அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்
அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில்
கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகள் மற்றும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்காடு டிஸ்டிலரீஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கிலுள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், தியாகராயநகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது, உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அலுவலர்களைத் துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு உள்துறைச் செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளி வைக்க வேணடும் எனக் கோரிக்கை வைக்கபட்டது. அப்போது நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால் வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம் என்றும், இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு பொது நலத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அலுவலர்களைக் காப்பாற்றுவருவதற்கு செய்யபட்டதா என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். மாநில அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் 2.15 மணிக்கு வாதங்களை முன்வைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்கள். இந்த நிலையில் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது
கருத்துகள்