CBI தாக்கல் செய்த வழக்கில் குற்றவாளிகள் காசி மாயன் உள்ளிட்ட ஐந்து ஊழல் அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறை, தலா 6 லட்சம் அபராதம்
சிறப்புச் செய்தியாளர்:- ரெங்கநாதன் திருப்பதி. வங்கிக் கடன் மோசடி வழக்கில் முன்னாள் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் பணி அலுவலர் காசி மாயன் உள்ளிட்ட
அந்த உத்தரவின் படி, சொத்து உரிமையாளர் மேற்கூறிய வங்கியின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை கிளையிலிருந்து தனது மூன்று சொத்துக்களை அடமானமாக வைத்துக் கடன் பெற்றுள்ளார்.
அதன் படி வங்கி தொடர்ந்த வழக்கு முடிவில் பொது ஏல நடைமுறையைப் பின்பற்றாமல் ஒரு சொத்தை குறைத்து மதிப்பிட்டு DRT கடன் வசூல் தீர்ப்பாய அலுவலர் கூட்டாக சதி செய்து ஏலம் விட்டதன் மூலம் சொத்து உரிமையாளரையும் தனியார் துறை வங்கியையும் ஏமாற்றியதற்காக, வங்கி மேலாளர் மற்றும் மதுரை கடன் வசூல் மீட்புத் தீர்ப்பாயத்தின் (DRT) அப்போதய பணி அலுவலர் எஸ்.காசிமாயன் உள்ளிட்ட இரண்டு முன்னாள் அலுவலர்கள் உட்பட ஐந்து பேரை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதன்கிழமை குற்றவாளிகள் என அறிவித்துத் தண்டனை விதித்தது.
மதுரை உத்தங்குடி DRT யின் முன் பணி செய்த கடன் வசூல் மீட்பு அலுவலர் எஸ். காசிமாயன் மற்றும் மேல் பிரிவு எழுத்தர் ஆர். செல்வராஜ், செல்வராஜின் மனைவி ஆர். அனிதா மற்றும் அவரது மைத்துனர் ஆர். ராஜேஷ் கண்ணன் மற்றும். மதுரை தனலட்சுமி வங்கியின் அப்போதைய கிளை மேலாளராக இருந்த. என். வாகீஸ்வரன் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து CBI தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
உத்தரவின் படி, சொத்து உரிமையாளர் மேற்கூறிய வங்கியின் மும்பை கிளையில் தனது மூன்று சொத்துக்களை அடமானம் வைத்துக் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர் தனது தொழிலில் நஷ்டத்தைச் சந்தித்தார், கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியவில்லை,
அதைத் தொடர்ந்து மும்பை DRT முன் சொத்துக்கள் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இறுதியில் இந்த நடவடிக்கைகள் மதுரை DRT க்கு மாற்றப்பட்டன. கடன் வசூல் தீர்ப்பாயம் மதுரை கிளையானது III & IV தளம், கல்யாணி டவர்ஸ் 4/162 மதுரை-மேலூர் சாலை (மீனாட்சி மிஷன் மருத்துவமனைஅருகில்) உத்தங்குடி அஞ்சல், மதுரை - 625 107 முகவரியில் செயல்படுகிறது.
சொத்து உரிமையாளரையும் வங்கியையும் ஏமாற்றுவதற்காக, மேற்கண்ட ஐந்து பேரும் கூட்டாகச் சேர்ந்து சதி செய்து, பகிரங்கமாக ஏலம் நடத்தாமல், விதிமுறைகளை மீறி இரகசியமாக ஏலம் நடத்தி, சொத்தை மார்க்கெட் மதிப்பை விட குறைந்த விலைக்கு விற்றதாகவும், சொத்து அவர்கள் உறவினர்களான அனிதா மற்றும் கண்ணனுக்கு விற்கப்படுவதை உறுதி செய்ததாகவும் CBI வழக்குப் பதிவு செய்து பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அப்போது கூறியது. அடமானக் கடன் சொத்துக்கான உரிமையாளர் மும்பை கடன் வசூல் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (DRAT) ஐ நாடிய போதிலும், விற்பனையை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு தடை உத்தரவு வழங்கப்பட்ட போதிலும், எஸ்.காசிமாயன் விற்பனைச் சான்றிதழை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி வழங்கினார்.
