இந்தியப் பொருட்களுக்கு
25 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு
காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் தொடர்ந்து வாங்குவதற்கு தண்ட வரியுடன், அமெரிக்கா முதன்முதலில் "இரண்டாம் நிலை வரிகளை" பயன்படுத்தியது - ஏற்கனவே பலவீனமடைந்து வரும் இந்திய - அமெரிக்க உறவை மேலும் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை இது ஏற்படுத்துகிறது.
இந்தியா தனது வாகன பாகங்கள், எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் மீதான டிரம்பின் முந்தைய வரிகளுக்கு பதிலடி கொடுப்பதைத் (சீனாவின் பாதையை) தவிர்த்து, பேச்சுவார்த்தை பாதையை தேர்ந்தெடுத்தது. ஆனால் இந்தியாவின் மிகவும் பரந்துபட்ட மற்றும் வேகமாக விரிவடையும் சந்தையில் அமெரிக்க பொருட்களுக்கான அதிலும் முக்கியமாக விவசாய பொருட்களுக்கான தடையற்ற அணுகலை அனுமதிக்க வாஷிங்டன் அழுத்தம் தருவதால், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஸ்தம்பித்துள்ளது.
கடந்த முறை வாஷிங்டனில் பியூஷ் கோயல் தலைமையிலான அமைச்சர் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றாலும் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் புதுதில்லியில் நடைபெறும் தடையற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோனால்ட் டிரம்ப்பின் இரண்டாவது அதிபர் அதிகாரத்தில் இந்தியாவின் மீது ஏன் இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பதற்கான சரியான புரிதலாக நான் பார்ப்பது :
மேலும் ஒரு வலுவான நாடு அதுவும் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் மிக வலுவான நாடாக இந்தியா உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை. சோவியத் ரஷ்யாவை அடக்க வழியைத் தேடி ஓரளவிற்கு அதில் வெற்றியும் பெற்றபோது பொருளாதார வலிமை மூலம் மிகப் பெரிய வலிமை வாய்ந்த நாடாக சீன நிற்கிறது. அதை சமாளிக்க வேண்டும். அடுத்து இந்தியாவும் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியின் மூலம் இந்தியா வலிமையான நாடாக உருவாவது அமெரிக்காவிற்கு தலைவலியை கொண்டு வரும் என்று வாஷிங்டன் நினைக்கிறது.
நமது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் வம்படியாக "மல்டி போலார் உலகம்" என்பதை எல்லா மேடையிலும் எடுத்தாள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. முன்பெல்லாம் இந்தியாவை ஒரு பொருட்டாகவே மேற்கத்திய நாடுகள் மதிப்பதில்லை. ஆனால் தற்போதைய இந்தியா என்னும் புதிய பாரதத்தின் எழுச்சி அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது. மல்டி போலார் உலகம் என்பதை அமெரிக்கா தனது வலிமைக்கு விடப்படும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது என்பது தான் நம் புரிதல்.. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், மற்றும் ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும் நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்தது
அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :
அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்
ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்
ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ
பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்
காஞ்சன் பாலிமர்ஸ் ஆகும்
கருத்துகள்