தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஆதிக்கம்
செலுத்திய குறுநில மன்னர்களான தற்போது நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் தங்களை பல்லவர்கள் வழி வந்தவர்கள் என தங்களின் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். அது போக கல்வெட்டு இல்லாமல் ஒரு நூல் "காடவர் வன்னியர் வரலாறு" என நடன.காசிநாதன், எழுதி வெளியிட்டது: மெய்யப்பன் பதிப்பகம் பக்கம்:7 வ் . உள்ளபடி அது உண்மை தானா என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வுகள் செய்ய வேண்டும்... அவர் கூற்றுப்படி நடுநாடு, திருமுனைப்பாடி நாடு பகுதிகள் என்பது தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தினர் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் 3 ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பல்லவய்களில் கடைசி மன்னன் அபராஜித வர்மனை முதலாம் ஆதித்த சோழன் போரில் தோற்கடித்து பல்லவப் போரரசிற்கு முடிவு கட்டினான். சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் சுயம்புவராயர்கள் திருவண்ணாமலையைத் தலைநகராமாக வைத்து ஆட்சி புரிந்தனர். காடவராயர்கள் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைநகராக வைத்து ஆட்சி புரிந்தனர். இவர்கள் இருவரும் சோழர்களின் மேலாதிக்கத்தின் கீழ் சிறு ஆட்சியாளர்களாகவும், அரசியலில் வேலை ஆட்களாகவும் இருந்தனர்.
12 நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியின் தென்கரையில் உள்ள திருமாணிக்குழி வட்டாரத்தில் வளந்தனார் எனும் காடவராயர், சோழரின் ஆணையராய் உப ஜமீன் ஆட்சி நடத்தி வந்தார். அவரையடுத்து அவர் வழியைச் சேர்ந்தவர்களான ஆட்கொல்லி அரசநாராயணன் கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப்படும் மணவாளப் பெருமாள் ஆகியோர் சோழர்களின் கீழ் ஆணை செலுத்தி வந்தனர்” அவர் வம்சத்தவரின் கல்வெட்டுகள் விருத்தாசலம்,
திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவில்களில் காணப்படுகின்றன.
வீரசேகரின் வழியில் வந்த காடவ அரசன் மணவாளப் பெருமாள் என்றழைக்கப்படும் காடவராயன் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பக்கம் பாயும் கெடிலம் ஆறுக்கு, தென் பகுதியிலுள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனக்கெனத் தனி நாட்டை உருவாக்கினான். சேந்தமங்கலத்தில் அவன் பெயரிலேயே வாணிலைக் கண்டேசுவரம் (கூடல் ஏழிசை மோகனான மணவாளப் பெருமாள் வாணிலைக் கண்டனான் காடவராயன்) என்ற சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார். காடவராயர்களில் இவன் சிறந்த வீரனாக விளங்கியதால் சோழ மன்னர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனி அரசு அமைத்தான்.
மேலும் காடவகுல மன்னன் மணவாளப் பெருமாள் தன்னுடைய தலைநகரை 1195 ஆம் ஆண்டில் தோற்றுவித்தான் என அவனது 5 ஆம் ஆண்டு கல்வெட்டுக் கூறுகிறது. இதை 1995 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் சேந்தமங்கலத்தில் நடத்திய தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்த சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. மணவாளப் பெருமாள் என்ற காடவராயனுக்குப் பிறகு அவனது மகனான கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவ அரசன் ஆட்சிக்கு வந்தார். பொன்னமராவதி யுத்தத்தில் பாண்டிய மன்னனிடம் தோல்வி கண்ட மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் குறு நில மன்னனாக விளங்கிய முதலாம் கோப்பெருஞ்சிங்கன் வீரமும் சூழ்ச்சியும் மிக்கவன்.பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் 1231 ஆம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் இராஜராஜ சோழனை வென்று முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றிவிழா கொண்டாடினான்.தோல்வியுற்ற மூன்றாம் இராஜராஜ சோழன் போசளமன்னனான வீர நரசிம்மனின் ஆதரவை நாடிச்சென்ற போது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் 1231 ஆம் ஆண்டில் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து மூன்றாம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான். மூன்றாம் ராஜராஜனை சிறையிலடைத்த சேதி அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான். இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.இந்தச் செய்தியை கடலூர் அருகே உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் கல்வெட்டு மற்றும் சகல வித்யா சக்ரவர்த்தியினுடைய கத்யகர்ணாமிர்தம் மூலம் அறியலாம்.மீண்டும் மூன்றாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.மீண்டும் 1253 ஆம் ஆண்டில் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.1255 ஆம் ஆண்டில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.ஆனால் 1279 ஆம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழ நாடு, திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் பாண்டிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது. அவனோடு காடவர்குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில், ஏழிசைமோகன் மணவாளப் பெருமாலின் மனைவி, அழகியப்பல்லவ விண்ணகர் எம்பெருமான் கோயிலை எடுப்பித்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. அக்கோவில் கலனாகிவிட்ட காரணத்தால் மீண்டும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் மீண்டும் கோயில் அமைத்துள்ளான் எனக் கல்வெட்டு கூறுகிரது. இக்கோயில் வைகுந்த பெருமாள் கோயில் என்றும் அழகிய பல்லவ விண்ணகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் வன்னியர் இனம் எந்த அடிப்படையில் வரலாறு கொண்டது என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவை
கருத்துகள்