அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நியமனம் சர்ச்சையின் பின்னணி
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நியமனம் சர்ச்சையின் பின்னணியில் என்ன நடந்தது?
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, திமுகவின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில்
பாலியல் தொழிலாளர் குறித்து பொன்முடியின் பேச்சு விமர்சனமான நிலையில், அதைக் கண்டித்து' தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில்.
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அவர் பேசியது குறித்த விபரம்
திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா, ஏப்ரல் 6 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.
தி.மு.க இளைஞரணியின் தலைமை அலுவலகமாகச் செயல்படும் அன்பகத்தில் நடந்த விழாவில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்ததில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றத்தை (18 வயதுக்கு மேற்பட்டோர்) திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், "பட்டிமன்றத்தில் நானும் சபாபதி மோகனும் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) கலந்து கொள்வோம். கோயம்புத்தூரில் இந்தப் பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். இதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு திரளாகக் கலந்து கொள்வார்கள்" எனக் கூறினார்.
"பட்டிமன்றதா தலைப்பு என்ன தெரியுமா?" எனச் சிரித்தபடியே கேள்வி எழுப்பிய பொன்முடி, மேடையில் இருந்தவர்களைப் பார்த்து, "அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது" எனக் கூறினார்.
"கடவுள் கொள்கைளில் காமச் சுமையை அதிகம் பரப்புவது சைவமா வைணவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும்" எனக் குறிப்பிட்டார். மேலும், அந்தப் பட்டிமன்றத்தில் "ஓர் இடத்தில் சொல்வோம். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
"மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" என மீண்டும் கூறிவிட்டு இதற்கான விளக்கத்தையும் பொன்முடி அளித்தார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், "இவையெல்லாம் திராவிடத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள்" எனவும் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, கருணாநிதியின் 'பராசக்தி' படம், திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் வெளியான 'ரத்தக் கண்ணீர்' படம் குறித்துப் பேசினார்.
இந்தப் பேச்சு குறித்த காணொளி, கடந்த வியாழக்கிழமை இரவு இணையதளத்தில் வேகமாகப் பரவியது. குறித்து, தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஓர் அமைச்சரே இவ்வாறு அவதூறாகப் பேச முடியுமா? தி.மு.க கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
பொன்முடியின் பேச்சுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ' அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை' எனப் பதிவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை படி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, தி க கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது மிகவும் ஆபாசமாக அருவறுக்கதக்க வகையில் பேசிய நிலையில் திமுக மகளிர் அணித் தலைவியும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கடுமையாக கண்டித்த நிலையில், அவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சற்று முன் நியமிக்கப் பட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இது குறித்து அறிவிப்பு திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் அவர் நீக்கம் செய்யப்பட்ட காரணமாக இது மட்டுமே இருக்க முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
கருத்துகள்