கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருட்கோவிலில் நடந்த பங்குனி ஹஸ்தத் திருநாள் நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத்
தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு- மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் கா குத்தன் கதை”. என்ற பாடலில் உள்ள நயம் கம்பர் தமிழ் தான் “எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல் சடையன் வாழ்வு
கண்ணிய வெண்ணெய் கல்லூர் தன்னிலே கம்பு நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி ஹஸ்த்த நட்சத்திர நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றினானே”. என்கிறார் ஸ்ரீ ரங்கம் இராம காதை அரங்கேற்றம் குறித்துப் பாடியது.
"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன். கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம் பண்பாகப் பகர்சந்தம் படிக்காசலாலொருவர் பகரொ ணாதே." — பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கருத்து.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடம் “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது போல இராமாயணத்தில் காதல், வீரம் , ஆன்மிகம் என அனைத்தும் உண்டு, இன்றும் இப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி மண் எடுத்து குழந்தையின் நாவில் சேனை வைப்பது வழக்கம். தீர்த்தம் தருவது குழந்தை நல்ல தமிழாற்றலுடனும் அறிவுடனும் வளருமென்பது காலங்காலமாகத் தொடரும் நம்பிக்கை .
கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழ நாட்டு மன்னரின் அவைக்களப் புலமைத் தொடர்புடையவர்; சோழ மன்னர் மூவரின் அவைக்களப் புலவராயும் ஆசானுமான புலவர் ஒட்டக் கூத்தரோடு முரண்பட்டிருந்தவர்; மகன் அம்பிகாபதியைச் சோழன் மகள் அமராவதி விவகாரத்தில் கொன்றதால் சோழனை அறம்பாடிய காரணமாக கம்பர் குலோத்துங்க மன்னனைப் பகைத்துக்கொண்ட நிலையில் புலமை காரணமாக சிரச்சேதம் செய்யாமல்
சோழ நாட்டை விட்டு கிழக்கில் கடல், தெற்கில் வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாடு இதிலுள்ள நெடுங்குடி கைலாசநாதர் ஆலயத்திற்கு அருகில் கண்களைக் கட்டி படை வீரர்கள் மூலம் நாடுகடத்தப்பட்ட கம்பர் – இவற்றுக்கு இடையில் 24 காதமுள்ள பாண்டிய நாட்டின் எல்லையில்– வடக்கில் வெள்ளாறு, மேற்கில் தெள்ளார், தெற்கில் கன்னியாகுமரி, கிழக்கில் கடல் – இடையில் 56 காதமுள்ள நிலையில் அவரது உறவினர்களான உவச்சர்களுடன் பாண்டிய நாட்டின் எல்லைக்கு நாடு கடத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் சக புலவரான ஒட்டக்கூத்தர் தந்திரம் காரணமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் பழிவாங்கப்பட்ட நிலையில் பாண்டிய நாட்டில் நெடுங்குடியிலிருந்து கால்நடையாகவே 30 மைல் தொலைவிலுள்ள கம்பனூரை அடைந்தார். கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் மகள் அமராவதியைக் காதலித்ததனால் கோபமுற்ற சோழ மன்னன் அம்பிகாபதியை சிரச்சேதம்
அதை அறிந்த அமராவதி தற்கொலை செய்து கொண்டார். மகளை இறந்ததால் கோபம் கொண்ட சோழ மன்னன் கம்பரை நாடு கடத்த உத்தரவிட்டார். அதனால் கம்பர் பாண்டிய நாடு வந்தார். மகனைப் பிரிந்த சோகத்தால் எங்கும் தங்க மனமில்லாமல் சென்று கொண்டே இருந்தார். அவ்வாறு செல்லும் போது கம்பனூரிலிருந்து நடந்தே நாட்டரசன்கோட்டை அருகிலுள்ள அழகாபுரி முடிக்கரையில் பாண்டிய நாட்டின் அரண்மனையில் மஹாராணியைக் காண விரும்பினார்.
