ஊழல் ஆட்சியாளர்களுக்குச் சென்ற TASMAC மோசடிப் பணம் அமலாக்கத் துறையில் சிக்கிய அடுக்கடுக்கான ஆதாரம் !
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தை குறிவைத்து சுமார் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை யினர் நடத்திய சோதனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. தனியார் மதுபான ஆலை மற்றும் டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடியாக நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறையின் அலுவலர்கள், மேலும் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளதையும் கண்டு பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முழுவதுமுள்ள 5 தனியார் மதுபான உற்பத்தி ஆலைகளில் மார்ச் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அவற்றில் குறைந்தது ரூபாய்.1000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பெருங்கடலின் ஒரு துளி தான் என்றும் அமலாக்கத்துறையின் அலுவலர்கள் கூறியதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மதுபான விற்பனையில் 40 சதவீதம் பணம் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுவதற்கான ஆவணங்களும் கிடைத்து இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. ஊழல் பணம் ரூபாய்.1000 கோடியில் சிறு பகுதி மட்டும் தான் டாஸ்மாக் அலுவலர்களுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்குச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத் துறையினர் அதன் அலுவலர்கள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் மேலாக மதுப்புட்டிகளுக்கு ரூபாய்.10 முதல் ரூபாய்.50 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிற வகையில் மட்டும் தினமும் ரூபாய்.10 கோடி வீதம் ஆண்டுக்கு ரூபாய்.3,650 கோடி வரை ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் வணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விட, டாஸ்மாக் முறைகேடுகளால் ஊழல் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. இப்போதும் கூட டாஸ்மாக் ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியிருக்க முடியாது.
டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பதிவு செய்துள்ள மூல வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஆனால், அந்த மூல வழக்கில் தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த உண்மையும் வெளிவர வாய்ப்பில்லை.
அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூபாய்.1,000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியமாகும். தமிழ்நாடு காவல் துறை அதைச் செய்யும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுபான ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனையின் வாயிலாக, பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களுக்கு, ஒரு மது பெட்டிக்கு, 50 ரூபாய் கமிஷன் வழங்கியது, அமலாக்கத் துறை சோதனையில் அம்பலமாகி உள்ளது.
3 நாட்களாக நடந்த அமலாக்க துறையினர் சோதனை முடிந்தது
'டாஸ்மாக்' நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட, 25 க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்தச் சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அதிரவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளது.
இந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன.
டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை எல்லாம், தி.மு.க., முக்கியப் பிரமுகர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்ற நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன.
அதனால், கடந்த மூன்று நாட்களாக, டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அலுவலர்களின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். மற்ற இடங்களில் முன்னதாகவே சோதனையை முடித்தாலும், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் தான் சோதனையை நிறைவு செய்தனர். -விளம்பரம்-
-விளம்பரம்- அதுமட்டுமின்றி இந்தச் சோதனையின் போது, சென்னை தியாகராய நகரில் பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள, தி.மு.க., முக்கியப் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும், 'அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ்' மது ஆலை அலுவலகத்தில், கட்டுக்கட்டாக ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.அதேபோல, தி.மு.க., மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படுபவர், எஸ்.என்.ஜெயமுருகன் இவரின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்படுகிறது. அங்கிருந்தும், போலி ரசீதுகள், கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றி உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த மிக முக்கிய புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் வாசுதேவன். இவரது கால்ஸ் குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகம், தி.நகரில் செயல்படுகிறது. அங்கு மட்டும் மூன்று நாட்களாக, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்த, 25க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. -விளம்பரம்-
