பாஜகவில் நாகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டபின் அண்ணாமலைக்கு வழங்கிய புதிய செருப்பு வளர்ச்சியா ! அல்லது வீழ்ச்சியா?.. அலசல்
களத்தில் விளையாடுவதல்ல அரசியல், தனக்கான களத்தை தானே கட்டமைப்பது தான் அரசியல்.
பாஜகவில் நாகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டபின் அண்ணாமலைக்கு வழங்கிய புதிய செருப்பு. இதில் அரசியல் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே உள்ள தண்டையார் குளத்தில் 1960 ஆம் ஆண்டில் பிறந்த நயினார் மகன் நாகேந்திரன். பார், பார்க்கிங் குத்தகை என பலபல வியாபாரம் செய்தவர் நயினார் வசதியான குடும்பம் நாகேந்திரன் பள்ளிப்படிப்பு முடித்து ஆரல்வாய்மொழி கல்லூரியில் B.A, பட்டக் கல்வி பயின்ற போது அவர் தந்தை அன்று அதிமுகவின் முக்கிய நபரான கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்று.
‘பையனுக்கு ஜாதகம் பார்த்தேன். அரசியல் தான் நல்லா வரும்னு சொல்றாங்க. அதனால உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்’ என நயினார் ஒப்படைத்தார் கருப்பசாமி பாண்டியனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் சால்வைகள் அணிவிப்பார்கள். இந்த சால்வைகளை எடுத்து மடித்து வைப்பது நாகேந்திரனுக்கு முதல் பயிற்சி. அரசியலுக்காக தன் தந்தை பெயரையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் ஆனார்.கொஞ்சம் கொஞ்சமாக கருப்பசாமி பாண்டியன் அருகிலிருந்து திருநெல்வேலியின் அரசியல் களங்களை அறியத் தொடங்கினார். கானா எங்கே சென்றாலும் அங்கே நாகேந்திரனும் இருப்பார். கானாவை பார்க்க வருகிறவர்களிடத்திலெல்லாம் தன் அன்பாலும், தன்மையான பேச்சாலும் தனி இடம் பிடித்தார் நயினார் நாகேந்திரன்.அரசியலுக்கு எப்போதுமே சமுதாய பலம் மிக முக்கியம்.
மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கொண்டையன் கோட்டை மறவர் பிரிவைச் சேர்ந்தவர். பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரும் இதே பிரிவினர் தான்.
கருப்பசாமி பாண்டியனுடைய அன்பும் ஆதரவும் பெற்று வளர்ந்த நாகேந்திரன். அப்போது திருநெல்வேலி மாவட்ட அதிமுகவின் இலக்கிய அணியில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பணகுடி நகரச் செயலாளர். சமுதாய பலத்தோடு சசிகலா நடராஜன் டி.டி.வி.தினகரன் வரை நெருங்கினார் ஒரு கட்டத்தில் தினகரனின் ஆதரவோடு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரானார்.
அதிமுகவில் முக்கியமான சக்தியான கருப்பசாமி பாண்டியன் 2000 ஆண்டில் திமுகவுக்குச் சென்று விடவே அந்த இடத்தை தனது சமுதாய பலமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தொழில்துறை , மின்சாரம் போக்குவரத்து துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அவர் வகித்தார்.
நயினார் நாகேந்திரன் அண்ணன் வீர பெருமாள் திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். அதேபோல் ஒரு அக்கா வள்ளியூர் அருகில் மருகால்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் (தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாதுகாப்பு கடந்த 35 ஆண்டு காலம் அவ்வூர் நபர்கள் தான்) அதிமுகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் அவரது அண்ணன் என இருவரும் திருநங மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். அதன் பின் வீரபெருமாளும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் அதிமுகவில் மாநிலப் பொறுப்பில் உள்ளார்.2001- ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு காலத்தில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சட்டரீதியான நெருக்கடி ஏற்பட்டு அவர் பதவி விலகிய போது… யாரை இடைக்கால முதலமைச்சராக நியமிக்கலாம் எனப் பரிசளிக்கப்பட்ட பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இது பற்றி விவரம் அறிந்த அதிமுகவினர் நம்மிடம் பேசும்போது, “அம்மாவுக்கு பதில் யாரை முதலமைச்சராக போடலாம் என்ற ஆலோசனையில் அப்போது ஜாதகம் முக்கியமான பங்கு வகித்தது. அந்த வகையில் நயினார் நாகேந்திரனின் ஜாதகமும் போயஸ் கார்டனில் ஆராயப்பட்டது. நயினார் நாகேந்திரன் ஜாதகப்படி அப்போது அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது என கேரளத்தின் பணிக்கர் ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்
அப்போதே சசிகலாவின் கடைக் கண் கடுமைப் பார்வைக்கு இலக்கானார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து அதிமுகவில் அவரது செல்வாக்கு மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.