அதற்காக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள ஒத்தையடிப் பாதையில் சென்று கொண்டிருந்த போது அங்கே மாடு மேய்த்த சிறுவர்களிடம் "தம்பிகளா இந்த வழி எங்கே போகிறது" எனக் கேட்க அதற்கு சிறுவர்கள் "இந்த வழி எங்கும் போகாது நாம் தான் அந்த வழியாகப் போக வேண்டும்" எனக் கூறினர் மேலும் கம்பரிடம் "நீங்கள் எங்கே போக வேண்டும்?" எனக் கேட்டனர். அதற்கு கம்பர் "நான் முடிக்கரை அரண்மனைக்குப் போக வேண்டும்" என்றார்.
உடனே சிறுவர்கள் "அடிக்கரையைப் பற்றிப் போனால் முடிக்கரை செல்லலாம்" எனத் தெரிவித்தனர். உடனே கம்பர் "தம்பி நான் பெரிய கவி என நினைத்தேன். பாண்டிய நாட்டில் நீங்கள் என்னை விடத் திறமைசாலிகள்" எனக் கூறி மீண்டும் வழியைக் கேட்டார். உடனே சிறுவர்கள் "இந்தக் கண்மாயின் அடிக்கரையிலிருந்து கண்மாய் முடிவில் சென்றால் நீங்கள் கேட்கும் முடிக்கரை என்ற ஊரில் அரண்மனை வரும்" என்றனர்.
ஆடு மேய்க்கும் சிறுவர்களிடமுள்ள புத்திக்கூர்மையைக் கண்ட கம்பர் இந்த மண்ணில் ஏதோ விசேஷமுள்ளது என்று பாண்டிய மாதேவி ராணி உத்தரவில் அங்கேயே தங்கினார். அந்த இடம் தான் இன்றைய நாட்டரசன்கோட்டை கௌரிப்பட்டி மற்றும் கருதுபட்டி பகுதியாகும். கம்பர் அப்பகுதி மக்களுக்கு சித்த வைத்தியம் செய்து கொண்டே இலக்கியப் பணிகளை ஆற்றினார். பின்னர் ஒரு நாள் அவர் சமாதியானார். அதன் பின் அப்பகுதி மக்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சேவையைப் போற்றும் வகையில் கம்பர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கிவந்தனர்.
150 ஆண்டுகள் கழித்து கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நகரத்தார் அப்பகுதி மக்கள் சேர்த்து கோவில் எழுப்பினர். தற்போது 5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் விசாலாட்சி ஆச்சி தோட்டத்தின் நடுவிலிருக்கும் அந்த அறக்கோவில் கம்பரின் புகழ் பரப்பியதன் சாட்சியாகவே இருந்து வருகிறது. கோவிலின் உள்ளே பீடத்தின் மீது லிங்கமும் இருபுறமும் விநாயகரும் சுவாமி சிலைகளும், பீடத்தின் எதிரே நந்தியும், வெளியே இருபுறமும் கோவிலை நிறுவிய தமிழ்ச் சான்றோர்களின் சிலையும், பால தண்டாயுதபாணி சிலையும் உள்ளது.