-விளம்பரம்-சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக, கட்டுக்கட்டாக ஆவணங்களை எடுத்துள்ளனர். எம்.ஜி.எம்., என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் நிறுவனம், 75 சதவீத மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
மதுபான கொள்முதலில் மட்டுமின்றி, சட்டவிரோதமாக பார்களிலும், மது விற்பனை செய்து மோசடி நடந்துள்ளது. சில்லரை கடைகளுக்கு, தனியார் மது ஆலைகள் சார்பில், 'கியூ ஆர்' கோடு வைத்து வசூல் வேட்டை நடந்துள்ளது. எங்களின் சோதனையில் கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், 2016 ஆம் ஆண்டு முதல்- 2021ஆம் ஆண்டு வரை பதிவு செய்த, 35க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துள்ளோம். இதில், தொடர்புடைய எல்லோரிடமும் விசாரணை செய்ய உள்ளோம். நட்சத்திர ஹோட்டல்களில், மது பார்கள் நடத்த உரிமம் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதுபற்றியும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தரப்பில் கூறுகின்றனர். -விளம்பரம்-
அமலாக்கத்துறை சோதனை குறித்து, டாஸ்மாக் அலுவலர்கள் சிலர் கூறியதாவது: 'டாஸ்மாக்' நிறுவனம் சார்பில், குறிப்பிட்ட சில மதுபான ஆலைகளில் இருந்து, அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன், மது ஆலைகளில் இருந்து, எவ்வித ரசீதும் இல்லாமல், நேரடியாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு, மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆவணங்கள், அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி இருந்தால், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யும் போது, முழு விபரங்கள் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் அறிக்கை: மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும், எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதில், வெளிப்படைத்தன்மை இல்லை. மேலும், கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களுக்கு, ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவில் செலுத்தப்படும். தற்போது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும், மொத்த மதுபானங்களில், 60 சதவீத சரக்குகளுக்கு மட்டுமே, ஆயத்தீர்வை வசூல் செய்யப்படுகிறது. மீதுமுள்ள, 40 சதவீத சரக்குகள், ஆயத்தீர்வை வசூலிக்கப்படாமல், கள்ளத்தனமாக விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதன் வாயிலாக, மதுபான ஆலை அதிபர்களும், அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களும், பெரும் பயன் அடைகின்றனர். அரசுக்கு வர வேண்டிய வருவாய், ஆளும் அரசியல் பிரமுகர்களின் கஜானாவை நிரப்புகிறது. மதுபான கொள்முதலில் மட்டும், ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடக்கிறது. இதனால், அரசுக்கு 25,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுக்கு, 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வரி வருவாய் ஈட்டக்கூடிய துறை, நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. மதுபான உற்பத்தி செலவுடன், பாட்டில், மூடி, லேபிள் ஆகியவற்றுக்கு, அதிக விலை நிர்ணயம் செய்து, அவற்றில் கிடைக்கும் லாபத்தை, ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள், அபகரித்து கொள்கின்றனர். இவற்றில் மட்டுமே ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடக்கிறது. ஒவ்வொரு மதுபான ஆலையில் இருந்தும், கொள்முதல் செய்யக்கூடிய மதுபானங்கள், எந்தெந்த சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த எந்த தகவலும் அரசிடம் இல்லை. திட்டமிட்டு விவரங்கள் மறைக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி மதுபான சரக்குக்கு மட்டுமில்லை வரி எல்லா சரக்குக்கும் GST பில் கொடுக்கிறார்களா இல்லையானு சோதனையிடுகிற மாநில வணிக வரித் துறை, டாஸ்மாக் மதுபான‘சரக்குக்கு’ பில் கொடுக்கணும்னு சொல்லாததால தான் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை.
ஊருக்கொரு நியாயம், அரசுக்கொரு நியாயமா?டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மூன்று நாட்களாக நடத்திய சோதனையில் மொத்தமாக ஆளும் திமுக கூடாரமும் ஆடிப் போயிருக்கிறது !
அமலாக்கத்துறை விரித்த வலையில் சில எதிர்க்கட்சிகளும் சிக்கிக் கொண்டனவே!
டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மதுபான கொள்முதல் செய்வதில் ஊழல் செய்ததை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை பிடித்து அம்பலப்படுத்தியது.
விளைவு தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசை வீட்டுக்கு அனுப்பினார்கள் மக்கள். அதே கோணத்தில் தமிழ்நாட்டில் டாஸ்மார்க் நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் செய்வதிலும் ஊழல் செய்வதை அமலாக்கத்துரை கண்டுபிடித்து தற்போது சோதனை செய்து வருகிறது.