2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதி திமுக மாலைராஜாவிடம்600 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அவர் ஜெ.ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் ஆக்கப்படவில்லை. தொடர்ந்து அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தவர் 2016 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறக 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்ற நிலையில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. தனது கட்சி தலைவர்கள் உடனும் மற்ற கட்சி தலைவர்களுடனும் தனக்கே உரிய சுமுகமான அமைதியான பணிவான அவர் கூறுவது போல தென்றல் அணுகு முறையில் தொடர்ந்து நல்லுறவோடு இருந்தார் நயினார் நாகேந்திரன். காரணம் கருப்பசாமி பாண்டியனிடம் அவர் கற்ற அரசியல் பாடம்.
இவருடைய பழகும் தன்மைக்கு ஓர் உதாரணம் அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள்.
நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அப்போது எதிர்க்கட்சித் தலைவர். தேர்தல் பிரச்சாரத்துக்காக டாக்டர் கலைஞர் மு . கருணாநிதி வாகனம் தயாரானது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர்கள், அந்தப் பிரசார வாகனத்தின் பதிவு விவகாரத்தில் சற்று மறந்து விட்டார்கள். பதிவு செய்யத் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல். அப்போது திமுகவிலிருந்து போக்குவரதுத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனை அணுகியுள்ளனர். சில மணி நேரங்களில் அப்பிரச்சினையை முடித்துக் கொடுத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதுபோல் மாற்றுக் கட்சியினருக்கும் தனது கட்சியினருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். திருநெல்வேலி கிராமங்களில் ரெட்டியார் சமுதாயம் மாத்திரமல்ல மறவர் பெருங்குடி மக்கள் நிலக்கிழார்களை பண்ணையார் என்றே அழைத்தனர். நயினார் நாகேந்திரன் ரெட்டியார் சமூகத்தவர்களுடன் சேர்ந்து ஹோட்டல் தொழில் செய்து வந்தார். அப்போதிலிருந்து நயினார் நாகேந்திரன் பண்ணையார் என அழைத்தனர்
அந்த நிலையில் தான் வரப்போகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேவை என முடிவெடுத்த ஆர் எஸ் எஸ் முடிவை செயல்படுத்த வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு ஏற்ற மாநிலத் தலைவர் வேண்டும் என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இப்போது பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக முன்னாள் தலைவர்கள் முன் மொழிய பதவிப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும், இந்தக் கால கட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிரடியாக செயல்பட்ட நிலையில் நயினார் இயல்பாகவே சாந்தமான பேச்சுக்கு சொந்தக்காரர்.
சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணுபவர். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்துக்கே உரிய பண்புகள் இவரிடம் சற்று அதிகமாகவே உண்டு. பதவியேற்ற பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், “இனி தமிழ்நாடு எங்கும் தாமரைக் கொடி பறக்க வேண்டும் அதில் அண்ணாமலை புயல் என்றால் நான் தென்றல்” எனப் பேசியிருந்தார்
திருநெல்வேலியின் தண்டையார் குளம் என்ற கிராமத்தில் இருந்து இப்போது கமலாலயம் வரை வந்திருக்கும் இந்த தென்றலின்
கடந்த 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சந்தித்த நான்கு கோடி ரூபாய் சர்ச்சைதான்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் இரயிலில் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சிலரிடம் பிடித்தனர்.