கோவிலின் எதிரே கம்பர் விரும்பிப் போற்றிப் பாடிய அஞ்சனா மைந்தன் ஹனுமனுக்கு பஞ்சமுகத்து ஆஞ்சநேயராக கோவில் எழுப்பப்பட்டுள்ளது. சோழநாட்டின் புலவர் ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் ( 1120-1135), இரண்டாம் குலோத்துங்கன் (1136-1150), இரண்டாம் இராஜராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும்
அவைக்களப் புலவராயிருந்தவர்; அதனால் மூவர் உலா' பாடியவர். கலிங்கத்துப்பரணியை இயற்றியவர். முதலாம் குலோத்துங்கனின் அவைக்களப் புலவர் ஒட்டக் கூத்தர். காலம்: 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி சோழநாட்டின் சடையப்ப வள்ளல் உதவியில் அரங்கேற்றம் வைணவ ஜீயர்களின் ஆசியுடன் செய்யப்பட்டது கம்பராமயணமும் சாலிவாகன வருடம் பொ.ஊ. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.கம்பர் வால்மீகி இராமாயணத்தினை மூல நூலாகக் கொண்டு சோழ நாட்டின் மயிலாடுதுறை அருகே தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் சன்னதியில் இராமாயணத்தினைப் படைத்தார். எனிலும் கம்பராமாயணம் மூல நூலின் தழுவலாகவும், மொழிபெயர்ப்பு நூலாகவும் அல்லாமல், மூலநூலின் கதையை மட்டும் எடுத்தாண்டு பல்வேறு மாற்றங்களுடன் எழுதப்பட்டது, கம்பராமயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்குமுள்ள வேறுபாடுகளை ஆய்வுகள் செய்துள்ளார்கள் தமிழறிஞர்கள்.
கம்பராமாயணத்தில் ஸ்ரீ இராமன் முடிசூடுவதை கம்பர் எழுதிய நடை அழகான தமிழாகும். சோழ நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட பேதலித்திருந்த கம்பர் பின்னர் பாண்டிய நாட்டில் அரசன் கோட்டைகளில் ஒன்றான நாட்டரசன் கோட்டை அதில் அருகில் அழகாபுரி கோட்டையில் பாண்டிய மன்னனின் பட்டத்து அரசி கம்பருக்கு அடைக்கலம் தந்த நிலையில் அங்கு பாடசாலை அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டும் வழி செய்ததுடன் அவரது உவச்சர் குல உறவினர்கள் அனைவருக்கும் காளி கோவில் பூஜகர்களாக பாண்டிய நாட்டில் நியமிக்கப்பட்டார்கள் செய்தி சோழநாடு சென்றது பின்னர் நடந்த பொண்ணமராவதி யுத்தம் பாண்டிய மன்னன் வென்ற நிகழ்வு நடந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இரண்டாம் இராஜராஜனுக்கும் நடந்த யுத்தம் பாண்டிய மன்னன் வெற்றி பெற்று சோழ நாட்டை கைப்பற்றியது கூட கம்பர் கொடுத்த சாபம் தான் காரணம் என்பது இன்று வரை பேசப்படும் நிலையில்.இந்த நிலையில் பூவந்திச் சோழனால் தொல்லை காரணமாக காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்த சோழநாட்டின் மகுட வைசியர் என அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த தற்போது ஆறு தலைமுறைகள் கடந்தும் வாழும் கண்ணப்ப செட்டியார்- விசாலாட்சி ஆச்சி குடும்பத்தின் நிலமாக சிவகங்கை சமஸ்தானத்தின் காலத்தில் மாறியுள்ள பகுதி இது
150 ஆண்டுகளாக அதை சிறிய ஆலயமாக கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு அமைத்து ஆண்டு தோறும் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் அதாவது பங்குனி உத்திரத்திற்கு மறுநாள் இராமாயணம் அரங்கேற்றம் நிகழ்வு விழாவாக நடத்தி வரும் நிலையில்
. கம்பர் கம்பராமாயணத்தை கலியாண்டு 3986 சகாப்தம் 807 விசுவாவசு வருடம் அதாவது பொது ஆண்டு 886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி ஹஸ்த நட்சத்திர நாளில் ஸ்ரீ ரங்கத்தில் மண்டபத்தில் அரங்கேற்றினார். அதனை நினைவூட்டும் வகையில் நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோவில் விழா நடந்து வருகிறது. அனைத்து கம்பன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவரான எஸ்.ஆர்.என பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.இராமச்சந்திரன் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான கம்பன் கழக விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் அமெரிக்க முன்னாள் துணை அமைச்சர் ராஜன் நடராஜன் விழாவை தொடங்கி வைத்தார் ஆனால் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளுக்குக் காரணம்.