ஆண்டுக்கு சுமார் ரூபாய் 30000 கோடி என்று கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியை ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மிக திறமையாக கையாண்டு இருக்கிறார், அதில் பெரும் பகுதியை மணி லாண்டரி செய்துவிட்டார், கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்க்கும் அமலாக்கத்துறை கண்ணிலேயே மண் தூவும் அளவிற்கு மிகத் திறமையாக மணி லாண்டரி செய்து இருக்கிறார் என்கிறார்கள் இதில் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட மூவரும் வசமாக சிக்கிய நிலை உருவாகி இருக்கிறது.
மொத்தம் 20 தனியார் மது பான ஆலையில், குறிப்பிட்ட சில அலைகளில் மட்டும் அதிக அளவில் மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த மதுபான அலைகளில் நடந்த அதிரடி சோதனையில், மாதம் எத்தனை கேஸ் அந்த ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது, இதில் இருந்து மொத்தம் எவ்வளவு லாபம் அந்த மதுபான ஆலைக்கு கிடைக்கிறது போன்ற தகவல்களை சேகரித்த அமலாக்க துறை அலுவலர்கள்.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்படும் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்குவதை பெருமளவு குறைந்துள்ள டாஸ்மாக் நிறுவனம், புதியதாக மிகக் குறைந்த அளவு மது பாட்டில்கள் வாங்கப்பட்ட மது ஆலைகளில் தற்பொழுது அதிக அளவில் மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை அமலாக்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த வகையில் இப்படி அதிகமாக மது பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படும் மதுபான ஆலைகள் எப்படி டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் எடுத்தது, உற்பத்தி அடிப்படையிலா,.? அல்லது தரமான தயாரிப்பின் அடிப்டையிலா.? அல்லது வேறு எதாவது ஒரு வகையிலா.?, அதாவது வேறு ஒரு வகையில் என்றால், லஞ்சம் கொடுத்து ஆர்டர் எடுத்தார்களா, அல்லது ஒரு பெட்டிக்கு இவ்வளவு கமிஷன் என ஆளும் கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என அமலாக்கத் துறையினர் சோதனையின் போது தோண்டி எடுத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அலுவலர்கள்.
இப்படி ஒவ்வொரு மதுபான ஆலையில் இருந்து மாதம் மாநிலத்தின் ஆளும் கட்சிக்கு நிதியாக எத்தனை கோடி செல்கிறது என்கிற கணக்கையும் இந்த சோதனையில் தோண்டி எடுத்துள்ளனர் அமலாக்கத்துறை அலுவலர்கள். அதாவது சுமார் 55 லட்சம் கேஸ் மாதம் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதில் பெறும் பகுதியாக சுமார் 18 லட்சம் கேஸ் SNJ மதுபான ஆலையில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இப்படி மொத்தம் 20 மதுபான ஆலைகளில் குறிப்பாக அதிகம் கொள்முதல் செய்யப்படும் முக்கிய 4 அலைகளில் இருந்து தான் அதிகமான நிதி மாநிலத்தின் ஆளும் கட்சிக்கு சென்றுள்ளதாக அமலாக்கத் துறையினர் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சரியாக ஆளும் கட்சிக்கு நிதி கொடுக்காத மதுபான நிறுவனம், மற்றும் குறைந்த அளவு நிதி கொடுக்கும் மது ஆலைகளில் கொள்முதல் செய்வதைக் குறைத்துக் கொண்டு.
