தமிழ்நாடு அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
அமைச்சர் பொறுப்பிலிருந்த பொன்முடியும் நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழஞ அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பகிர்ந்து தரப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த மின்சார வாரியத் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல மற்றொரு துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, குடியிருப்பு மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துச்சாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை, பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வசம்
ஒப்படைக்கப்பட்டது. அதே போல முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து, நீக்கப்பட்ட மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு
அமைச்சரவைக்கான மாற்றத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மனோ தங்கராஜுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது நாளை பொறுப்பு ஏற்கும் போது தெரியவரும்.
கருத்துகள்