது எப்படி நியாயம்? இதற்கு அவர் பதிலளிக்க வேண்டுமென்று கூறியுள்ளார். பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி பேசிய போது, இந்த விவகாரம் பற்றி கட்சியின் டெல்லி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றார்.
எனினும், டி.கே. சிவக்குமாரின் சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . டி.கே. சுரேஷ் பேசும் போது, கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி கட்சித் தலைமைக்குத் தகவல் தெரிவித்து விட்டே அவர் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் போது கூட சிவக்குமார் அதுபற்றி முன்பே கூறி விட்டுத் தான் சென்றார்.
இதில் ரகசியம் என எதுவும் கிடையாது என்கிறார். ஜக்கி வாசுதேவ் தனிப்பட்ட முறையில் அழைத்ததன் பேரிலேயே, அதனை ஏற்று கோயம்புத்தூர் வெள்ளியங்கிரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார் எனக் கூறினார்.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்து கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறிய போது "நான் இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகவே மரணமடைவேன் என மதத்தின் மீது கொண்ட தன்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையை வலியுறுத்தினார்.
கருத்துகள்