குடியரசுத் தலைவர் எழுப்பிய வினாக்கள் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் கிடைக்கும்
உச்சநீதிமன்றம் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்து தொடா்பாக
குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் நவம்பர் மாதம்.21-ஆம் தேதிக்குள் தீா்ப்பு: மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடா்பாக குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீா்ப்பு வழங்கப்படுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தகவல்.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது வெள்ளிக்கிழமை அவா் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு இரண்டு மனுக்களாக கும்பகோணம் கலைஞா் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
கும்பகோணத்தில், கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான சட்ட மசோதா, ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாடு முதல்வர் இருப்பாா் எனவும் இணைவேந்தராக உயா் கல்வித்துறை அமைச்சா் செயல்படுவாரென்றும், மேலும் தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தா் நியமனம் செய்யப்படுவாாரென்றும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநா் ஆா்.என்.ரவி இந்தச் சட்ட மசோதாவை குடியரசு தலைவா் முடிவுக்காக உரிய காலத்தில் சட்டப்படி அனுப்பி வைத்தாா்.
அதே போல உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் குறித்து சட்ட மசோதாவையும் ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் அதை எதிா்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.
துணைவேந்தரை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரங்களை வேந்தருக்கு அதாவது ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2004-ன் சில விதிகளைத் திருத்துவதற்கான மசோதாவாகும் இது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் சட்டச் சிக்கல் உள்ளதாக ஆளுநா் ஆா்.என். ரவி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பினாா்.
இந்த நிலையில், ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு 2 மனுக்கள் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்கி, நாடாளுமன்ற பாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோா் வாதிடுகையில், ‘சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க முகாந்திரமில்லை. ஆளுநா் ஒரு நீதிபதியைப் போல ஒவ்வொரு மசோதாவையும் ஆராய முடியுமா?, ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல’ என்றனா்.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கின் தீா்ப்புக்காக காத்திருங்கள். நீங்கள் 4 வாரங்கள் கூட காத்திருக்க வேண்டியதில்லை. நவம்பர் மாதம்.21-ஆம் தேதிக்கு முன் தீா்ப்பு வழங்க வேண்டும். (உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நவம்பா் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பா் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவருக்கு பணி இறுதி நாள்). நாங்கள் இப்போதே ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்தாா்.
மத்திய அரசின் வழக்கறிஞா் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘2015 முதல் 2025 வரை நாட்டிலுள்ள அனைத்து ஆளுநா்களும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்த மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 381. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆளுநா்கள், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது வழக்கமாகத்தானிருந்து வருகிறது. அதுதான் அவா்களது பணி’ எனத் தெரிவித்தாா்.
பின்னா், நீதிபதிகள், குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் தீா்ப்பு வரும் வரை பொறுத்திருங்கள். அந்தத் தீா்ப்புக்கு பின்னா் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனா். நேற்று விசாரணையின் போது தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியதாவது:
மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பளித்தது; இத்தீர்ப்பு மீது குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணை முடிவடையவில்லை.
குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணையின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரணை குறித்து முடிவு செய்யலாம்
என்னுடைய பதவிக் காலம் இன்னும் 4 வாரம்தான் இருக்கிறது; அதற்குள் வழக்கில் முடிவு தெரியும். எனத் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய், தாம் ஓய்வு பெற இருப்பது தொடர்பாக தமிழக அரசு வழக்கில் தெரிவித்திருக்கும் கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில், ” தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பல்வேறு விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் ஓய்வு பெறுகிற நவம்பர் மாதம் 23- ஆம் தேதி வரை பெரிய அளவுக்கு திமுகவுக்கு நெருக்கடி தந்து சட்டச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால், பிஆர் கவாய் ஓய்வு பெற்ற பின், சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக திமுகவுக்கு எதிரான பல வழக்குகள் வரிசைகட்டத் தொடங்கிவிடலாம்; திமுகவின் மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல.. முதல்வர் வரை ஊழல் மற்றும் நிலுவை வழக்குகள் நடவடிக்கை வரலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வழங்கியது.
ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசனக் கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மே மாதம் 15ஆம் தேதி அனுப்பிருந்தார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 ன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?. இந்தத் தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கும். இதன் முடிவே மற்ற வழக்கில் தீர்வு வரும்.







கருத்துகள்