தலையாரி வேலை கேட்டு தலையாரியிடமே ஏமாந்த நபர். தலையாரி வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ரூபாய்.5½ லட்சம் லஞ்சமாக பெற்று மோசடி:
கிராம பெண் தலையாரிகள் உள்ளிட்ட மூவர் கைது
தலையாரி வேலை வாங்கித்தருவதாக ரூபாய்.5½ லட்சம் வாங்கிய பிறகு மோசடி செய்தது தொடர் பாக கிராம பெண் தலையாரிகள் அதாவது உதவியாளர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் திவாகரன் (வயது 32). இவ ருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா இரும்பு வயல் குரூப் கிராம தலையாரியாக திருவேகம்பத்தூர் முகமதுகனி மனைவி நசீரா (வயது 32), போர்குடி குரூப் கிராம தலையாரியாக பணி செய்கிறார் அனுமந்தங்குடி பெண் வேலுமணி (வயது 43),
தேலூர் கிராமத்தை சேர்ந்த புரோக்கர் கோட்டைச்சாமி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது அவர்கள் திவாகரனுக்கு கிராம உதவியாளர் எனும் (தலையாரி) வேலை வாங் கித்தருவதாகக் கூறி 2023-ஆம் ஆண்டு லஞ்சமாக ரூபாய்.5 லட்சத்து 40 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுவது தொடர்பாக பின்னர் பணி ஆணை ஒன்றையும்
அவர்கள் திவாகரனிடம் கொடுத்தார்களாம்.
ஆனால் அதுபோலியான ஆணை என்பதை அறிந்த திவாகரன் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும் தான் மோசடியாக ஏமாற்றம் ஆனது குறித்து நேற்று சிவகங்கை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் புகார் அளித்ததன் பேரில் திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்ப திவு செய்து நசீரா, வேலுமணி ஆகிய இரண்டு தலையாரிகள் (கிராம உதவியாளர்க ளையும்), தரகரான கோட்டைச்சாமியையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களி டம் விசாரணை நடைபெறுகிறது இவர்கள் யாருக்கு கொடுக்க லஞ்சம் வாங்கினார்கள் என்பதும் இதில் முழுமையாக யார் சம்பந்தப்பட்டனர் என்பதும் விசாரணை முடிவில் தெரியும்.. இதில் பொது நீதி...மோசடி கூட தர்மம் நியாயம் இல்லாமல் படிச்சது என்னவோ ஐந்தாம் வகுப்பு இவர்கள் பார்த்தது என்னவோ ஐஏஎஸ் வேலை . மோசடி பலவிதம் இதில் உள்ள பின்னணி குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை தேவை.
கருத்துகள்