முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணித்த சைக்கிளையே பஞ்சராக்கிய கருப்பையா மூப்பனார் குட்டிச் சுவருக்கு முட்டுக்கொடுத்த பாஜக.

பயணித்த சைக்கிளையே பஞ்சராக்கிய கருப்பையா மூப்பனார் குட்டிச் சுவருக்கு முட்டுக்கொடுத்த பாஜக.




அரசியல் களத்தில் சத்திரியர்கள் வெற்றி பெற சாணக்கியர்கள் பணி செய்ய வேண்டும்  (அதை வர்த்தகம் செய்யும் பிகே எனும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட கூலிக்கு பணி செய்யும் நபர்கள்) ஆனால் இப்போது பாஜகவில் பல சாணக்கியர்கள் உண்டு  இருந்தும் பல கட்சிகள் உடைந்தும்  இதுவரை பலனில்லை கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விட்டு வந்த நபர் ஒருவர் புகழ் பாடினால் பாஜக வளரும் என்பது கற்பனை தான்,  ஜெயலலிதா இருந்த போதிருந்த பலம்பொருந்திய அதிமுக இப்போது இல்லை, ஜந்து கூராக உள்ளது, பாமக இரண்டு கூராக உள்ளது, விஜயகாந்த் இருந்த போதிருந்த தேமுதிக இப்போது இல்லை பலம் குறைந்த நிலையில் உள்ளது,


ஜி.கே. வாசன் டெல்லி அரசியல் தெரிந்தவர் மற்றும் பேரம் பேசி பலரை கூட்டி வைப்பதில் வல்லவர் அதில் தான் அவருக்கு அரசியல் ஆதாயம் அவரிடம் மருந்துக்குக் கூட தொண்டர்கள் இல்லை ஏ.சி.சணமுகத்தின் புதிய நீதிக் கட்சி தொண்டர்களை விட ஜி.கே.வாசனின் தொண்டர்கள் குறைவு உடையார்கள் மட்டுமே கொண்ட ஜாதிக் கட்சி நடத்தும் ஆசிரியர் பச்சை முத்துவின்  (பாரிவேந்தர்) தொண்டர்களை விடக் குறைவானதே,  மாநிலத்தில் முழுவதும் தேடினால் கூட ஊருக்கு ஒரு தொண்டர் இல்லாத கட்சி தமிழ் மாநிலக்  காங்கிரஸ்


ஏதோ  1996 ல் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு காரணமாக உருவான திடீர் அமைப்பு மாவட்டத்தில் உள்ள நபர்கள் மொத்தமும் இரண்டு வேன்களில் ஏற்றி விடலாம் என ஒரு தலைவர் கூறியது இப்போது நினைவில் வருவது தான் நாமும் அறிந்தது அது கடந்த காலத்தில் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் பலநூறு கோடியில் நடைபெற்ற ஒரு வளர்ப்பு மகன் திருமண விழா மக்கள் வாக்கு வங்கி எதிரலை பாதிப்பு அதன் பின்னர் ஜெயலலிதா இல்லம் உள்ள போயஸ் தோட்டத்தில் வசித்த நடிகர் ரஜினி காந்த் உடன் சாலையில் நடந்த சில பிரச்சினைகளும் அதன் பின்னர் நடந்த மோதல் இப்படி ஒரு ஆளும் கட்சி மீதான எதிர்ப்பை நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் மூலம் மற்றும் முத்து படம் மூலம் அந்த அப்போதய நடிகர் உச்சபட்ச பிரதான இடம் பெற்ற ஒரு நடிகரின் அண்ணாமலை திரைப்பட சைக்கிள் பெற்ற வெற்றி ஆனால் அரசியல் வியாபாரிகள் அதை தங்கனின் வென்ற வெற்றி எனக் கொண்டாடி கபீர்ஸ்தலம் ஜி.கருப்பைபா மூப்பனார் பெருந்தலைவராக பலூன் போல ஊதி காட்சிப்படுத்தி ஆட்சி அமைத்த கதை பெரிது எனினும் நாம் சிறிதளவு தான் கூறியுள்ளோம். இந்த நிலையில் அவர் காலமாகி மக்கள் மறந்து போன அடுத்த தலைமுறை கடந்தும் 24 வருடம் கழித்து விழா




ஒரு அகில இந்திய காங்கிரஸ் கட்சியை உடைத்து தான் வளர்ச்சி கண்ட தமாக தலைவர் அதில் பலனடைந்த ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் தஞ்சம்  ஆனால் பண்ணையார் ஜி.கருப்பையா என்ற மூப்பனார் ஜாதிப் பெயர் கொண்ட தலைவர். அவர் பல மூப்பனார் ஜாதிப் பிரமுகர்களான சொக்கலிங்கபுரம்  வீரணன் அம்பலம் நத்தம் ஆண்டி அம்பலம் போல பத்து தொகுதிகளை பரம்பரை பரம்பரையாக ஜாதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி மற்ற ஜாதிகளை ஒரு பெருந்தலைவர் போல பின்னுக்கு தள்ளியவர் என்ற வரலாற்றுப் பிண்ணனி தெரியாமல் அவரை  இதுவரை மக்கள் மத்தியில் தேர்தலையே சந்திக்காமல் பாஜகவின் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் இப்போது புகழ் பாட வேண்டிய அவசியம் ஏன் மற்றும் அந்த நிலை ஏன் ஏற்பட்டது ?  அவர் பேசிய போது “ஆளுமைமிக்க மூப்பனார் தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தர்ப்பம் உருவானது. ஆனால், அவர் பிரதமராக வேண்டிய தருணத்தை அவர்கள் (திமுகவின் முன்னாள் முதல்வர் தரப்பில்) தடுத்தனர். அந்த சக்தி யார்  என்று நமக்குத் தெரியும். தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழின் புகழ் என்று திரும்பத் திரும்ப பேசுபவர்கள் தமிழர் பிரதமர் ஆக வேண்டிய அந்தத் தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்தனர். மூப்பனார் பிரதமர் ஆவதைத் தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம்'' என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த காலத்தில் 