இருப்பினும், வழக்குத் தொடருவதில் உள்ள காலதாமதம் மற்றும் சட்டத்தின் சில ஓட்டைகளைக் காரணம் காட்டி விசாரணை நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களை CBI சமர்ப்பித்துள்ளதாகவும், விசாரணை நீதிமன்றம் மேற்கண்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்திருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், அவர்களின் விடுதலை உத்தரவை ரத்து செய்து,
ஐந்து குற்றவாளிகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூபாய்.6 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமர்ப்பித்தனர், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், 2025 மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் அவர்களின் தண்டனையை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கில் CRL A(MD) 297/2019 தீர்ப்பு 115 பக்கங்கள் கொண்டதில் கூறப்பட்டது. அதன் படி இந்தத் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
In a CBI corruption case, the Madurai Bench of the Madras High Court sentenced five individuals, including former DRT officials S. Kasimayan (then Recovery Officer) and Selvaraj (then UDC), to five years of rigorous imprisonment and a combined fine of ₹27 lakh for fixing upset prices of properties below market value. இதே எஸ். காசிமாயன் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டம்
மேலத்திருவேங்கடநாதபுரம் ஸ்ரீ மருதமலை முருகன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 14 ஏக்கர் 50 சென்ட் புஞ்சை நிலத்தில் உள்ள மிகப்பெரிய அலுமினியம் பிளேட் தயாரிப்பு தொழிற்சாலையை நடத்திய நமது முதல்வர் காணாடுகாத்தான் வெ.வீர.நா.வீர.நா.நாகப்பச் செட்டியார் குடும்பத்திற்குப் பாத்தியப்பட்ட பதினான்கரை ஏக்கர் நிலத்தை மோசடிமாக கூட்டு சதி செய்து OA 492 /2000 வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி திமுகவின் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பனுக்கு
ஒன்றறை ஏக்கர் பஞ்சை நிலம் மட்டுமே ஏலம் விடப்பட்டது மீதம் 13 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து நில உரிமையாளர்கள் தொடர்பான ஆட்கள் வெளியூர் வசிக்கும் சூழ்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து பிறகு 50 சென்ட் நிலம் மட்டுமே மீதம் உள்ளதாக ஒரு பொய்யான கணக்கு தயார் செய்து பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தைப் பயன்படுத்தி அதில் உள்ள மிகப்பெரிய ஊழல் அலுவலர்கள் மூலம் 8-A பேக் பைல் இல்லாமல் பொய்யான முறையில் 3 ஆம் நம்பர் கணக்கில் வராமல் ஏமாற்றியவராவார். மற்றும் 3 கோடி மதிப்பிலான அலுமினிய பிளேட் தயாரிப்பு தொழிற்சாலை எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், கட்டிடங்கள் முழுவதும் மோசடி விற்பனை செய்தவராவார்.
அது குறித்து வெ.வீர.நா.வீர.நா.நாகப்ப செட்டியாரின் பதிவு பொது அதிகார முகவர்களான எஸ்.கே.புலித்தேவன் பாண்டியன் , வழக்கறிஞர் எஸ். பழனிவேலு ஆகியோர் இது குறித்து எஸ்.காசி மாயன் மீது புகார் மனு CBI (ACP) க்கு மேல் விசாரணை கேட்டு அப்போது அனுப்பிய நிலையில் மேற்கண்ட புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு W.P. 25021/2005 ஐ மீறிய காசிமாயன் அதோடு அல்லாமல் பத்திரிகை விளம்பரம் செய்து திருமயம் பகுதியில் உள்ள இதற நஞ்சை, புஞ்சை சொத்துக்களை ஏலம் விட முயற்சிக்க அதைத் தடுத்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் மதுரை மூத்த வழக்கறிஞர் கை. பாலசுந்தரம் அவர்கள் மூலம் நாகப்ப செட்டியார் சகோதரி அழகம்மை ஆச்சி மனுதாரராக OS: 84/2008 வழக்கில் குற்றவாளி S.Kasimayan D4 ஆவார். ஆனால் அந்த ஏலத்தை வருமான வரித்துறை ஆக்ஷ்ன் டிராப் செய்து கடிதம் அனுப்பிய நிலையில் ஆனாலும் அதை மீறி அந்த ஏலம் முழுமை பெறாத நிலையில் சிலரிடம் பணம் வசூல் செய்து DRT க்கு கணக்குக் காட்டாமல் துறையூர் பகுதியில் இருந்து தலைமறைவானவர் தான் இந்த மோசடி எஸ். காசி மாயன்.
