சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சக்திவேல். இரண்டு மாதங்களுக்கு முன்,
அரசின் குடும்ப விநியோகம் செய்யும் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டதால், சேலம் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால பிணையில் வந்தவர், அரிசி கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருக்க, பதிலுக்கு லஞ்சமாக என்ன தான் செய்ய வேண்டுமென், குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு 'மாதந்தோறும், 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' எனக் கூறியுள்ளனர். குடிமைப் பொருள் அரிசி கடத்தலுக்கு ரூபாய்.15,000 மாத லஞ்சம்: ஆய்வாளர் உள்ளிட்ட நால்வருக்கும் பேசி முடித்தனர்.
இந்த நிலையில் பணம் தர விரும்பாத சக்திவேல், சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அவர்கள் வழிகாட்டுதல்படி பினாப்தலீன் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட, 15,000 ரூபாயை, கொண்டலாம்பட்டியில் வைத்து தலைமைஅ காவலர் ராஜலட்சுமியிடம், (வயது 36), நேற்று மதியம் அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பணம் பெற்ற கையுடன் அவரைக் கைது செய்தனர். அவரிடம் மேலும் நடத்திய விசாரணை மூலம் ஆய்வாளர் இராமராஜன், (வயது 50), சார்பு ஆய்வாளர்கள் சரவணன், (வயது 37), இராமகிருஷ்ணன், (வயது 38(, ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அலுவலகத்திலிருந்த மூவரையும் கைது செய்தனர்.

கருத்துகள்