முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாம் (மனைவி) துணைவி லீலாவதி காலமானார்

காலஞ்சென்ற சேலம் மாவட்ட தி மு க வின்  செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு வேளாண்மைத் துறை முன்னாள் அமைச்சருமான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி ரெங்கநாயகி  ஏற்கனவே காலமான நிலையில் இன்று இரண்டாம்  துணைவி (மனைவி) லீலாவதி காலமானார்         


 சேலம் கிழக்கு மாவட்டத் தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர்  ஆ.பிரபு M.B.B.S.,ன் தாயார் A.லீலாவதி ஆறுமுகம் 31.ஆகஸ்ட் .2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.58 மணியளவில் காலமானார் அவரது பூத உடல் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி மெயின் ரோடு, AVR கிருஷ்ணா வில்லாவில் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நாளை 01.09.2025 திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் பூலாவரியில் நடைபெறும். என 
சேலம் மாவட்ட தி.மு.க சார்பில் தகவல்.       



 
சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவுகள் சார்ந்த சுற்றம்  விரிவானது. வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரெங்கநாயகி, இரண்டாவது (மனைவி) துணைவி லீலாவதி. முதல் மனைவி ரெங்கநாயகிக்கு மகேஸ்வரி, நெடுஞ்செழியன் (எ) செழியன், நிர்மலா, ராஜேந்திரன் (எ) ராஜா என நான்கு பிள்ளைகள் மகேஸ்வரியின் கணவர் காசி, செழியனின் மனைவி பிருந்தா இவர் தான்  அப்போதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பவர்



இவர்களுக்கு சூர்யா, சிந்து என இரண்டு மகள்கள். நிர்மலா கணவர் மதிவாணன். இவர்களுக்கு கயல்விழி, பாரிவேல் என இரண்டு பிள்ளைகள். ராஜா மனைவி சாந்திக்கு மலர்விழி, கிருத்திகா என இரண்டு பிள்ளைகள். வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி லீலாவதிக்கு ஒரே மகன் டாக்டர் பிரபு. அவரது மனைவி கெளதமி. இவர்களுக்கு சித்தார்த் என்ற ஒரு மகனும் உண்டு. வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்துகள் விபரங்கள் குறித்து பார்த்தால் ஆறுமுகத்திற்கு, அவரது அப்பா சோழயப்பக் கவுண்டர் பூலாவரி அக்ரஹாரத்தில் பூர்வீக சொத்திலிருந்து பிரித்துக் கொடுத்த சொத்தின் மதிப்பு 2 ஏக்கர் 10 சென்ட் நிலமும், சில அசையும் பொருட்கள் மட்டும் தான். ஆனால் வீரபாண்டி ஆறுமுகம்  அரசியலிலிருந்து ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் கணக்கில் உள்ளவைகளையும், இல்லாதவைகளையும் சேர்த்தால்




வரும் கோடிகள் கண்ணைக் கட்டும் . வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததால் பல மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலம் எவ்வளவு,  நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு மற்றும் விவசாயம் பயன்பாட்டு நிலம் எவ்வளவு என்பதெல்லாம் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அத்துப்படி. அதனால், சேலம் மாவட்டம் கடந்தும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். சொந்த ஊரான பூலாவரியில் மட்டும் 150 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களும், 2 ஏக்கரில் கட்டப்பட்ட  சொகுசு பங்களாவும், சேலத்திலிருந்து கோயமுத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் வி.எஸ்.ஏ., எனும் பொறியியல் கல்லூரியும், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வி.எஸ்.ஏ எனும் வணிக வளாகம், சென்னை தியாகராயநகரில் பிரபு அப்பார்ட்மென்ட்ஸ், சென்னை வீடு இவை அனைத்தும் வீரபாண்டியாரின் வருமான வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் ஆன வெள்ளைக் கணக்கு.




