வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் சட்டமான நிலையில் சட்டமன்றத் தனித் தீர்மானத்துக்கு இஸ்லாமியப் பிரமுகர்கள் முதலமைச்சருக்கு நன்றி கூறினார்
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, வக்பு வாரிய சட்ட திருத்தம் தற்போது சட்டமானது. இந்த நிலையில் சென்னை ஷியா தலைமை காஜி குலாம் முகமது மெகதி, தருமபுரி பாசல் கரீம், கன்னியாகுமரி ஏ.அபுசாலி, இராமநாதபுரம் வி.வி.ஏ.சலாவுதீன், சிவகங்கை கே.எம்.எம்.பரூக் அலிம், தேனி அப்துல் அஹத், தென்காசி மொஹிதீன் அப்துல் காதர் மற்றும் பிற மாவட்ட காஜிக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசு வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக நன்றி தெரிவித்தனர்.இதில் இந்தியாவில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துக்கள் வக்பு வாரியத்திடம் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கர் அல்லது 9 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்