இது தொடர்பாக வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது. அந்த பணம் நயினார் நாகேந்திரனுடைய பணம் தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சும் எழுந்தது. இந்த வழக்கு இன்னும் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது
பாஜக தலைவர் என்ற தகவல் உறுதியான உடனேயே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து இரண்டு பெரிய சமூகங்கள் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசியல் புள்ளிகள் நயினாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நயினார் இதுவரை தலைவர்களுக்கு கீழே செயல்பட்டவராகத்தான் இருந்துள்ளார். இப்போதுதான் தேசிய கட்சியில் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக வளருமா என்பதை விட அண்ணாமலை கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ந்து வைத்த பாஜகவை சரியாக கொண்டு சென்றாலே போதும் பாஜகவின் புகழை அடைவார்.அரசியல் களத்தில் சாதித்தது எடப்பாடி சிலுவம்பாளையத்தாரா ?தமிழ்நாடு வந்த குஜராத் அமித்ஷா வா ? எனில் அமித்ஷா மூலம் எடப்பாடியின் வீழ்ச்சியடைந்தத அதிமுகவை காற்றடைத்த பலூன் போல பலப்படுத்தி அண்ணாமலை பல போராட்டங்கள் மூலம் நோஞ்சானை பூஸ்ட்டியாக்கி வளர்ந்த பாஜகவை பலஹீனமாககிய ஆலோசகர் ஆடிட்டர் குருமூர்த்தி எனறு தான் கூற வேண்டும். காரணம் அவருக்கு சசிகலா நடராஜன் மீதிருந்த வன்மம் கலந்த பகை என்பது தவிர வேறில்லைடெல்லி மேலிட பாஜ தலைவர்களின் மிரட்டலுக்கு பணிந்து கடைசி நேரத்தில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானது. ஒன்றிய உள்துறை அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானத்தில் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நேற்று மதியம் 12 மணிக்கு அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என செய்தி வெளியானது. ஆனால், அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி தொடர்ந்து மறுத்து வந்தார்.
காரணம், அண்ணா மலையை மாநில பாஜ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அதிமுக தலைமையில்தான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என அறிவிக்க வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று எடப்பாடி நிபந்தனை விதிப்பதால்தான் அமித்ஷாவை அவர் சந்திக்க மறுப்பதாக கூறப்பட்டது. இதுபோன்ற இழுபறி யால் அமித்ஷாவின் பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் 12 மணியில் இருந்து தள்ளிப்போனது.
மேலும், பேட்டி கொடுக்கும் இடத்தில் 7 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. இதில் அதிமுக – பாஜவில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எடப்பாடியின் பிடிவாதத்தில் இந்த முயற்சி நேற்று தோல்வி அடைந்தது. இதற்கு முழு காரணம் எடப்பாடிதான் எனகூறப்பட்டது. இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிருபர்களை சந்திக்காமல் நட்சத்திர ஓட்டலில், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே 3 மணி நேரத்துக்கும் மேல் தங்கினார்.
அதேநேரம், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடைசியாக எடப்பாடி கே பழனிச்சாமியின் முக்கிய கோரிக்கையான அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதை அமல்படுத்த பாஜ மேலிடம் முடிவு செய்தது. இதற்காக நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதை அண்ணாமலையே முன்மொழிவது என்றும் முடிவு செய்யப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான பிறகே அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி சம்மதித்தார். இதையடுத்து மாலை 4.30 மணிக்கு எடப்பாடி ஒரு வழியாக அமித்ஷாவை சந்தித்து, பாஜ கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்தார். பின்னர் கிரீன்ஸ்வேஸ் சாலையில் இருந்து மாலை 4.45 மணிக்கு எடப்பாடி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு 5 மணிக்கு போய் சேர்ந்தவர்களை
மாலை 5.10 மணிக்கு அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தரப்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும், பாஜக தரப்பில் அமித்ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேட்டி அளித்த அமித்ஷா, ‘2026ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும்’ என்றார். பத்திரிகையாளர்களிடம் அமித்ஷா மட்டுமே பேசினார். எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை. அமித்ஷா அதற்கு அனுமதியும் கொடுக்கவில்லை.
