முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் அரசு ரப்பர் கழகத்தில் ரூபாய்.1 கோடி அளவில் முறைகேடு
கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் செயல்முறையில் ரூபாய்.1 கோடி அளவில் ஊழல் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசு ரப்பர் கழக சிற்றார் பிரிவில் உள்ள முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை சார்பாக டெண்டர் அறிவிக்கப் பட்டது. தொடர்பாக நடந்த மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் அரசு ரப்பர் கழக மேலாண்மை இயக்குநர் தினகர் குமார் தலைமை யில் மரங்களின் நியாய விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஏலம் மற்றும் டெண்டர் செயல்மு றையில் பல முறைகேடுகள் நடந்ததாக தகவல் வருகிறது.
டெண்டர் செயல்முறையை பதிவு செய்ய பயன்படுத்தப் பட்ட வீடியோ கேமரா, மேலாண்மை இயக்குநர் தினகர் குமாரின் உத்தரவின் படி மாலை 3.30 மணியளவில் அணைக்கப்பட்டது. அதனால், ஏலம் மற்றும் டெண்டர் நிகழ்வுகளின் காணொளிக் காட்சி பதிவுகள் இல்லை, இது டெண் டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மீறுவதாக உள் ளது. டெண்டர் அட்டவணையில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு, அவை முறையாக அங்கீகரிக் கப்படவில்லை.
மேலும் சாம் பெனட்ச தீஷ் என்பவர் கூப் எண் 49 பிட்-2-ல் ஒரு மரத்திற்கு ரூபாய்.4,100 மற்றும் பிட்-9-ல்
கர் குமார், சி.எட்வின்துரை ரூபாய்.3,700 மதிப்பு காட்டியிருந்த நிலையில், அவை முறைகேடாக மாற்றப்பட்டு ரூபாய்.3,000 மற்றும் ரூபாய் 2,000 ஆக குறைக்கப்பட்டது. இதனால், மற்ற ஒப் பந்ததாரர்களுக்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. கூப் எண் 22 பிட்-2 மற்றும் 49 பிட்-8-ல் குறைவான மதிப்பு அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் தின என்பவரிடம் கூப் எண் 22 பிட்-1-ல் ஒரு மரத்திற்கு ரூபாய்.340 (மொத்தம் ரூ.3,14,160) மற்றும் கூப் எண் 23 பிட்-3-ல் ரூபாய்.460 (மொத்தம் ரூபாய்.4,54,480) லஞ்சமாகக் கோரியது தெரியவந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் கணக்கீடு மற்றும் காணொளிக் காட்சிப் பதிவு ஆதாரமாக உள்ளது. இதனால், குறைந்த விலையில் டெண்டர் ஒதுக்சுப்பட்டு, அரசுக்கு மொத்தமாக சுமார் ரூபாய்.1 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப் பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கன்னியாகுமரி ஊழல் தடுப்புக் கண்கா ணிப்பு மற்றும் லச்ச ஒழிப்புப் பிரிவு சார்பாக இந்திய தண்டனைச் சட் டப் பிரிவுகள் 167, 465, 468, 471, 477-ஏ, 409, 420 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 1988 (2018-இல் திருத்தப்பட் டவை) பிரிவுகள் 7(ஏ), ),7(), 7(சீ) 13(2) ஆர்/டபிள்யூ 13(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு ரப்பர் கழகத்தில் நடை பெற்றுள்ள முறை கேடுகள் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரியில் இயங்கும் "அரசு ரப்பர் கழகம் தமிழ்நாட்டின் இயற்கை ரப்பரை உற்பத்தி செய்யும் அரசு நிறுவனம். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்குகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், இலங்கையில் இருந்து வந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதிலும், இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இயற்கை ரப்பர் உற்பத்தி. இயற்கை ரப்பரை மூலப்பொருளாக விற்பனை செய்தல்.
செனக்ஸ் (Cenex) தவிர மற்ற அனைத்து வகை ரப்பர்களுக்கும் விலை நிர்ணயம் செய்தல். ஆகிய பணிகள் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல்.
இலங்கையில் இருந்து திரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தல். முக்கியமாகிறது.


























கருத்துகள்