இதோடில்லாமல், பினாமிக் கணக்குகளைத் தோண்டினால் விழுப்புரம், மற்றும் கடலூரில் பல ஏக்கர் முந்திரித் தோப்புகள், கேரளா மாநிலத்தில் ரப்பர் தோட்டங்களும், ஊட்டி, கொடைக்கானலில்  தேயிலை மற்றும் மிளகு காஃபி எஸ்டேட்களும், சென்னையில் பெட்ரோல் பங்க் என நீண்டுக் கொண்டே போகும்! தற்போது இந்தச் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தான் குடும்ப உறவுகளுக்கிடைய பல ஆண்டுகள் முன்பு முட்டல் மோநல் ஏற்பட்டது. பிருந்தாவனத்திலிருந்த பிருந்தா அப்போது போது வழக்குத் தொடுத்திருந்தார்



பிருந்தா, சீரங்கபாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான வீரபத்திரனின் மகள். படிப்பும் உயர்ந்த பண்பும் கொண்டவர். வீட்டிற்கு பிருந்தா மூத்த மருமகள் என்பதால் பிருந்தாவுக்கு வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் சகலரிடமும் ராஜமரியாதை. தன் கணவர் செழியன், திமுகவில் உயர்ந்த நிலையில் இருந்ததால் பிருந்தா அதிகார மையத்தின் உச்சத்திலிருந்தார். ஆனாலும், கட்டபஞ்சாயத்தோ, அடாவடித் தனங்களோ செய்யாமல் குடும்பத் தலைவியாக தன் கணவனுக்கும், குழந்தைகளுக்கு ஏற்ற சராசரி பெண்ணாகவே இருந்தார். ஆனால் கணவரின் திடீர் இறப்புக்குப் பின்னால் பிருந்தாவின் நிலை தலைகீழாக மாறியது. சொத்துகளுக்கு பங்குபோட வந்து விடுவார் என்று வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தாரால் கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பிருந்தா.



அவரது குழந்தைகளைக் கூட தாத்தாவிடம் அண்ட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் அவரது கணவரின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வரும்போது கூட கணவரின் வீட்டுக்குச் செல்லாமல்,  சமாதிக்கு நேராகச் சென்று சற்று நேரம் மனம் விட்டு அழுதுவிட்டு திரும்பி வந்து விடுவார் இதுபற்றி ராஜாவிடம் யார் கேட்டாலும் 'எங்க அண்ணன் செழியன். திருமணம் ஆனதும் சேலத்தில் வீடு வாங்கி தனியாகப் போய்விட்டார். நானும், அப்பாவும் தான் கிராமத்தில்  இருந்தோம். அண்ணனுக்கு சிட்டி லைஃப் தான் பிடிக்கும். பிருந்தாவும் டவுன்லையே வாழ்ந்த பொண்ணு..அதனால் சேலத்தில் அண்ணன் இருந்த வீட்டிற்கே போய் விட்டார். 'குழந்தைகள் படிப்புக்கு வசதியாக சேலத்தில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று பிருந்தாவும் சொல்லிவிட்டது. அதற்காக பிருந்தா மீது எங்களுக்கும், எங்கள் மீது அவருக்கும் உள்ள பாசமும் அன்பும் சற்றும் குறையவில்லை' என்றே கூறி வந்துள்ளார் மறுக்கப்பட்ட சொத்துக்கள் ஒரு சராசரி தந்தையைப் போலவே வீரபாண்டி ஆறுமுகமும் தனது மூத்த மகள் மகேஸ்வரி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அதற்கு இன்னும் கூடுதலான காரணம் மகேஸ்வரி பிறந்த பிறகு தான் கிழேயிருந்தவர் அரசியலில் மேலே வந்து அவர் பிரகாசிக்கத் துவங்கினார். 



அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளும் தேடி வந்தது. மகேஸ்வரியும் தன் அப்பாவின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால் திருமணமாகியும் அவரது மாமனார் வீட்டிற்குப் போகாமல் அப்பா வீட்டிலேயே இருந்து விட்டார். இவரது பூர்வீக சொத்துக்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. அதேநேரம் தனது சுயசம்பாத்தியத்தில் வந்த பெரும்பாலான சொத்துக்களை முதல் மனைவி ரெங்கநாயகி மீதும் அவருடைய மூத்த மருமகள் பிருந்தாவின் பேரிலும் எழுதி வைத்திருந்த வீரபாண்டி ஆறுமுகம்  பாகப்பிரிவினை செய்ய அனைவருக்கும் சமமாக எழுதி வைத்திருப்பதாகச் சொல்லிய போதும் இந்த பாகப்பிரிவினையில் முதல் மனைவி ரங்கநாயகியின் வாரிசுகளுக்கு மன வருத்தம். தங்களுடைய சொத்துக்களுக்கு வாரிசு தாரராக லீலாவதி மகன் இன்னொருவர் வந்து விட்டாரே என்று எண்ணியதால் தான் ராஜா தரப்பில், பிருந்தாவின் மூலமாக இந்த பாகப்பிரிவினை செல்லாது என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, 'பாகப்பிரிவினை செல்லாது' என நீதிமன்றம் சொல்லிவிட்டால், டாக்டர் பிரபுவிற்கு தராமலேயே அனைத்து சொத்துக்களையும தாங்கள் வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணமும் ஒரு காரணம் எனும் நிலையில். இதில் பிருந்தா பகடைக்காய்" என்கிறார்கள் டாக்டர் பிரபுவின் ஆதரவாளர்கள். ராஜாவின் முதல் மகள் மலர்விழியின் திருமணம் நிகழ்வுகள் தடபுடலாக நடைப்பெற்றதால், அப்போது வீரபாண்டி ஆறுமுகம் குடிம்பத்தினர் அனைவரது கவனமும் அதில்தான் இருந்தது. இந்தத் திருமணத்தின் மூலம் மீண்டும் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை திமுகவின் தலைமை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று சேலமே வியக்கும் வண்ணம் வீரபாண்டி ஆறுமுகம் கல்லூரியான வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரியில் வரவேற்பு விழா  நிகழ்ச்சி படு ஜோராக இருக்க வேண்டும் என்பதற்காக தடபுடலான வேலைகள் நடைப்பெற்றது.


