அழகப்பா பல்கலை சிறப்புக் கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை (Special B. Ed.,) ன் சார்பில் கிராம விரிவாக்க நிகழ்ச்சி
அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையின் (Special B. Ed.,) சார்பில் கிராம விரிவாக்க நிகழ்ச்சி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையின் சார்பில் சங்கராபுரம் ஊராட்சிப் பகுதியில் கிராம விரிவாக்க நிகழ்ச்சி மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் துவங்கி 16 ஆம் தேதி, மார்ச் மாதம் 2025 வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கிராமப்புற சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களை விளக்கி உரையாற்றினார். மேலும், அவரது உரையில் வள்ளல் டாக்டர் அழகப்பரின் கல்வி மற்றும் சமூக சேவையினைப் புகழ்ந்து எடுத்துரைத்து மாணவர்கள் கல்விப் பணிகளில் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டுமெனக் கூறினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பிறகு, முன்னால் மாவட்டக் கவுன்சிலர் சொக்கலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடையே சமூக நலப் பணிகளின் முக்கியத்துவத்தையும் கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் எவ்வாறு மாணவர்களின் பங்கு இடம்பெற வேண்டும் என்பதனைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. சுஜாதாமாலினி, பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு முன்னாள் உறுப்பினர், மற்றும் உதவி பேராசிரியர் முனைவர் க. குணசேகரன், உதவி பயிற்றுனர்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் துறையின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் முனைவர். சுவாமிநாதன், முன்னாள் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் மற்றும் பேராசிரியர் முனைவர். வீர ரவி ஆகியோர் விழாவில் பேருரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் துப்புரவுப் பணி, அந்தத்துறையின் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் எஸ்.கே.புலிதேவன் பாண்டியன் சமூக ஆர்வலர்கள் ரங்கநாதன் திருப்பதி மற்றும் இயற்கை கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சமூக விழிப்புணர்வு உரைகள் மற்றும் தொழிற்கல்வி, ஆரோக்கியம் ஆகிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடந்ததில் அப்பகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து துறை மாணவர்கள் அங்குள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த செயல்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் நடனப் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சி கிராமப்புற மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் இளநிலை மற்றும் முதுநிலை சிறப்பு கல்வியியல் மற்றும் முதுநிலை உளவியல் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்று நிகழ்ச்சியினை சிறப்படையச் செய்தனர்.
அப்பகுதி சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் நிகழ்ச்சியை பாராட்டியதுடன், மாணவர்கள் இத்தகைய சமூக அடிப்படையிலான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் நன்றி உரை நிகழ்த்தப்பட்டு, அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்