எது எப்படியிருந்தாலும், அமித்ஷாவின் சென்னை பயணம் மூலம் அதிமுகவை மிரட்டி பாஜ கூட்டணியில் இணைய வைத்து விட்டதாகவே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதேநேரம், எடப்பாடியும், கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் தனது திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பாஜ மேலிடம் உறுதி அளித்த பிறகே, பல மணி நேரம் அமித்ஷாவை காக்க வைத்து அவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு வந்த அமித்ஷா நேற்று மதியம் 12.30 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் வீட்டுக்கு வந்தார். அவருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடியை அமித்ஷா உள்ளிட்ட சில பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகார்களை சொல்லி, கூட்டணியில் சேராவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். பேட்டி முடிந்ததும், எடப்பாடியை பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டாம் என்று கூறி, முதுகில் லேசாக தட்டி அழைத்து சென்றார். மேடையை விட்டு இறங்கியதும், மீண்டும் அதிமுக – பாஜக தலைவர்கள் 6 பேர் மட்டும் மேடைக்கு வந்து கைகோர்த்து கூட்டணி உறுதியானதை பத்திரிகையாளர்களிடம் உறுதிப்படுத்தினர். ஆனால், கடைசி வரை எடப்பாடி கே.பழனிசாமி முகத்தில் எந்தச் சிரிப்புமில்லாமல், அமைதியாக, எதையோ பறிகொடுத்தது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்இது அதிமுகவினர் இடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது
களத்தை கட்டமைத்து, 2026 வெற்றிக்கான முறையான நகர்வுகளை, சரியான நேரத்தில் தகவமைத்துள்ள , முதுகில் குத்தும் துரோகியை விட எதிரில் நிற்கும் எதிரி மேல். இனி திராவிட பாஜக.
எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட டாக்டர் எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதாவழியில் திராவிட இயக்க சித்தாந்தங்களில் பயணித்த அதிமுகவை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் ஒப்படைத்து விட்டார். எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது முக்கியம். பாஜக தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை கூட்டணி ஆட்சி என்பது 1980 லேயே காங்கிரஸ் மற்றும் திமுகவால் முயற்சிக்கப்பட்டு தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்டது.
அதேபோல ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்படவேண்டும் என்பதை எடப்பாடி கே.பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்தக் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அதிமுகவின் இறுதி யாத்திரையை துவங்கி விட்டார் என்ற பேச்சும் உலா வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசை கவிழ்ந்து பின்னர் நடந்த தேர்தலில் "மோடியா? லேடியா?" என்று கேட்ட ஜெ.ஜெயலலிதா ஆன்மா, "ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்" என டாக்டர் எம்.ஜி.ஆர் வழி வந்த அப்போது இருந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இப்போது இருக்க வாய்ப்புகள் இல்லை இநத நிலையில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகள்
200 தொகுதிகளை குறி வைத்து இளைஞர்களை தேர்வு செய்து வேலைகளை முடித்து விட்டது திமுக. இந்த தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் மைக்ரோ அளவில் ஒருங்கிணைக்கபட வேண்டும். திமுக வெற்றியை அதிமுக உறுதி செய்துள்ளது. என்ற பேச்சுக்கு மத்தியில் பாஜக
நயினார் நாகேந்திரனை முக்குலத்தோர் வாக்காகவும் தேர்வு செய்திருக்கிறது. அஇஅதிமுக. பிஜேபி.தேர்தலில் கூட்டனி
நைனார் நாகேந்திரனை பிஜேபி நியமனம் செய்தாலும் சசிகலா நடராஜன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் ஒன்றும் பழைய கணக்கில் ஜெயிக்க முடியாது இது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்குப் போகும்போதே அரசியல் அறிந்த நபர்களுக்குத் தெரியும்
இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். குறிப்பாக புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். முக்கியமாக அதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்து பேசவும் திட்டமிட்டிருக்கிறார். இந்த சூழலில் பாமக உட்கட்சி பிரச்சனை வெடித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியை விரும்பும் நிலையில், மருத்துவர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல விரும்கிறார். இதனால் தமிழ்நாடு அரசியலில் பாமகவின் அடுத்தடுத்த நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது. அதேபோல் தேமுதிக விஜயகாந்த் இல்லாமல் ஜோபிக்க முடியுமா என்பது எழு வினா? புதிய தமிழகம் மற்றும் ஜான்பாண்டியன் கட்சியின் பலம் உதவும்.
கருத்துகள்