தமிழர்களை பாஜக அவமதிக்கவே இல்லையா?  என மற்றொரு தரப்பினர்  முன் வைக்கும் விமர்சனமும் நம் காதில் விழுந்தது.      அதாவது.நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் 'தமிழர்கள் நாகரிகமற்றவர்கள்' எனச் சொன்னாரே (2025 மார்ச்)

அடுத்ததாக  முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர் பாண்டியனை  பாஜக மோசமாக விமர்சனம் செய்ததே. . ’’தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?’’ என்றார் மத்திய அமைச்சர் அமித்ஷா (2024 மே)


விமர்சனங்கள் செய்தாரே.              ‘’ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது’’ எனச் சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல வர்ணித்தார் பிரதமர் நரேந்திர மோடி (2024 மே)

பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழர் வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீடியோவும் வெளியிட்டது.        ’’தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள்’’ என்று மத்திய அமைச்சர் ஷோபா பேசினார். (2024 மார்ச்). இது எல்லாம் தற்போது தமிழ்நாடு மூலம் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பலருக்கும் அந்த இடத்தை பிடிக்க ஆசை வருகிறது செல்வி ஜெ.ஜெயலலிதா இடத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வைத்துப் பார்க்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உருவாக்கி மூப்பனார் நினைவு நாளில் வரவழைத்துப் பேச வைக்கும் நிர்பந்தம் ஏன் என்பதை ஜி.கே.வாசன் குரூப் மட்டுமே நன்கு அறிந்த விஷயம்.

ஜி. கே. மூப்பனார் (ஆகஸ்ட் மாதம் 19, ஆம் தேதி 1931 ஆம் ஆண்டில் பிறந்து ஆகஸ்ட் மாதம் 30, ஆம் தேதி 2001ஆம் ஆண்டு  காலமானார். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபீர்ஸ்தலம் சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மகனாவார்.  நில உச்சவரம்பு சட்டத்தில் பாதிக்காத ஒரே பண்ணையார். உடன் பிறந்தோர் அறுவர் – சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தாளம்மாள், சுலோச்சனா அம்மாள். மனைவி கஸ்தூரி.

தமிழ்நாட்டில் சட்டபேரவைக் காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றியவர் கூட்டணி குறித்து கருத்து வேறுபாடால் ஒரு மாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார். அவர் புரவலராக -தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கத்திலும். தலைவராக சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டக சாலையில் 1956-1972 லும்.   திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபையில் 1980-2001, வரை 

தஞ்சாவூர் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி 1965-1975,   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980. பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988 தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989

தமிழ்நாடு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் 1989-1990 நாடாளுமன்ற  ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989 தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் 1996-2001

ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் என அவரது பணி கடந்துள்ளது . இந்த நிலையில் மேலும் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற இந்திராகாந்தி ஆதரவு பெற்றவர் .அவர் மறைந்த பிறகு இங்கு காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி தலைவர் என்ற நிலையில் காலஞ்சென்ற ஜி.கருப்பையா மூப்பனாரின் நினைவிடத்திலும்

அடுத்து காலை 10:30 மணி அளவில் கர்மவீரர் ர் கு.காமராஜர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தடைந்த  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரவேற்றனர். ஆனால் அதில் கூட்டணி கட்சி பலரும் பங்களிப்பு செய்து நிர்மலா சீதாராமன் முன் நிறுத்தப்பட்டார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி டம்மியாகவே தெரிந்தார்.இந்த நிலையில் நிகழ்சியில் கீழிருந்த முன்னாள் தலைவர் அண்ணாமலையை. அழைத்து "அண்ணாமலை இங்க வாங்க..." தனது பேச்சை முடித்த பின் மேடையில் ஓரமாக தள்ளி நின்ற அண்ணாமலையை அருகில் அழைத்து நாற்காலியில் அமரச் சொன்னார் நிர்மலா சீதாராமன்.!  பேசி முடித்த போது"உங்கள் அனைவரிடமும் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும் தொண்டை ஆற்ற வேண்டும். சின்னச் சின்ன உட்பூசல்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்!'' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு.  அரசியல் களத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அமமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் தனியே உள்ள நிலையில் இது திமுக கூட்டணிக்கு சாதகமான நிலை தான் எனலாம். நிர்மலா சீதாராமன் தேர்தலுக்கான முகம் இல்லை ஆனால் தேர்தல் முடிந்த பிறகு நடக்கும் முதல்வருக்காண முகம் என்பதை தெரிவிக்கும் நிகழ்வு தான் கருப்பையா மூப்பனார் நினைவு அஞ்சலி.                                              பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முகமாக அறியப்பட்ட  நாகாலாந்து மாநிலத்திற்கு  ஆளுநராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனின் இறுதி சடங்கில் பங்கேற்காததற்கு அவரது குடும்பத்தினரிடம் 100 முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் -என  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போதோ இறந்த மாற்று கட்சி பிரமுகர் கருப்பையா மூப்பனார் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் அரசியல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...