எந்த நிறுவனம் கமிஷன் அடிப்படையில் அதிக அளவு ஆளும் கட்சிக்கு நிதி கொடுக்கிறதோ அந்த மதுபான ஆலைகளில் அதிக அளவு மது பாட்டில்கள் கொள்முதல் செய்து வருவதற்காக சில குறிப்புகள் அமலாக்க துறை அலுவலர்கள் கையில் சிக்கியுள்ளதாகவும், மேலும் சில மதுபான ஆலைகளில் மிகக் குறைந்த அளவு மது பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்வதால், சம்பந்தப்பட்ட அந்த மதுபான ஆலை தரப்பில் இருந்து தான் அமலாக்கத்துறையினருக்கு, தகவல் கொடுத்து, அதாவது அதிகளவு மாநிலத்தின் ஆளும் கட்சிக்கு கமிசன் கொடுப்பதால், குறிப்பிட்ட இந்த ஆலைகளில் அதிக அளவு மதுபானக் கொள்முதல் செய்யப்படுகிறது என்று நடக்கும் முறைகேடுகளை போட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், திமுகவுக்கு கட்சி நிதியாக எவ்வளவு சென்றுள்ளது என்கிற ஆதாரத்தின் அடிப்படையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயத்துக்குள் அமலாக்கத்துறையினர் புகுந்து சோதனை நடத்தலாம் என்கிற தகவல் அக்கட்சியினரை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.13-03-2025 அமலாக்கத்துறை டாஸ்மாக் சோதனைகள்
தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA), 2002 ன் கீழ் 06.03.2025 அன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல்வேறு வளாகங்களில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED), சென்னை.
டாஸ்மாக்கில் பல பிரச்சினைகள் தொடர்பான ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல FIR களின் அடிப்படையில் ED ஒரு விசாரணையைத் தொடங்கியது. இந்த முதல் தகவல் அறிக்கை பின்வரும் வகைகளில் அடங்கும்:
1. உண்மையான MRP க்கு அப்பால் அதிக விலை வைத்து விற்கும் டாஸ்மாக் விற்பனைக் கடைகள்.
2. விநியோக ஆர்டர்களுக்காக டாஸ்மாக் அலுவலர்களுக்கு கிக்பேக்குகளை வழங்கும் டிஸ்டில்லரி நிறுவனங்கள்.
3. சில்லறை டாஸ்மாக் விற்பனைக் கடைகளிலிருந்து லஞ்சம் வாங்குவதிலும், டாஸ்மாக் ஊழியர்களை மாற்றுவதற்கும் நியமிப்பதற்கும் டாஸ்மாக்கின் மூத்த அலுவலர்கள்.
டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் தேடல் நடவடிக்கையின் போது, பரிமாற்ற நிலைகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிமை டெண்டர், ஒரு சில டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கு சாதகமான உள்ள ஆர்டர்கள் மற்றும் பணம் டாஸ்மக் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு 10 முதல் 30 வரை பெறப்பட்டது. முக்கிய கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
1. டாஸ்மக்கின் போக்குவரத்து டெண்டர் ஒதுக்கீட்டில் கையாளுதல்:
ஒரு முக்கிய பிரச்சினை, விண்ணப்பதாரரின் KYC விவரங்கள் மற்றும் டிமாண்ட் வரைவு (டி.டி) ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனை பொருந்தாதது, இது இறுதி வெற்றிகரமான ஏலதாரர் விண்ணப்ப காலக்கெடுவுக்கு முன்னர் தேவையான டி.டி.யைக் கூட பெறவில்லை என்பதைக் குறிக்கிறது.
கூடுதலாக, இறுதி முயற்சியில் ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே இருந்தபோதிலும் டெண்டர்கள் வழங்கப்பட்டன.
டாஸ்மாக் மூலம் டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு ஆண்டுதோறும் 100 கோடி.
2. பார் உரிம டெண்டர் கையாளுதல்:
பார் உரிமை டெண்டர்கள் ஒதுக்கீட்டில் கையாளுதல் குறித்த முறைகேடுகள் அதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன.
ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், எந்த ஜிஎஸ்டி/பான் எண்கள் மற்றும் சரியான KYC ஆவணங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு இறுதி டெண்டர்கள் ஒதுக்கப்பட்டன.
3. டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கும் டாஸ்மாக் அலுவலர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு:
டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கும் மூத்த டாஸ்மாக் அலுவலர்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை சில சான்றுகள் வெளிப்படுத்தின, அதிகரித்துள்ள உத்தரவுகளையும் தேவையற்ற நபர்கள் உதவிகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அம்பலப்படுத்தியது.
