காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தமிழ் இலக்கியப் பேச்சாளர் குமரிஅனந்தன் காலமானார்
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் என அழைக்கப்படும் ஹரிகிருஷ்ணன் அனந்தகிருஷ்ணன் , கர்ம வீரர் கு.காமராஜரின் சீடராகப் பணியாற்றியவர். அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரில் பிறந்தார், முன்னர் 1962 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை சாத்தூரில் டுட்டோரியில் கல்லூரியில் மதுரை விடிசி டுட்டோரியில் பணியாற்றினார். குமரி பேனா கம்பேனியின் நிறுவனர். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என புதிய கட்சி துவங்கி நடத்தினார் மதுரையில் பேனா தயாரிப்பு தொழில் நிறுவனத்தை ஆரம்பத்தில் கவனித்தார்
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், நாகர்கோவில் மக்களவை முன்னாள் உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என பன்முகத் திறன் கொண்டவர். இவரோடு 1975 -1976 ஆம் ஆண்டு வரை ஸ்தாபனக் காங்கிரஸ் பணி செய்வர்கள் பலரும் உண்டு.
பா. இராமசந்திரன் பழ. நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவனம் கே. இராமமூர்த்தி. தண்டயுதபானி ஆகியோர் பொதுச்செயலாளர்கள்.
காங்கிரஸ் இணைப்புக்கு பா. இராமசந்திரன், குமரி அனந்தன், தண்டயுதபானி ஒத்துக்கொள்ளவில்லை. பழ.நெடுமாறன், திண்டிவனம் கே. இராமமூர்த்தி ஆகியோர் இந்திரா காந்தியின் தலைமையை ஏற்றனர்.
ஜனதா கட்சியை விட்டு புதிய அரசியல் கட்சியை காகாதேகா அனந்தன் தொடங்கினார் . இது 1977 ஆம் ஆண்டு தேர்தலின் போது தொடங்கப்பட்டது, பின்னர் அது இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. இவரைப் பற்றி பல நினைவுகள் உள்ளன. இருப்பினும் இவரது மகள் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை தற்போது பாஜகவின் தலைவர்களில் ஒருவராக உள்ளார். "கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான்..."
இனிய தமிழ் இவர் வழியாகக் கேட்பது. இனி இயலாது...!
கருத்துகள்