காவல்துறை சித்ரவதைப் படுகொலை குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்கள் எழுப்பிய நிலையில் சிபிசிஐடி விசாரணை
எந்த வழக்கிலும் காவல் துறை அடித்து விசாரிப்பது என்கிற போக்கும் உடனே நீதி வேண்டும் என்கிற போக்கும் மாற வேண்டும் ; நமது எதிரியாகவே இருந்தாலும் அடித்து விசாரிப்பதை ஆதரிக்கக் கூடாது.
போலீஸ் சித்திரவதையில் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ள வைப்பது கொடூரமானது.
இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டியம்மாள் உயிரோடு வந்த கதை நாம் அறிந்தது தான்.இதே காவல் நிலையத்தில் கடந்த காலத்தில் வெள்ளைக் கண்ணு மகன் ஜெகன் என்ற நபர் இதேபோல் கொல்லப்பட்ட சம்பவம் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய வரலாறு உண்டு"மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்."- என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கேள்விதிருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொலை : சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது காவல்துறை நடத்திய படுகொலையாகும்.
ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும், காவல்துறைக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுவதனால் தான், இதுபோன்ற மனித நேயமற்ற கொடூரச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற காவல்துறையின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலுமே, காவல்துறையின் மரணங்களுக்கு அடித்தளமாக உள்ளது.
இந்தியாவில் 90 விழுக்காடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான், காவல்துறை மரணங்கள் அரங்கேறி வருகிறது.
மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர்.
வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது.
எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜேஷ் குமார், சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாஷ் பெயர் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையில் புகார் தாரர் குறித்து சரியான விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை.கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சில முக்கியமான காவல்நிலைய கொடிய மரணங்கள் குறித்து ஒரு பார்வை:-
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
நகை திருட்டு வழக்கு ஒன்றில் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், சூர்யா ஆகியோர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சத்தியவாணன் உயிரிழந்தார்.
2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம்
திருவண்ணாமலை: தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி, சாராய விற்பனையில் ஈடுபடுவதாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறையில் மரணம்
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
பரமத்தி வேலூர் : பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பாலியல் புகார் தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
இராமநாதபுரம்: முதுகுளத்தூரில், மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல் துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு வீடு திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் அவர் உயிரிழந்தார்
2022 ஆம் ஆண்டு
தருமபுரி: கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபரான பிரபாகரன், நகை திருட்டு வழக்கில் கைதான நிலையில் சிறையில் மரணம்
2023 ஆம் ஆண்டு
ஜுலை மாதம்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம். நகை திருட்டு வழக்கில் கைதான அவர் காவல்நிலையத்திலேயே உயிரிழப்பு
மதுரை:சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த வேடன் என்பவர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணம்
2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்
சிவகங்கை: திருப்புவனம் அருகே நகை திருட்டு புகார் வழக்கு பதிவு இல்லாமல் தனிப்படை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
திருநெல்வேலி: ஆமீன் புரத்தைச் சேர்ந்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து மரணம்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் ( வயது 25) என்பவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு காவல் நிலையத்தில் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்திருந்தது. தமிழ்நாடு முதல்வர் நடத்திய இன்றய கூட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்!
மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திமுக அரசு திகழ்ந்து வருகிறது. என்றும்
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஆனால் பல முக்கிய தலைவர்கள் தரப்பில்..யார் அந்த அகிலா?
திருபுவனம் காவல் நிலையத்தில் வாய்வழியாக புகார் கொடுத்ததன் பேரில் 9 1/2 பவுன் நகை திருடியதாக ஒரு கோவில் காவல் பணியில் இருந்த இளைஞனை அ டித்துக் கொலை செய்யும் அளவுக்கு காவல்துறை இறங்குகிறது என்றால் அவ்வளவு செல்வாக்கு மிக்க அந்த அகிலா யார்? அவருடைய பின்னணி என்ன?
ஒரு திருட்டு போய்விட்டது அல்லது பிரச்சினை நடந்து விட்டது என்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துவிட்டு காவல் நிலையத்துக்கு பலமுறை அலைந்தாலே என்ன ஏது என்று கண்டுகொள்ளாத காவல்துறை இந்த அளவுக்கு சீரியஸ் ஆக இறங்கி வேலை செய்கிறார்கள் என்றால் அவ்வளவு வலிமையானவர் செல்வாக்கான புகார்தாரர் யார்?CBCID விசாரணை என்ற நிலை மாறி CBI விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுகிறது.
6 காவலர்கள் பணியிடை நீக்கம் என்ற போலி கண் துடைப்பும் வேண்டாம். நிரந்தர பணி நீக்கம் மற்றும் கைதும் தேவை என்பதும்.
மாவட்ட SP-யையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவான நிலையில். அதே போல் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்த முக்கிய நபரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பதே பலரது விவாதம்
புகார் கொடுத்த பெண் மணிக்கும் தலைமைச் செயலக VIP க்கும் உள்ள தொடர்பும் வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும்.