தற்போது நடைபெறும் நமது ஆவணங்கள் குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் தீர்ப்பு விரைவில் வரும் போது அதனடிப்படையில் CBI (ACP) இவர் மீதான மற்றொரு தண்டனை காசி மாயன் உள்ளிட்ட நபர்கள் அடைவது நிச்சயம். அதில் அவர் கும்பல் தப்பிக்க முடியாதபடி லோக் ஆயுக்தா மூலம் தீர்வு வரும் என வழக்குத் தொடர்ந்து திருமயம் தாலுகா துளையானூர் பூர்வீக நிலத்தின் ஏலத்தை தடுத்து நடவடிக்கைகள் எடுத்த நிலையில் அதை மீறி அவ்வூர் மக்கள் பலரிடம் பணம் வசூலித்து தலைமறைவான இந்த காசி மாயன் தற்போது முதல் ஐந்து வருடம் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள நிலையில் இரண்டாவதாக திருநெல்வேலி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கடன் வசூல் குறித்து நமது புகார் மனுவை சிபிஐ இனி விசாரணை நடத்தி அதிலும் மேற்கண்ட நபருக்கு தண்டனை பெற்றுத்தரும் ஆக்கிரமிப்பு செய்த ஊழல் நபர்கள் உச்சபட்ச பதவியில் இருந்தாலும் லோக்பால் வரை எங்கள் முயற்சியில் ஆக்கிரமிப்பாளர்கள், ஜாதி பண அரசியல் பலமிருந்தாலும் அகற்றப்படுவார்கள் வழக்கில் தண்டனை அடைவார்கள்
அதற்கான நமது நடவடிக்கைகள் தொடரும். இந்த நிலையில் தற்போது தீர்ப்பில் தண்டனை வழங்கிய நீதியரசர் கே.கே. ராமகிருஷ்ணன் உத்தரவில் "ஊழல் என்பது அனைத்து திசைகளிலும், அனைத்து துறைகளிலும் பரவும் ஒரு புற்றுநோய் என்று குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஏராளமான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியும், பொருத்தமற்ற உண்மைகளுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்தும் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிரான வழக்கை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களின் தேவையும் பேராசையும் அவர்களை எந்தவொரு சாத்தியமான துறையையும் சுரண்டும் அளவிற்குத் தள்ளியுள்ளது. மற்றொரு தரப்பினரின் இழப்பில் ஆதாயம் பெறுவதற்காக மோசடிச் செயலைச் செய்வதன் மூலம் மற்றொரு நபரின் பணத்தைச் சுரண்டுவது பொதுவாக வெள்ளை காலர் குற்றங்களின் ஒரு பகுதியாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது."மோசடி வழக்கில், பேராசை கொண்ட நபர்கள் மற்றொருவரின் இழப்பில் ஆதாயம் அடைகிறார்கள். இந்த வழக்கு விதிவிலக்கல்ல. குறைந்தபட்ச தண்டனை வழங்க இந்த வழக்கு எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் வயது மற்றும் பல்வேறு நோய்கள் மற்றும் பிற தணிக்கும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சமநிலையான பார்வையை எடுக்க முனைகிறது," என்று நீதிபதி கூறினார். பின்னர் அவர் ஐந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ₹ 6 லட்சம் அபராதமும் விதித்தார். "....சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்துப் பல வகையிலும். கொள்ளை அடிக்கிறார், பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப். பாமர மனுஷனை வலையினில் மாட்டி, எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.."
கருத்துகள்