இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்நாடு சார்ந்த நால்வர் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், திமுகவின் தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய ஆறு நபர்களின் பதவிக் காலம் நேற்று ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக ஆறு நபர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வானார்கள். அவர்களில், மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி என்ற கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகிய நால்வரும் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் அவையில் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்துப் பெற்றனர்.
“மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நடிகர் பதவி ஏற்ற போது "கமலஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் வணக்கம்” என தமிழில் உறுதிமொழி வாசித்துப் பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மகளுடன் வந்த நடிகர் கமல்ஹாசன்
'"இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்".எனக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் வழக்கில் தீர்வு கண்ட மூத்த வழக்கறிஞர் திருக்கோஷ்டியூர் கே.பராசரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் ஒன்று விட்ட உறவினர்கள். பராசரனின் மனைவி சரோஜா, கமல்ஹாசனின் உறவினர் பராசரன் கமல்ஹாசனுக்கு ஒன்றுவிட்ட மாமன் முறை ஆவார். கமல்ஹாசன் தந்தை சீனிவாசனும் சகோதரர் சாருஹாசன் உள்ளிட்டோரும் வழக்கறிஞர்கள் தான். டில்லியில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் கமல்ஹாசனை மாற்றியமைக்கும் என பலரும் பேசும் நிலை . தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்குக்
கிடைக்கும் சலுகைகள் குறித்த விபரமிது: அவர்களின் மாதச் சம்பளம் : 1.24 லட்சம்
நாடாளுமன்ற வருகை (Allowance) - ரூபாய் 2,500
பதவிக் காலத்தில், டெல்லியில் இலவச வீடு (அல்லது) விடுதி வசதி
பங்களா வீடு (சீனியாரிட்டி அடிப்படையில்)
அலுவலகப் பராமரிப்பு மற்றும் உதவியாளர் சம்பளம்: ரூபாய் 70.000
இலவசத் தொலைபேசி மற்றும் இணைய வசதி வழங்கப்படும்
இலவச மருத்துவ சேவை
நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடும்பத்தினருடன் ஆண்டுக்கு 34 முறை இலவச உள்நாட்டு விமானப் பயணங்கள் செல்ல அனுமதி!
மற்றும் ஓய்வூதியம்: ரூபாய் 31,000
தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணமாக எப்போது வேண்டுமானாலும் First Class இரயில் பணமின்றிப் பயணம் செய்யலாம்.
ஆண்டுக்கு 50,000 யூனிட் இலவச மின்சாரம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாலை வழி பயணச் செலவை அரசே ஏற்கும். அதோடு மத்திய அரசு வழங்கும் உறுப்பினர் நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் முழுவதும் மக்கள் பணிக்கு ஒதுக்கீடுகள் செய்ய கடிதம் வழங்க அனுமதி உண்டு.
கருத்துகள்