தவிர அஜித் குமார் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற மறைக்கப்பட்ட உண்மையும் தெரிய வேண்டும். ஒரே வழி CBI விசாரணைதான்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சார்பாக தீர்ப்பு முடிவு செய்யும். இந்த நிலையில் இரவு வந்த செய்தி பணிநீக்கம் செய்யப்பட்ட 6 காவல் பணியாளர்களில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜித் குமார் இறப்பு தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளாக அரசு தரப்பில் தகவல்:
"சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்தக் காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய. ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், FIR குற்ற எண். 303/2025 ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளதாக" தெரிவித்திருந்த நிலையில் புகார் அளித்த பெண்கள் குறித்து விபரம் தரப்படவில்லை இனி விசாரணை நடந்து அதில் சம்பந்தப்பட்ட அணைத்துப் பணியாளர்கள் சிபிசிஐடி காவல் தரப்பில் கைது செய்ய வேண்டும். நடக்குமா என்பது எழு வினா ? இதில் பொது நீதி யாதெனில் அஜீத்குமார் என்ற இளைஞரின் லாக்கப் கஸ்டடி மரணம், காவல்துறை வன்முறையின் கொடூர முகத்தை மட்டுமல்லாமல், தனிநபரின் மேட்டிமைத் திமிர் எப்படி ஒரு உயிரைப் பறிக்க வழிவகுக்கும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்தப் படுகொலை
திருமங்கலம் சிவகாமி என்ற வயது முதிர்ந்த பெண்மணி தனது மகள் நிகிதாவுடன் கோவிலுக்கு சுவாமி கும்பிட வந்தபோது, பார்க்கிங் டிக்கட்டுக்கு பணம் பெறப்பட்டு வேலட் பார்க்கிங் சேவைக்காக அஜித்திடம் சாவியைக் கொடுத்துள்ளனர், அரசியல் செல்வாக்கு மிக்க தன்னை பார்க்கிங் ரசீது வாங்க வைத்த கோபம் அவர்களுக்கு இருக்க.
சுவாமி கும்பிட்டு விட்டுத் திரும்ப வருகையில் கார் இந்தத் திமிர் பிடித்த சீமாட்டிகளிடம் கிடைக்க இருபது நிமிடம் தாமதமாகியுள்ளது, அந்தக் கடுங்கோபமும் அவர்கள் தலைக்கேற இந்தக் கொலைவெறி அரங்கேறியுள்ளது.
பின்னர், காரில் நகை மற்றும் பணம் காணவில்லை என்று பொய் புகாரை மேலிடத்தில் உள்ள அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு நபர் மூலம் வாய் வழியாக அளித்துள்ளனர். இந்த ஒரு பொய் புகார், ஒரு அப்பாவி இளைஞர் காவல்துறை காவலில் மரணமடையக் காரணமாக அமைந்திருக்கிறது.
இந்தச் சம்பவம், சாதாரண குடிமக்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஒரு எதேச்சாதிகாரப் போக்கின் துஷ்பிரயோகப் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட வேண்டும். காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு சிறிய தொகை அல்லது நகைக்காக, ஒரு நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை மரணமடையும் அளவுக்குத் தாக்கும் சூழலை உருவாக்கியதில், இந்தப் புகாரளித்தவர்களின் மனநிலையும் மெய்த்தன்மையும் ஒரு கேள்விக்குறியாகிறது.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒரு சிறிய சந்தேகத்தின் பேரில், ஒருவரை சித்திரவதை செய்து, உயிரைப் பறிக்கும் அளவுக்கு நிலைமை செல்வதற்குக் காரணம், புகாரளித்தவர்களின் அழுத்தமோ அல்லது அவர்களின் சமூக உறவு ஆட்சி அந்தஸ்து சார்ந்த ஒரு மேட்டிமை மனப்பான்மையோ நிச்சயம் ஒரு அகந்தை இருந்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. திமுகவின் மூத்த தலைவராக சிவகங்கை மாவட்டத்தில் பார்க்கும் சேங்கை மாறன் செயல் ஏற்புடையதாக இல்லை.
ஆளுங்கட்சியினரோடு அல்லது செல்வாக்கு மிக்கவர்களோடு தொடர்பு கொண்டவர்கள் அளிக்கும் புகார்களை காவல்துறை உடனடியாகக் கையில் எடுப்பதும், அதில் அத்துமீறிச் செயல்படுவதும் தமிழ்நாட்டில் புதிதல்ல.
சிவகாமி மற்றும் நிகிதாவின் புகார் எந்த அளவுக்கு நியாயமானது, அதற்கான ஆதாரங்கள் என்ன, புகார் அளித்தவர்களுக்கு இருந்த செல்வாக்கு என்ன என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன. அதை சிபிசிஐடி காவல்துறை விசாரணையில் வெளிக்கொண்டு வரவேண்டும் ஒருவேளை, இந்தப் புகாரின் பின்னணியில், காவல்துறையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் ஒருவித அதிகாரத் திமிர் இருந்ததா? இந்தச் சம்பவம், புகாரளிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் புகாரின் விளைவுகள் குறித்தும், ஒரு மனித உயிருக்கு அதன் மதிப்பு குறித்தும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும் என்ற பாடத்தை உணர்த்துகிறது.
அஜித்தின் மரணம் என்பது வெறும் காவல்துறையின் தவறு மட்டுமல்ல. அது, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் மேட்டிமைத் திமிரின் விளைவு. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும், காவல்துறையினர் உட்பட, தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அஜித்தின் மரணம், ஒரு நியாயமான விசாரணையை மட்டுமல்ல, இதுபோன்ற எதேச்சாதிகாரப் போக்குக்கும், மேட்டிமை மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு கருவியாகவே அமைய வேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு நபரின் சிந்தனை. மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களின் உறுதித் தன்மையை அறிந்து கொண்டதால் ஐந்து காவலர்கள் கைது.
படப்புறம் எனும் மடப்புரம் "ஸ்ரீ பத்ர காளி ஓம் ஹ்ரௌம் காளி மஹாகாளி கிலிகிலே பட் ஸ்வாஹா॥ ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் அத்ய காளிகா பரம் ஈஸ்வரி ஸ்வாஹா" இதுவே நீதி தேவதையின் மந்திரம்.
கருத்துகள்