குடும்பத்திற்குள் நடக்கும் குஸ்திகள் போதாதென்று வீரபாண்டி ஆறுமுகத்தின் எதிர்க் கோஷ்டியும்  குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது ."2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை ஜனார்த்தனராவின் சகோதரர் கங்காராமிடமிருந்து 50.5 சென்ட் நிலத்தை திமுக கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கிய வீரபாண்டி ஆறுமுகம், அந்த நிலத்தை தன் குடும்பத்தினரின் பெயரில் எழுதி, தங்கள் குடும்பச் சொத்தாக மாற்றியிருப்பது பற்றி திமுக தலைமைக்கு தெரியப்படுத்துவோம்" என்றது அந்தக் கோஷ்டி.

அப்படியானால் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தில் இனி அரசியல் களத்தில் வரும் காலங்களில் முதல் மனைவி மகன் ராஜாவின் மனைவி மலர்விழி இரண்டாம் (மனைவி) துணைவி மகன் பிரபு இடையே தான் அரசியல் நகர்வுகள் இருக்கும். செத்தும் கெ(கொ)டுத்தான் சீதக்காதி கதைதான்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியலில் தீவிரம் காட்டுகிறார். வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசு  அங்கீகாரம் தனக்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக  வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடம், ஆ.நெடுஞ்செழியன் நினைவிடம், ஆ.ராஜா நினைவிடம் அமைந்துள்ள பூலாவரியில், வீரபாண்டி ஆறுமுகத்தின் பூர்விக இல்லத்தில் தங்கி அரசியல் பணியாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். இரண்டாம் (மனைவி) துணைவி மகன் 

வீரபாண்டி ஆறுமுகம் சொத்துகள் தொடர்பாக முதல் மனைவியின் வாரிசுகள் மற்றும் மருத்துவர் பிரபு ஆகியோரின் குடும்பத்திற்கு இடையே சுமூக உறவில்லை.  வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து  பத்தாண்டுகள் கடந்த பிறகும் சொத்துகள் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வராததால், பூலாவரியில் குடில் அமைத்து, அதில் தங்கி வீரபாண்டி ஆறுமுகம் விசுவாசிகள், திமுகவின் தொண்டர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டு உதவி வருகிறார் மருத்துவர் பிரபு. இனி மலர்விழியும், பிரபுவும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியை எதிர் நோக்கியே அரசியல் செய்கிறார்கள் என சேலம் திமுகவில் பேசுவது பலமாக வெளியே கேட்கிறது.  வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடிருந்த காலத்தில் அவரின் கண்ணசைவுக்கு ஏற்ப சேலம் மாவட்ட திமுக அசைந்தது. ஆனால், இன்றைக்கு அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் சிறிய அளவிலான உயர்விற்கே அவர் குடும்பத்தினர் முட்டி மோத வேண்டிய பரிதாப நிலை வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான்  ஆகவே இதிலிருந்து தெரிவது யாதெனில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை யாரும் அனுபவிக்க முடியாது.

உயர்வு போல தெரியும் ஆனால் அது உயர்வன்று 

மண்ணில் விழுந்தவர்கள் வானத்தில் பறப்பதும்

வானத்தில் பறப்பவர்கள் பாதாளத்தில் வீழ்வதும்

அரசியலில்  காலம் கற்பிக்கும் பாடம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...