தனியார் யூட்யூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கலந்த நீரை ஊற்றிய சர்ச்சை தொடர்பான விசாரணையை CBCID க்கு மாற்றி DGP உத்தரவிட்டுள்ளார்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர், திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஊழல் புகார்களையும் சவுக்கு மீடியாவில் முன்வைத்தார். பலவிதமான வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவு மூலம் ஜாமீனில் வெளி வந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு நேற்று சென்ற சிலர், வீட்டின் கதவை உடைத்து சூறையாடி சாக்கடை கழிவுகளை வீட்டிற்குள் வீசினர். மேலும், அங்கு தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் சூழ்ந்துகொண்டு வாக்கு வாதம் செய்தனர். நேற்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் சவுக்கு சங்கரும் அவரது தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்திய நிலையில்.
அவர் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த அந்தக் கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிமுளனர். என்ன நடந்தது என்று அவரது தாயாருக்கு போன் செய்த போது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டுமே வந்துள்ளனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.
அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வந்த நிலையில்
யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக தலைவரான திருமாவளவன், "சவுக்கு சங்கரின் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது, தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது
எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதேபோல் அதிமுக சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இதே கருத்தை வலியுறுத்தும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக
அவரது தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையை CBCID க்கு மாற்றி, DGP உத்தரவு பிறப்பித்துள்ளார். சவுக்கு சங்கர் காவல் ஆணையரகத்தை குற்றம்சாட்டிய நிலையில்,
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கும் செல்வம் என்ற செல்வப் பெருந்தகை மற்றும் காவல் துறை சார்ந்த ஒரு உயர் அலுவலர் மீதும் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டிய நிலையில் இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் எழுதியிருந்த கடிதத்தில், "செல்வப்பெருந்தகை என்ற நபர் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். மேலும் அவர் புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரெளடி கும்பல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ரெளடிக் கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். அஸ்வந்த்தாமனுக்கு பதவி கொடுத்தது செல்வப்பெருந்தகைதான். மேலும் இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல மோசடியான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் பங்கு பிரித்துள்ளார். இதுபோன்ற கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.
தற்போது தமிழ்நாடு மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? என்பது தான் ஏனெனில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தத் தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால் தான் தமிழ்நாடு மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும்" என தெரிவித்துள்ளார்.ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வம் சம்பந்தப்பட்டிருப்பதால்,
இந்த கடிதம் தமிழ்நாடு அரசியலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் கடிதம் தொடர்பாக அப்போது கருத்துத் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் செல்வபெருந்தகை கருத்து சொல்வதை தவிர்த்து இருந்தாலும், அரசியல் ரீதியாக இந்த குற்றச்சாட்டு தற்போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில நிர்வாகி நேரடியாக ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கேவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், அங்கு செல்வப்பெருந்தகை பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியாக செல்வப் பெருந்தகைக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். செல்வம் என்ற செல்வப் பெருந்தகை யின் கடந்த கால கந்தலான வாழ்க்கை வரலாறு ஒரு Flash back மிகவும் மோசமானது அது குறித்து விரைவில் ஒரு பார்வை இதில் பொது நீதி யாதெனில்:- நீதி தவறாத ஜாம்பவான்கள் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்பதே அக் கட்சியினர் மத்தியில் நடக்கும் விவாதம் One ball. Two wicket.
கருத்துகள்