சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் போட்டி விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'மீது ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய், வயது 20. இவர், மயிலாப்பூரில் தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். அதேபோல், அயனாவரம் பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்த அபிஷேக், வயது 20. இவரும், அதே கல்லுாரியில் படிக்கும் நிலையில் பிளஸ் 2 மாணவியை காதலிக்கும் விவகாரத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர், 'ரேஞ்ச் ரோவர்' காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க., கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவை காவல்துறை தேடிய நிலையில், நேற்று அவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். நித்தின் சாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, திருமங்கலம் பள்ளி சாலையில், பள்ளித்தோழன் மோகனின் பிறந்த நாளை கொண்டாடினர். அதே பகுதியில் உள்ள 'இராவுத்தர் தலைப்பாக் கட்டி பிரியாணிக் கடையில் சாப்பிட்டனர் பின்னர், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை அபிஷேக் ஓட்ட, பி...
RNI:TNTAM/2013/50347