இந்த கண்டுபிடிப்புகள் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் கீழ் பல்வேறு குற்றங்களை நிறுவுகின்றன, மேலும் பி.எம்.எல்.ஏ, 2002 ன் விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி குற்றத்தின் வருமானத்தை (பிஓசி) உருவாக்குகின்றன.
டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டில் நிறுவனங்கள்
தேவி பாட்டில் உள்ளிட்ட நிறுவனங்கள் கள், மற்றும் ஜி.எல்.ஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களுடன் டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்.என்.ஜே, கேல்ஸ், அக்கார்டு, சைஃப்ல் மற்றும் சிவா டிஸ்டில்லரி சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான நிதி மோசடிகளை செய்துள்ளதை வெளிப்படுத்தின. இது கணக்கிடப்படாத பண உற்பத்தி மற்றும் சட்டவிரோத கொடுப்பனவுகளின் நன்கு செயல்படும் திட்டத்தை அம்பலப்படுத்தியது.
முக்கியக் கண்டுபிடிப்புகள்:
1. கணக்கிடப்படாத பணப்புழக்கம்:
டிஸ்டில்லரிகள் முறையாக உயர்த்தப்பட்ட செலவுகள் மற்றும் புனையப்பட்ட போலி கொள்முதல், குறிப்பாக பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம், ரூபாய். கணக்கிடப்படாத பணத்தில் 1,000 கோடி.
இந்த நிதிகள் பின்னர் டாஸ்மாக்கிலிருந்து அதிகரித்த விநியோக ஆர்டர்களைப் பாதுகாக்க கிக்பேக்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.
2. பாட்டில் நிறுவனங்களின் பங்கு:
விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்துவதன் மூலம் பாட்டில் நிறுவனங்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன, அதிகப்படியான கொடுப்பனவுகளை வழிநடத்த டிஸ்டில்லரிகளை அனுமதித்தன, அவை பின்னர் பணத்தில் திரும்பப் பெறப்பட்டன மற்றும் கமிஷன்களைக் கழித்த பின் திரும்பின.
டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டில் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த கூட்டு நிதி பதிவுகளை கையாளுதல், மறைக்கப்பட்ட பணப்புழக்கங்கள் மற்றும் முறையான வரி ஏய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
கண்டுபிடிப்புகள் ஒரு நெட்வொர்க்கை உறுதிப்படுத்துகின்றன, அங்கு கணக்கிடப்படாத பணம் வேண்டுமென்றே உயர்த்தப்பட்ட மற்றும் போலி செலவுகள் மூலம் உருவாக்கப்பட்டது, பின்னர் இலாபத்தை ஈட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த சட்டவிரோத விவகாரங்களில் ஈடுபட்டுள்ள பிற முக்கிய கூட்டாளர்களுடன் டாஸ்மாக், டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்பான ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்களின் பங்கு. ஆகியவை அடங்கும். இதில் பொது நீதி யாதெனில்:- ஊழல் நடந்து விசாரணை வளையத்தில் வந்த பின்னர் இனிமேல் பில் போட்டு வியாபாரம் நடக்குமாம் "கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்" என்பது போல தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,829 மதுக்கடைகளில் கிட்டத்தட்ட 3,500 கடைகளில் தினசரி ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஊழல் செய்து விட்டு அறிக்கை விடும் ஊழியர்கள் சங்கம் தவறான முன் உதாரணம். ED மேல்ட்டத்தை மட்டும் விசாரனை பன்னுனா எப்படி சார் நியாயம் ?அலுவலர்களையும், பணியாளர்களையும் பன்னுங்க அவுங்க மட்டும் யோக்கியர்களா ? என்னன்னு பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் கேட்குதுங்க அதுவும் சரிதானே!
2023-ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ் .கிருஷ்ணசாமி ஆளுநரிடம் மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது அதன் அடிப்படையில் தான் இந்த சோதனை.
கருத்துகள்