தமிழ்நாடு அரசின் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தற்போது புதுக்கோட்டை கம்பன் கழகம் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கம்பன் கழகத்தின் நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் கி.முரளீதரன் மற்றும் கண்ணப்ப செட்டியார் விசாலாட்சி ஆச்சி குடும்பமும் இணைய ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தின் மாணவர்கள் மற்றும் ஸ்ரீ வித்யாகிரி பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் கம்பர் குல மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட அரசியல் கலப்பில்லாத விழாவாக புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் எஸ் ஆர் எனும் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் மதுரை விமான நிலையத்திலிருந்து நேராக நாட்டரசன் கோட்டை கருதுப்பட்டிக்கு வந்த மாநில ஆளுநர் ஆர்.என.ரவி அவர்களை பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு நிகழ்வில் வள்ளல் டாக்டர் அழகப்பர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும் பேராசிரியருமான டாக்டர் குனசேகரன், ஆஸ்ட்ராலஜி & வர்மம் ஆராய்ச்சி வல்லுநர் ரெங்கநாதன் திருப்பதி இலக்கியப் பேச்சாளர் புதுக்கோட்டை பாரதி உள்ளிட்ட பலருடன் ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் ஸ்ரீ ராஜராஜன் கல்விக் குழுமத்தின் சார்பில் மாணவர்கள் மற்றும் ஸ்ரீ வித்யாகிரி பள்ளி மாணவர்கள் சேர்ந்து வரவேற்றனர் ஆலயத்தில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்ற நிலையில் முதலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபட்டு பின்னர் கம்பர் நினைவிடத்தில் நடந்த பூஜையில் வழிபட்டு பின்னர் கம்பராமாயணம் இசைப்பாடல் இசைக்குழுவினர் நிகழ்த்திய நிகழ்வில் விநாயகர் துதி மற்றும் சுந்தர காண்டப் பாடல், அயோத்தியா கண்டப் பாடல் யுத்த காண்டப் பாடல் ஆரண்ய காண்டப் பாடல் தலா ஒன்று என ஒவ்வொரு பாடலும் இசைக்கலைஞர்கள் பாடியதை அமர்ந்து கேட்ட நிலையில் மராமரம் என்ற பெயரின் திரிபு தான் இராமராம் ஆகவே பப்ளிக் ஜஸ்டிஸ் செய்தி நிறுவனம் சார்பில் செல்வன் P.பரத் 'யாதுமாகிய மரங்கள்' எனும் நூலை மேதகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வரவேற்றார்.
இந்தப் பகுதியில் இதுவரை எந்த ஆட்சியாளரும் அரசியல் கட்சியும் ஆட்சிப் பிரதிநிதிகளும் வராத நிலையில் முதலில் நமது மாநிலத்தின் ஆளுநர் வந்தது சிறப்பான நிகழ்வு இதில் தேரழுத்தூர் ஆக்கிரமிப்பிலிருந்த கம்பர் பொட்டலை இந்திய தொல்லியல் துறை மூலம் மாற்றமும் சிறப்பும் சேர்த்து கம்பர் மேடாக மாற்றம் செய்தது போல இந்த கருதுபட்டி தேடிவந்த கவர்னர் நிச்சயமாக இந்த ஆலயம் சீரமைப்பும் சிறப்பும் சேர்க்க இனியொரு நல்ல திட்டம் தருவார் என நம்புவோம். தமிழ் தமிழ் என முழங்கும் அரசியல் கட்சிகள் செய்யாத செயலை ஆளுநர் செய்தது பாராட்டுக்கு உரியது. அதற்கு ஸ்ரீ இராமரின் பக்தி தான் காரணம்
கருத்துகள்